போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.