
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம்.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் வங்கிக்குத் திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி இரு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமளவில் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டதால் பணமதிப்பிறக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது. வங்கி இருப்பில் கொண்டுவரப்படாத ரூபாய் நோட்டுகளை செல்லாதனவாக செய்வது மட்டுமே ஒரே குறிக்கோளாக பணமதிப்பிறக்கம் மேற்கொள்ளப்பட்டதா? நிச்சயமாக இல்லை. வரியை ஏய்க்கும் நாடாக இருந்ததில் இருந்து வரிப்பணத்தை சரியாக கட்டும் மக்களைக் கொண்ட நாடாக மாற்றுவதே இத்திட்டத்தின் பெரிய நோக்கமாகும். பொருளாதார ஒழுங்குபடுத்துதலையும் கறுப்புப் பணத்திற்குப் பெரிய அடியையும் இத்திட்டம் கொடுத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது?
- ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தும் பொழுது ரொக்கத்தை செலுத்துபவர் யார் என்று தெரிந்து விடுகிறது. செலுத்தப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவருவதால் தொகையை வங்கியில் செலுத்துபவரின் பண இருப்பு அவர் வருவாய்க்குத் தகுந்தாற் போல் உள்ளதா என்பதை பற்றி விசாரணை மேற்கொள்ள முடிந்தது. அதனால் பணமதிப்பிறக்கத்திற்குப் பிறகு 1. 8 மில்லியன் வைப்பாளர்கள் இந்த விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். பணம் செலுத்தியவர்கள் பலருக்கும் வரி விதித்து, வரி கட்டாமைக்கான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. நிறைய பணம் வங்கிக்கு செலுத்தப்பட்டதனால் அது வரி கட்டப்பட்டப் பணம் என்று பொருளல்ல.
- மார்ச் 2014ல் வருமான வரியை செலுத்தியவர்கள் 3.8 கோடி பேர்கள். 2017-18ல் இந்த எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளது. போன இரண்டு வருடங்களில் பண மதிப்பிறக்கத்தின் தாக்கத்தையும் அதன் பின் எடுத்தப் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் வருமான வரி செலுத்துதல் 19%ம், 25%ம் உயர்ந்துள்ளது. இது தனிச் சிறப்புடைய அதிகரிப்பு.
- போன இரண்டு வருடங்களில் பண மதிப்பிறக்கத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி கணக்குகள் 85.51 லட்சத்தில் இருந்து 1.07 கோடி எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.
- 2018-19 வருட முதல் காலாண்டுக்கு, முன் வரி கட்டணம் தனிப்பட்ட வருமான வரி மதிப்பீடுகளுக்கு 44.1% உயர்ந்துள்ளது, நிறுவனங்களுக்கு 17.4%. உயர்ந்துள்ளது.
- வருமான வரித் தொகையின் வசூல் 2013-14ல் ‘6.38 லட்சம் கோடியில் இருந்து 2017-18 `10.02 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளது.
- பண மதிப்பிறக்கத்துக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வருமான வரித் தொகை வசூலின் வளர்ச்சி 6.6%, 9% மட்டுமே. பண மதிப்பிறக்கத்துக்குப் பிறகு வந்த இரண்டு ஆண்டுகளில் வருமான வரித் தொகையின் வசூல்,15% 18% அதிகரித்து உள்ளது, இதே வளர்ச்சிப் போக்கு மூன்றாம் வருடமும் தொடர்வது தெரிகிறது.
- ஜூலை1, 2017 முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்டது, அதாவது பண மதிப்பிறக்கத்துக்குப் பிறகு. முதல் வருடத்திலேயே பதிவு செய்யப்பட மதிப்பீட்டாளர்கள் எண்ணிக்கை 72.5% உயர்ந்துள்ளது. முதலில் இருந்த 66.17 லட்சம் மதிப்பீட்டாளர்கள் எண்ணிக்கை 114.17 லட்ச மதிப்பீட்டாளர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இது தான் பண மதிப்பிறக்கத்தின் மிக முக்கிய சாதகமான தாக்கம். முதல் இரண்டு காலாண்டுகளுக்குப் பிறகு பொருளாதார ஒழுக்கம் அதிகரித்துள்ளது, அமைப்பில் அதிகப் பணம், அதிக வருமான வரி வருவாய், அதிக செலவினம், அதிக வளர்ச்சி இவை யாவையும் அடைந்துள்ளோம்.
Translation of Mr Arun Jaitley’s (Finance Minister of India) Face Book post .August 30, 2018
~பல்லவி