குடி குடியை கொடுக்கும்
என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா? தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற. யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம். கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது. […]