நிரந்தர நம்பர் 2 ஆக இருந்த நெடுஞ்செழியன் — தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர். அவர் ஒரு முறை மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார் — ஒண்ணு ரெண்டு பஸ் மட்டுமே வெச்சிருக்கவங்களெல்லாம் லட்சாதிபதியாக இருக்கும்போது இத்தனை ஆயிரம் பஸ் வெச்சிருக்க அரசாங்கம் ஏன் எப்பவுமே கடனிலே ஓடிட்டிருக்கு என்றார். யோசித்துப் பாருங்கள் – தனியார் பஸ்ஸில் சாதாரணமாக இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள். கூட்டம் அள்ளும், ஆனால் குறித்த நேரத்துக்குச் செல்லும். […]