kashmir village

ஒரு கிராமத்துக் கதை சொல்லவா? கச்சரம்னு ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்துல மொத்தமே 40 குடும்பம். எல்லாமே சொந்தக்காரங்கதான். இதுல ஒரு குடும்பம் மட்டும் மத்தவங்களோட ஒட்டு உறவில்லாம தனியா இருந்தது. அப்போ ஒரு நாள் ஒரு பெரிய திருட்டு கும்பல் அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிது. பயந்து போன குடும்பம் உடனே சொந்தக்காரங்களை உதவிக்கு அழைச்சாங்க. அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டு உடனே ஒதவி செய்யறேன்னு ஆளுங்களையெல்லாம் அனுப்பி திருட்டுப் பசங்களைத் துரத்தி அடிச்சாரு. ஆனாலும் அந்தக் குடும்பத்தோட சொத்து, ஆடு மாடுகள் அப்புறம் கொஞ்சம் நில புலன் இதையெல்லாம் திருட்டு கும்பல் ஆட்டையப் போட்டுடுச்சி.

அதுக்கப்புறம் கிராமத்துல இருக்க எல்லா குடும்பமும் ஒண்ணா சேந்து பேசினாங்க. தனியா இருக்க குடும்பத்தைப் பாத்து தம்பீ நீங்க இனிமேலும் தனியா இருந்தீங்கன்னா எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. நீங்களும் எல்லாரோடயும் சேந்து வாழ்ந்தாதான் நாங்க இனிமே உதவி செய்ய முடியும்னு சொன்னாங்க. அந்த தனி குடும்பமும் ஒத்துக்கிச்சு. ஆனாலும் அந்தக் குடும்பத்துல இருக்க சில சில்லுண்டிப் பசங்க தகறாரு செஞ்சாங்க.

அப்போ என்ன செஞ்சிருக்கணும்? மூத்த தலக்கட்டும் அந்தக் குடும்பத்தோட மூத்த தலைவரும் ஒண்ணா சேந்து அடே சில்லுண்டிப் பயலுவளா, பெரியவங்க சொல்றதைக் கேட்டு வாயப் பொத்திக்கிட்டு இருன்னு அதட்டல் போட்டிருக்கணும். இல்லையா? ஆனா அந்த ஊருலே இருந்த மூத்த தலக்கட்டு ஒரு சரியான சோப்ளாங்கி. அது என்னா செஞ்சிடுச்சின்னா அந்தக் குடும்பத்துக்கு மட்டும் சில சலுகைகளை குடுத்திடுச்சி.

என்ன சலுகைகள்னா — கிராமத்துல இருக்க மத்த குடும்பங்கள்லாம் சம்பாதிக்கறதுல ஒரு பங்கை அந்தக் குடும்பத்துக்காக செலவு செய்யணும். ஆனா அந்தக் குடும்பத்தோட சம்பாத்தியத்தை யாரும் தொட முடியாது. கிராமத்துல இருக்க நெலத்தை அந்தக் குடும்பம் நெனச்சா வாங்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட நெலத்தை மத்த யாரும் வாங்க முடியாது. கிராமத்துல இருக்க நிலங்கள்லே அந்தக் குடும்பத்தை சேந்தவங்க எப்போ வேணும்னாலும் வேலை செஞ்சி கூலி வாங்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட நிலத்துல கிராமத்துல இருக்க மத்தவங்க வேலை செய்ய முடியாது. கிராமத்துல இருக்க மத்த குடும்பத்தோட பொண்ணுங்களை அந்தக் குடும்பத்தோட ஆம்பிளைங்க கல்யாணம் செஞ்சிக்கலாம், அவங்க சொத்துக்களை அனுபவிக்கலாம், ஆனா அந்தக் குடும்பத்தோட பொண்ணுங்களை கிராமத்துல இருக்க மத்த ஆம்பிளைங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவங்களோட சொத்துக்களை அனுபவிக்க முடியாது.

