பரீட்சைக்கு நேரமாச்சு

நம்ம வாத்தியார் ரொம்ப நாளா சொந்த வீடு கட்டணுமுன்னு ஆசைப்பட்டாருங்க.  வாயக் கட்டி வயத்தக் கட்டி ட்யூஷன்லே பசங்களைக் கட்டி ஒரு வழியா வீட்டைக் கட்ட ஆரம்பிச்சாரு. எஞ்சினியர்லாம் வெக்கல. நம்மாளே கணக்கு வாத்தியார்தானே, அதனால இவரே படமெல்லாம் போட்டு ஒரு மேஸ்திரியைப் பிடிச்சு நல்ல நாளாப் பாத்து வீட்டு வேலைய ஆரம்பிச்சார்.  பள்ளிக்கூடத்துல போயி கையெழுத்து போட்டுட்டு வீட்டாண்ட வந்திடுவாரு வேலைய கண்காணிக்க.   கடகால் தோண்டியாச்சு.  அஸ்திவார […]

புங்கமரத்து நிழலில் ஒரு காளை

ஒரு காளைமாடு புங்க மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தது.  ஒரு வாரமா அங்கேதான் நின்று கொண்டிருக்கிறது. காலமெல்லாம் பாரம் சுமந்து வண்டி இழுத்து ஓய்ந்து போன அதன் கால்கள் இப்போது அதன் உடலை சுமப்பதற்கே சக்தியில்லாமல் தொய்ந்து போயிருந்தன.  இனிமேல் இதனால் பிரயோஜனம் இல்லையென்பதால் சொந்தக்காரன் அந்தக் காளையை விரட்டி விட்டான்.   அப்போது அந்த மரத்தின் அருகே வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சீப்பு […]

மூக்கணாங்கயிறு

ரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ.  பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க? அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும்.   மொள்ள நம்ம கணேசு எழுந்தான்.  “பாட்டையா,  நேத்தைக்கு என்ன ஆச்சு […]

ட்ரிங் ட்ரிங் – கடைசி மணியா? பகுதி-2

ட்ரிங் ட்ரிங் – ஆஹா இந்த மணியொலிக்குத்தான் இன்னமும் எத்தனை ரசிகர்கள்!  இன்று கூடத் தங்களது மொபைலில் இந்த மணியோசையை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.  இந்த ஒலி நினைவூட்டுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே.   கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்ப்போம். இன்றக்கு இதன் குறைகளாகச் சொல்லக்கூடிய ஏராளமான ஊழியர்கள் என்பது திடீரென்று இந்த வருடம் சேர்ந்தவர்களில்லை.  ஆரம்ப காலத்திலிருந்தே இத்தனை ஊழியர்களும் இருந்தார்கள். அப்புறம் ஏன் இப்போது மட்டும் நஷ்டம்? […]

கார்ப்பொரேட்டை ஒழிப்போம்!

சமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? இதுல முக்கியமான இன்னொரு […]

ட்ராஜெக்டரி என்றால் என்ன?

ட்ராஜெக்டரி என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? சரி. முதலில் ட்ராஜெக்டரி என்றால் என்ன என்பதை பார்ப்போம். பிறகு விஷயத்திற்கு வருவோம். ட்ராஜெக்டரி என்பது நமது நகர்வு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை ஆகும். உதாரணத்திற்கு நாம் திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். திருச்சி நமது ஆரம்பப் புள்ளி. சென்னை கடைசிப்புள்ளி. இவை இரண்டு புள்ளிகளுக்கிடையே எவ்வளவு கால அளவு இருத்தல் வேண்டும் என்று நிர்ணயம் […]

சந்திராயன் : அந்த சில நிமிடம்

இன்னும் சில மணித்துளிகள் தான் என்று காத்திருந்த நமக்கு இதோ வந்தே விட்டது அந்த சில மணி துளிகள். விக்ரம், இன்னும் சிறிது மணித்துளிகளில் தரை தொட்டு விடும். தரை என்று சொல்வது சரியா? புவியிருப்பு சக்தி இருந்தால் தானே அது தரை? இங்கு தான் புவியிருப்பு இல்லையா? நிலவிருப்பு இருக்குமோ? இருக்கட்டும். ஆம், விக்ரம் நிலவில் கால் பாதிக்கும் நேரம், அதோ, அங்கே நீல வானிலிருந்து பல தூய […]

ஊரு சுத்தும் மோடி! இந்தியா பக்கம் வாடி!

திரைகடலோடியும் திரவியம் தேடு! இது யாருக்கு சொன்னாங்களோ தெரியாது. நம்ம பிரதமர் மோடி திரவியம் தேடுறாரா தெரியாது, ஆனா என்னமா ஊரு சுத்துறாரு, பார்ரா! மனுஷன் நம்ம வரி பணத்துல இது வர 55 வாட்டி வெளிநாடு போய் வந்திருக்காரு! அதுல ரஷ்யாவுக்கு மட்டுமே 4 தடவைபோய் வந்திருக்காரு! அப்படி ரஷ்யால மனுஷன் பண்ணது என்னவா இருக்கும்? கிழக்கு பொருளாதார மன்றம் (Eastern Economic Forum, EEF) இந்த EEF […]

ட்ரிங் ட்ரிங்க் – கடைசி மணியா?

பி எஸ் என் எல் –  இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் ஆழ்த்தி விட்டார், இழுத்து மூடப் போகிறார்,  அம்பானிக்கு சாமரம் வீசுகிறார் –  அரசு துறைகளை இழுத்து மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்,  நாட்டையே தனியார் கார்ப்பொரேட்டுகளுக்கு விற்று விடுவார் – இப்படியெல்லாம் பிரதமர் மோடியைப் பற்றிய ஒரு குற்றச்சாட்டு நடமாடிக் கொண்டிருக்கிறது.  ஆச்சரியம் என்னவென்றால்  கம்யூனிஸ்டுகள் தவிர இந்தக்   குற்றச்சாட்டுகளை வீசுபவர்கள் யாரென்று பார்த்தால் அது தமிழ்நாட்டு மீம்ஸ் […]