
இன்று சுதந்திர தினம், காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, கர்வத்துடன் பட்டொளி வீசி பறந்திடும் எந்தன் மூவர்ண கொடி.
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆயினும், நித்தமும் இன்னல்களை சந்தித்து கொண்டிருந்தாள் எனது தாய்.
என்றோ எவரோ செய்த தீங்கினால் இன்று வரை, அவளுக்கு தீராத தலைவலி.
ஒருவழியாய் அமித்ஷா என்ற பெயரில் வந்தது அமிர்தாஞ்சன்.
வந்தார், கண்டார், வென்றார்.
எத்தனை காலம் தான் பிரிவினைவாதிகளிடமும் தீவிரவாதிகளிடமும் பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது? அதனால் கண்ட பலன் தான் என்ன?
நூறு கோடிக்கும் மேல் மனித வளம் கொண்ட இந்திய நாட்டில், ஒரு சிறு கூட்டம், சில லட்ச குடிமக்களை பிணய கைதி போன்று வைத்து தங்கள் சுயலாபத்திற்காக அனைத்து மக்களையும் வதைத்த வண்ணம் இருந்தனர்.
இதோ, அதற்கு ஒரு விடிவு காலம் இனிதே பிறந்து விட்டது.
கடந்த காலத்தில் நடந்த ஒரு மிக பெரிய வரலாற்று பிழை இன்று திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டு மீண்டும் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வுகளை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கும் போது, சில புல்லுருவிகள் இதை எதிர்த்து குரல் எழுப்ப தான் செய்கின்றது.
எதிர்ப்பது யார் என்று சற்றே கூர்ந்து நோக்குங்கள்.
ஒன்று, நமது அண்டை நாடான பாகிஸ்தான்.
அதை நாம் புரிந்து கொள்ள முடியும். 70 ஆண்டு காலமாய், காஷ்மீர் என்ற சாக்லேட் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருந்த குழந்தைக்கு இன்று அது இனி சாத்தியமில்லை என்று புரியவைத்தாயிற்று.
அதுவும் எப்படி? நன்கு உரைக்குமாறு உச்சி மண்டையில் குட்டி உணர்த்தியாயிற்று.
பாவம், சிறிது நாட்கள் அழுது புலம்பிவிட்டு அயர்ந்து உறங்க துவங்கிவிடும்.
தனக்கு ஒரு கண் பழுதாகினும் பரவாயில்லை, இந்தியாவிற்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று வஞ்சனையுடன் இருந்த பாகிஸ்தான் இன்று தன் இரு கண் மட்டுமல்ல, ஏனைய பல பாகங்களும் பாதித்த வண்ணம் கேட்ப்பாற் அற்று கிடக்கிறது.
இருக்கட்டும், இனியாவது புத்தி தெளிந்து நடந்து முன்னேறினால் நன்று. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும், பாகிஸ்தான் தன் நிறம் மாறாது. இருப்பினும், அது மாற எனது வாழ்த்துக்கள்.
சரி, இனி மற்ற புல்லுருவிகளை பற்றி பார்ப்போம்.
மற்றவர்கள் யார்?
நம் இந்திய நாட்டில் பிறந்து சுதந்திர இந்தியாவின் காற்றை சுவாசித்து, அதே இந்திய நாட்டிற்கு துரோகம் செய்ய துடிக்கும் கயவர்கள்.
யார் என்று உற்று நோக்கினால், அவர்கள் யாவரும் ஒன்று பிரிவினைவாதிகள், அல்லது மோடி என்ற ஒற்றை மனிதனை நேர்கொண்டு மோத திராணியற்ற கோழைகள் என அறியலாம்.
மீதம் உள்ளவர்களோ அவர்களுக்கு ஒத்து ஓதும் ஊடகங்கள்.
இவர்கள் இன்றும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை போலும். இப்போது இவர்களுக்கு உள்ள ஒரே கனவு, இந்தியாவின் அழிவு.
மோடி எனும் மனிதனை எதிர்க்க ஆரம்பித்த இவர்களது கயமை இன்று இந்த நாட்டினையே வெறுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதனால் தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க செயல்களின் காரணமாக காஷ்மீர் பற்றி எரியும் என்று காத்திருந்தனர். இல்லை இல்லை, பற்றி ஏரிய வேண்டும் என்று தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தனர்.
அது போன்று ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், ஐநா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக குரலெழுப்பும் என்ற நப்பாசையில் இருந்தவர்களுக்கு, சரியான நெத்தியடி.
அமெரிக்கா, ரசியா, சீனா முதற்கொண்டு அனைத்து நாடும் நம் இந்திய தேசத்திற்கு சாதகமாக இருப்பது இவர்களை போன்றவர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
எனவே தான் உண்மையில் காஷ்மீர் சாந்தமாக இருந்தாலும் தங்கள் அடிமைகளாகிய சில ஊடகங்களை கொண்டு பொய் செய்தி பரப்ப துவங்கினர்.
பிபிசி மற்றும் அல்ஜீரா போன்ற ஊடகங்கள் பொய்யாக ஒரு காணொளியை வெளியிட்டு இது காஷ்மீரில் நடந்தது போன்று வதந்தியை கிளப்பி மக்களை குழப்பி வன்முறைக்கு வித்திட்ட வண்ணம் இருந்தனர்.
ஆனால், இன்று இருப்பது எதையும் கண்டுக்கொள்ளாத கையாலாகாத ஆட்சி அல்லவே. இது நல்லவர்களுக்கு நல்லவனாக, வல்லவனுக்கு வல்லவனாக விளங்கும் மோடியின் அரசு.
அவ்விரண்டு செய்தி ஊடகங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பி அந்த காணொளியில் உண்மை தன்மையை நிரூபிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மடியில் கனமிருப்பதால், பதில் அளிக்க பயந்து வாய்மூடி கொண்டுள்ளது அந்த ஊடகம். சரி, இப்பொழுதாவது நன்மை தீமைகளை உணர்ந்தால் சரி.
எது எப்படியோ, நமது இந்திய அன்னையை காத்து அதன் குடிமக்களை நல்வழியில் கொண்டு செல்ல, ஒன்றல்ல இரண்டு தவப்புதல்வர்கள் கிடைத்தாயிற்று.
இந்த மகிழ்ச்சியுடன் இன்று பல வண்ணங்களில் ஒளிவீசும் நமது பாராளுமன்றத்தை காணும் போது, நம்மில் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே?
வாருங்கள், சுதந்திர தினங்களை கொண்டாடுவோம்.
அந்த தவப்புதல்வர்களை போற்றி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
ஜெய்ஹிந்து.