kashmir 370 35aரொம்ப காலமா இதை யாருமே கேள்வி கேக்கல. சும்மா இருந்தாலே மத்த குடும்பங்களோட சம்பாத்தியத்துல நல்லா அனுபவிச்சாங்க அந்தக் குடும்பம். அத்தோட விட்டுதா அந்தக் குடும்பம்? இந்த கிராமத்துக்கும் பக்கத்துல இருக்க கிராமத்துக்கும் ஏகப்பட்ட வாய்க்காத் தகறாரு. அந்தக் குடும்பம் என்னா செஞ்சிதுன்னா பக்கத்து கிராமத்தோட சேந்து மத்த குடும்பங்களைக் கொல்ல கொளத்துல வெஷம் வெக்கறது, வைக்கப்போரை கொளுத்தறதுன்னு கலாட்டா பண்ண ஆரம்பிச்சாங்க. என்னா சொன்னாலும் கேக்கல.

அத்தோட விட்டாங்களா? எங்க குடும்பத்து நிலத்தை வேற குடும்பத்துக்கு விட மாட்டோம்னு சொன்னவங்க, எங்கிருந்தோ வந்த திருட்டுப் பசங்களையெல்லாம் அவங்க வீட்டுல கூட்டி வெச்சிக்கிட்டாங்க. ஏண்டா இப்படி செய்யறீங்க? நம்ம குடும்பத்துல இருக்கவங்களை உள்ளே விட மாட்டேங்கறீங்க. திருட்டுப் பசங்களையெல்லாம் சேத்து வெச்சிக்கறீங்கன்னு கேட்டா நாங்க அப்படித்தான் செய்வோம். ஏன்னா இதுக்கெல்லாம் எங்களுக்கு இதுக்கு முன்னாட தலக்கட்டா இருந்த பெரிய மாமா அனுமதி குடுத்திருக்காருன்னு நக்கல் செய்யறானுங்க.

இத்தனை வருஷம் கழிச்சு தலக்கட்டா வந்த நாமகிரி மாமா பாத்தாரு. இவனுங்களை இப்படியே விட்டா நம்ம எல்லா குடும்பத்தையும் இவனுங்க ஒழிச்சு கட்டிடுவானுங்க அப்டீன்னு ஆளுங்களையெல்லாம் கூட்டிட்டுப் போய் இனிமே உனக்கு சலுகையும் கிடையாது, அதனால எங்களுக்கு சங்கடமும் கிடையாது. நீ உழைச்சாதான் இனிமே சாப்பாடு. ஓசியிலே மங்களம் பாடறதெல்லாம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டு பக்கத்து கிராமத்துலேர்ந்து வாலாட்டிக்கிட்டிருந்த திருட்டுப் பசங்களையெல்லாம் செம்மையா மொத்தி அனுப்பினாரு.

சும்மா இருப்பாங்களா சில்லுண்டிப் பயலுவ. பக்கத்து கிராமத்துக்காரன்கிட்டே வாங்கித் தின்னவனுக்கு பொறுக்கல. அய்யய்யோ எங்க குடும்பத்தை நசுக்கப் பாக்கறாங்களே. எங்களைக் காப்பாத்த ஆளே இல்லையான்னு பொலம்பினாங்க. நம்ம நாமகிரி மாமா சும்மா இருப்பாரா? திருட்டுப்பசங்களா இத்தனை வருஷமா மத்த குடும்பங்களை மட்டுமில்லாம உங்க குடும்பத்தையே ஆட்டையப் போட்டு யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா பணத்தைப் பதுக்கி வெச்சிருக்கவனுக்கு வாயப் பாருன்னு வாய்மேலயே நாலு போட்டாரு. அத்தோட அடங்கினானுவ.

இது வெறும் கற்பனைக் கதைதாங்க. வேற உள்குத்து எதுவுமே இல்லே. நீங்களா எதாச்சும் நினைச்சிக்கிடீங்கன்னா அதுக்கு வானரம் பொறுப்பில்லே.

One Reply to “முப்பத்தஞ்சு ஆ…”

  1. செம்ம சூப்பர் 😍 காஷ்மீர் பத்தின புரிதல் இல்லாதவர்களுக்கு ஈசியாக புரியும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.