பூ நாகம்

பூ நாகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  நிறைய கதைகளிலும் சில திரைப்படங்களிலும் கூட இது தலைகாட்டியிருக்கிறது.  பூமாலைகளில் மிகச்சிறியதான இந்தப் பாம்பு ஒளிந்திருக்குமாம், இது கடித்ததென்றால் உடனே மரணமாம்.  ஆனால் இன்று வரைக்கும் இதை யாரும் பார்த்ததில்லை. ஒருவேளை கடல்கன்னி போல இதுவும் கற்பனையாக இருக்கலாமோ? சரி,  இதை அப்படியே வெச்சிக்குங்க.  இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம்.  நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா? அதாவது நாம […]

கார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை

கல்யாண மேடை நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.  சொல்லுங்க, உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்?   நாங்க எஞ்சினியர் ஜாதிங்க.  எங்க பொண்ணு ஐ டி எஞ்சினியர். மாப்பிள்ளையும் எஞ்சினியர் ஜாதியிலே ஐ டி பிரிவா வேணுங்க.   நல்லதுங்க. நீங்க எதிர்பாக்கற மாதிரியே  நல்ல மாப்பிள்ளை எஞ்சினியர் ஜாதியிலேலே கிடைப்பாரு. கல்யாண மேடை நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.   இதெல்லாம் ஏதோ அதீத கற்பனைன்னு நினைக்காதீங்க.  அடுத்த […]

திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..

திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் […]

“காவி”ய நாயகன்

என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே? ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா? என்ன தப்புனு நினைக்கிறீங்க? ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்? எத்தனை வருசமா […]

வசூல் சக்ரவர்த்தி?

எப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க.  இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம்.  […]