பணம் எங்கே மனம் அங்கே

இது கலி காலம். இந்துக்கள் அனைவரும் நம்மை காக்க மீண்டும் அந்த இறைவன் கல்கி அவதாரம் ஏற்று வருவார் என்று ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கும் காலம். பாவம், அவர்கள் அறிய மாட்டார்கள் – அவர்கள் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு கல்கி இருப்பதை. இன்னல் படுத்தும் இகழ்ந்தோரை இமைப்பொழுதில் காத்திட இக்கணமே இறைவன் வருவான் என்று கூறினால் இன்று இவ்வுலகிற்கு வருகை தந்த குழந்தை கூட பல் இளிக்கும் இந்த கலியுகத்தில் […]

மோடியின் ஆசி பெற்ற ட்ரம்புக்கே உங்கள் வாக்கு..

தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் சுவர் விளம்பரங்களில் தவறாமல் இடம் பெறும் வாசகம் – புரட்சித் தலைவரின் ஆசி பெற்ற, கலைஞரின் ஆசி பெற்ற, அம்மாவின் ஆசி பெற்ற —  இதாவது பரவாயில்லை, கட்சித் தலைவர்களுக்கு ஒவ்வொரு வேட்பாளரையும் தெரியும், கூட்டணி வைத்திருப்பதால் இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கும் – அன்னை இந்திராவின் ஆசி பெற்ற, ராஜீவ் காந்தியின் ஆசி பெற்ற, அன்னை சோனியாவின் ஆசி பெற்ற —  சரி, என்ன செய்யறது… […]