கண்கவரும் கம்யூனிஸம்

கம்யூனிஸம் —  தமிழிலே பொதுவுடைமைத் தத்துவம்.  இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் அரசியல் கொள்கை.  கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பருவத்தில் கனத்த கதர் குர்தா, ஜீன்ஸ் அல்லது பைஜாமா, தாடி, தோளிலே ஒரு ஜோல்னா பை,  அதற்குள் சித்தாந்த புத்தகங்கள், ஒரு அறையில் பக்கத்து கடையிலிருந்து வரும் டீக்கு நடுவே சித்தாந்த வேற்றுமைகள், உழைப்பாளர் உயர்வு, முதலாளித்துவ ஒழிப்பு போன்ற உயரிய விஷயங்களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதம்,  ரத்தத்திலே ஊறிய போராட்ட குணம், […]

மகாபலிபுரம் சந்திப்பும் தேசத்தின் வளர்ச்சியும்

சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.   கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு  பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம். ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல […]

நாடகம் தொடர்கிறது

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே — மதுரை வீரன் படத்தில் எம் ஜி ஆர் பாடும் பாட்டு. இதுதான் ஞாபகத்துக்கு வருகிறது உங்களது அறிக்கையைப் பார்த்ததும் திருமா அவர்களே. “பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபயா ராஜபக்சே இந்தியாவுக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு தன் அழைப்பைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் […]

சுத்தம் சோறு போடும்..

கழிவுகள் அகற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையாகும். எந்த ஒரு அரசு திட்டமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடைபெறும் போது அது தோல்வியையே சந்திக்கிறது. மக்களின் பங்களிப்போடு செயல்படும் அரசின் திட்டங்களும் மற்றும் தனியார் அமைப்புகளின் பொது நலன் திட்டங்களும் நல்லதொரு வெற்றியை சந்திக்கின்றன என்பதற்கு பெருமளவில் உதாரணங்கள் பல்வேறு காலகட்டங்களிலும், பல்வேறு அரசாங்கங்களிலும் காணக் கிடைக்கின்றன. கழிவுகள் அகற்றுவதில் மக்களின் பங்களிப்பு என்பது தனிமனித […]

ஷா பூ த்ரீ

ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் அவர்களின் பெயர் இல்லை என்று ஒரு சேனலின் பேட்டியில் எழுப்பப்பட்ட விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.   ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் இருந்தார் என்பது உண்மை. ஆனால் அவர் மிசா சட்டத்தில்தான் கைதானாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக கைதானாரா? என்பதுதான் கேள்வி.  மிசாவில்தான் கைதானார் என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை ஆதாரமாகக் காட்டினார்கள். பிறகு அமெரிக்காவின் விக்கி லீக்ஸை […]

அரசனை நம்பி….

பழமொழின்னு கிண்டல் செய்யறோம், ஆனா அதுல இருக்க ஆழமான அர்த்தம் எதுலயுமே கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட மாதிரின்னு பழமொழி சொல்வாங்க.  அதாவது ராஜபோக வாழ்க்கையைத் தருவான்னு நம்பி கணவனைக் கைவிட்டு அரசன் பின்னாடி போனாளாம் ஒரு பெண். கடைசியில் அரசனும் கைவிட, புருஷனும் ஏற்றுக் கொள்ள மறுக்க, நட்டாற்றில் நின்றாளாம். ஒருவேளை இது தமிழ்ல இருக்கறதால உத்தவ் தாக்கரேக்கு தெரியல போலிருக்கு. மும்பைலதான் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்காங்களே, […]

ஒத்த செருப்பு – போதுமே!

“கோடையில் ஒருநாள் மழை வரலாம், என் கோலத்தில் இனிமேல் எழில் வருமா?” என்று பாடினார் ஜெமினி கணேசன். ஆனா எழில் வந்ததோ இல்லையோ கடைசீ காலம்வரைக்கும் எழில்மிகு சுந்தரிகள் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.  அது மாதிரி தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல என்பார்களே அது மாதிரி, இல்லேன்னா அத்திவரதர் தரிசனம் தந்தா மாதிரி, தப்பித் தவறி நல்ல படம் வெளியாகிவிடுகிறது. அப்படி ஒரு படம்தான் ரா.பார்த்திபனின் ஒத்த […]

திருவள்ளுவரைக் காப்போம்

திருவள்ளுவரைப் பற்றி எல்லாருமே பல விதங்களிலே எழுதிட்டாங்க.  இதுக்கு மேல நாம என்னா எழுதறதுன்னு நினைச்சேன். சின்ன வயசுல வேதாள மாயாத்மா (அதாங்க ஃபேண்டம்) காமிக்ஸ் படிச்சவங்களுக்குத் தெரியும்  “ இரண்டு கண்களை விட நான்கு கண்கள் பெரியது” — கானகப் பழமொழி. அதனால நாமளும் எழுதலாமேன்னு ஒரு எண்ணம்.   திருவள்ளுவர் உலகத்துக்கே பொதுவானவர், அவரை ஒரு மதத்துடன் அடையாளப்படுத்துவது தவறு – இதுதான் எதிர்ப்பாளர்களின் ஒரே கோஷம்.  […]

சுபஸ்ய சீக்கிரம்

ஸ்ரீராமஜெயம் –  இப்படித்தான் நாம் திருமணப் பத்திரிக்கைகளைத் துவங்குவோம்.  கலியுகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செல்வம், வெற்றி என அனைத்தையும் தர வல்லது ராமமந்திரம் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.  வேடனாக இருந்த வால்மீகியை ரிஷியாக புனிதராக மாற்றியது ராம நாமமே என்பதை இந்த உலகறியும். பகவனின் ஒன்பது அவதாரங்களில் ராம அவதாரமே  மனிதனுக்கு நெருக்கமானது, ஏனென்றால் ராமாவதாரத்தில் மட்டுமே ஸ்ரீராமன் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக் கொள்ளாமல் மனிதனாகவே வாழ்ந்தான். அதனால்தானோ […]

வென்றது ராம ராஜ்யம்

9/11. இது அமெரிக்க வரலாற்றுக்கு மட்டுமல்ல இந்திய சரித்திரத்திலும் ஓர் மிக முக்கிய நாள். ஆம்,  அவர்களுக்கு செப்டம்பர் 11, நமக்கு நவம்பர் 11. நமக்கு சொந்தமான ஒன்றை, இந்த நிலத்தை அபகரித்த கயவர்களிடம் இருந்து அறப்போர் வழியில் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே நிலம், நம் இந்திய நிலம் மட்டுமே. அப்படிப்பட்ட நிலத்தில், அந்த பெரும்பான்மையான இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற வாசலை […]