
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியா வரும்போது எஸ் 400 வகை ஏவுகணைகளை விற்பனை செய்யும் உடன்படிக்கை கையொப்பமாக உள்ளது.
ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். அக்டோபர் 5இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புடின் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது இந்தியாவுக்கு எஸ் 400வகை ஏவுகணைகளை விற்கும் உடன்படிக்கையில் விளாடிமிர் புடின் கையொப்பமிடுவார் என அதிபரின் வெளியுறவு ஆலோசகர் யூரி உசாகோவ் தெரிவித்துள்ளார்.
நகரும் வாகனங்களில் இருந்து புறப்பட்டு வான் இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்கொண்டது எஸ் 400வகை ஏவுகணை. 36ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இவ்வகை ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது.