பச்சபுள்ளயா நீங்க?

தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்த் எதாவது தவறு செய்வாரா? அவர் மீது ஏதாவது குற்றம் சாட்ட முடியுமா? என்று எல்லா கட்சிகளும் ஆவலும் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் மீதான வருமானத் துறையின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றது  ரஜினிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படும் நிகழ்வாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று The Hindu பத்திரிக்கையில் வெளியான விரிவான செய்தியின் அடிப்படையில் ரஜினிகாந்த் கந்துவட்டி தொழில் செய்கிறார் என்று […]

சைக்கோ..

இது ஒரு மர்டர் மிஸ்டரி.  சாதாரணமா கொலைகாரன் யாருன்னு தெரியாம கண்டுபிடிப்பது ஒருவகை. இல்லைன்னா கொலைகாரன் யாருன்னு தெரியும், அவனை எப்படிப் பிடிக்கறான்னு காண்பிக்கறது இன்னொரு வகை, இது இரண்டாவது வகை.  கொலைகாரன் யாருன்னு மொதல்லயே தெரிஞ்சுடுது. நம்ம ஹீரோ எப்படி அவரைப் பிடிக்கறார்னுதான் கதையே.   ஆனா பாருங்க ஹீரோ எப்படியும் என்னைக் கண்டுபிடித்து வந்துவிடுவான்னு வில்லன் நம்புற அளவுக்குக் கூட ஹீரோவுக்கு அவர் மேலே நம்பிக்கை இல்லை.  […]

ப்ரூ பழங்குடியினர்..

சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து. ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன? மிசோரம் மாநிலத்தில் […]

எப்போது பொங்குவோம்?

pongal festival

பொங்கல் நல்வாழ்த்துகள் —  திடீர்னு ஒரு சந்தேகம், பொங்கல் என்பது தமிழர் திருநாள்னு சொல்றாங்க.  ஆனா கேரளா தவிர கிட்டத்தட்ட அஸ்ஸாம் முதல் பக்கத்துல இருக்க ஆந்திரா வரைக்கும் கொண்டாடும் பண்டிகையை எப்படித் தமிழர் திருநாள்னு சொல்லலாம்? ஆந்திராவில் இதைத் தெலுங்கர் பண்டிகைன்னு சொல்றதில்லை. கர்நாடகாவில் இதை கன்னடப் பண்டிகைன்னு சொல்றதில்லை. அப்புறம் இங்கே மட்டும் ஏன்? சரி, மொதல்லே பொங்க வைப்போம் —  மறுபடியும் ஒரு சந்தேகம். என்ன […]

மார்கழித் திங்கள் – 30

காதலிக்கறவங்களைக் கேட்டுப் பாருங்க எதுக்கு காதலிக்கிறீங்கன்னு? பட்டுனு பதில் வரும் – இதென்ன கேள்வி?  கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கறதுக்காக. ஆனா இன்னைக்கு கல்யாணம் பண்ணிட்டுன்னு சொல்றது கொறைஞ்சிட்டு வருது.  சேந்து சந்தோஷமா இருக்கறதுக்கு, அப்புறம் அதுவும் மாறி சந்தோஷமா இருக்கறதுக்கு அப்டீன்னு வரலாம். அதை விடுங்க, காதலிக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் கிஃப்ட் வாங்கிக் குடுக்கறதும், சர்ப்ரைஸ் குடுக்கறதும், ஒரே ஜாலியா இருக்கும்.  ஆனா கல்யாணம் ஆன பிறகு இதெல்லாம் குறைந்து […]

மார்கழித் திங்கள் – 29

நேற்று வரைக்கும் ஒருவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு விட்டு திடீரென்று இன்றைக்கு இன்னொருவரைத் தலைவன் என்று கொண்டாடுவது சரியா?  மறுபடியும் நாளைக்கே பழைய தலைவனைத் தேடிப் போய்ச் சேர்வது சரியா? என்ன வெட்கங்கெட்ட விளையாட்டு இது? ஆனால் இதையும் மக்கள் அங்கீகரிக்கிறார்களே?  அதுதான் கொடுமை.   நீ இங்கே இருந்தால் எனக்கே ஆபத்து என்று தலைவர் ஒருவரை வெளியேற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அப்படி வெளியே போனவன் மீண்டும் அந்தத் […]

மார்கழித் திங்கள் – 28

உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு.  ஆனா இப்போ உன் தலைவனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு படி போய் உன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரைக் காட்டு, உன்னை வேலைக்கு எடுக்கலாமா இல்லையா என்பதை யோசிக்கலாம் என்று கம்பெனிகள் சொல்லும் அளவுக்கு ஆகி விட்டது நிலைமை.  இனிமேல் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்தால் சமூக ஊடகக் கணக்கு […]

மார்கழித் திங்கள் – 27

இந்த சீனா இருக்கு பாருங்க,   டோக்லாம்லே ஊடுருவல் செய்து பல நாட்கள் நமது ராணுவமும் சீன ராணுவமும் எதிரெதிரே பதட்டத்துடன் இருந்த நிலை மறக்க முடியுமா?  சீனாவுடன் நட்புறவு பேண வேண்டியது அவசியம், சீனாவுடன் தகறாரு வேண்டாம் என இங்கே இருக்கும் சில சீன அடிமைகளும் அடிவருடிகளும் எலும்புத் துண்டுகளுக்கு விலை போனவர்களும் கூவியதும் நினைவிருக்கும். ஆனா  போன வருஷம் சீன அதிபர் இந்தியாவுக்கு வந்தார், நம்ம மகாபலிபுரத்துக்கு […]

மார்கழித் திங்கள் – 26

“மாதொருபாகன்” நினைவிருக்கிறதா?  பெருமாள் முருகன் என்ற ஒரு அறிவுஜீவி எழுதிய கதை.  கதை என்று நாம் சொல்கிறோம், ஆனால் இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்றுதான் அவர் ஆரம்பித்தார்.  இதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு வழக்கம் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதாவது குழந்தை இல்லாத பெண்கள் வருடத்தில் ஒரு நாள் அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருவிழாவின் போது  தங்களைப் பொதுவில் வைப்பார்களாம், அப்போது யார் வேண்டுமானாலும் […]

மார்கழித் திங்கள் – 25

தமிழ் இருக்கே மிகவும் பழமையான மொழி.  அதுலும் இந்தப் பழமொழிகள் இருக்கே அது ரொம்ப ரொம்ப அறிவார்ந்தது.  பழமொழின்னா என்னன்னு தெரியலயா? அதாங்க நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது வாலக் கொழச்சிக்கிட்டு  —– திங்கப் போகும்னு வீட்ல பெரியவங்க சொல்லுவாங்களே இதெல்லாம்தான் பழமொழி.   அதை விடுங்க.   மஹாபாரதத்துல துரியோதனனுக்கு எல்லாருமே கெட்டவங்களாத்தான் தெரிஞ்சாங்களாம். அது அவனோட சுழி.     கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து […]