மார்கழித் திங்கள் – 4

“மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா’ வழக்கமாக அரசன் மந்திரியைப் பார்த்து கேட்பதாக கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்த காலத்துல மாசத்துல மூணு தடவை மழை பெஞ்சிருக்கும் னுநினைக்கறேன், இப்போல்லாம் வருஷத்துக்கு  மூணு மழை பெய்யறதே பெரிய விஷயமாயிருக்கு. சமீப காலமாக, குறிப்பாக திரு.ரமணன் வந்த பிறகு புதுசா ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டோம். “வெப்பசலனம்” காரணமாக மழை பெய்ததுன்னு சொல்லுவார். அதென்னங்க வெப்பசலனம்? அதுக்கு மழை எப்படிப் பெய்யுதுன்னு தெரிஞ்சுக்க்கணும். […]