
சமீபத்திய ஆண்டுகளில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸைச் சுற்றியுள்ள ஏராளமான புத்தகங்களும் பதிவுகளும் பெரும்பாலும் இரண்டு வகைகளாகின்றன: முதலாவது, ஆர்.எஸ்.எஸ் பற்றிய தங்கள் சொந்த புரிதலை பிரதான ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் முன்வைத்து, செய்தித்தாள் அறிக்கைகளைப் பயன்படுத்தி முதன்மையாக தங்களின் அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்தவை.
இரண்டாவது, மற்றும் மிகச் சிறிய வகையில் வரும் படைப்புகளானது, சங்க அனுதாபிகள் அல்லது அதன் எதோவொரு துணை நிறுவனங்களுடன் பணியாற்றிய நபர்களால் தயாரிக்கப்படும் படைப்புகள். கே.ஆர் மல்கனி, நானாஜி தேஷ்முக் மற்றும் எச்.வி.ஷேஷதரி ஆகியோரின் படைப்புகள் இந்த வகையில் அடங்கும்.
இந்த சூழ்நிலையில், சுனில் அம்பேகர் எழுதிய 21 ஆம் நூற்றாண்டிற்கான ஆர்எஸ்எஸ்: ரோட்மேப்ஸ் ஆர்எஸ்எஸ் பற்றிய ஒரு அரிய உள் பார்வையை முன்வைக்கிறது.
சிறுவயதில் அம்பேகர் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அருகில் வசித்து வந்தார். அது தந்த உத்வேகத்தில் தனது ஆரம்ப கால சங்க வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) பொறுப்பாளராக உயர்ந்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டை குறிக்கும் 2047 ஆம் ஆண்டில் இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வதற்கான அவரது முயற்சிகளிலிருந்தே இந்த புத்தகத்தின் உத்வேகம் எழுந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த அர்த்தத்தில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் ஒரு எதிர்கால அணுகுமுறையை எடுக்கிறது. இதுவரை, ஆர்.எஸ்.எஸ்ஸைச் சுற்றியுள்ள பெரும்பாலான இலக்கியங்கள் அதன் நிறுவன அமைப்பு, பாஜகவுடனான உறவு, அதன் சித்தாந்தம் மற்றும் இந்துத்துவத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை மட்டுமே கையாண்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த புத்தகம் ஒரு படி மேலே சென்று சமகால பிரச்சனைகளை விவாதித்து அதன் மூலம் பல்வேறு விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கண்ணோட்டத்தை ஆராய்கிறது. சுருக்கமாக சொன்னால் சில எரியும் பிரச்சினைகளான சாதி மற்றும் சமூக நீதி, நவீன காலங்களில் குடும்ப அமைப்பு, பெண்கள் இயக்கம், மாடு பாதுகாப்பு மற்றும் ராம் கோயில் ஆகியவை அடங்கும்.
இந்த தலைப்புகளை ஆராய்வதற்கு தத்துவம், பழைய நிகழ்வுகள், வரலாறு மற்றும் உண்மை நிகழ்வுகளின் கலவையை அம்பேகர் பயன்படுத்துகிறார். ஆகையால் கடினமான இந்த விஷயங்களை இவை வாசிப்பதற்க்கு மிகவும் இலகுவாக உள்ளது. இந்த அணுகுமுறையால், சொல்ல வந்த விவாதங்களை முன்னரே தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்கு வெளியே வைப்பதற்கும் பழைய வாதங்களின் முரட்டுத்தனத்திற்குள் திரும்ப வருவதற்கும் எளிதாகிறது.
உதாரணமாக, சமஸ்கிருதத்தை அரசியல்மயமாக்குதல் என்ற விஷயத்தில், சங்கம் அந்த பண்டைய மொழியை ஒருங்கிணைக்கும் மொழியாகவும், நம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும் கருதுகிறது என்றும், இந்த இணைப்புகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் என்றும் வாதிடுகிறார்.
“எல்லா கோயில்களிலும் பிரார்த்தனைகளில், அது கேரள குருவாயூர் ஆகட்டும் அல்லது அசாமில் உள்ள காமக்யா கோயிலாக இருந்தாலும், சமஸ்கிருதம் ஒரு இணைப்பு மொழியாக மட்டுமே பார்கப்படுகிறது. இந்த இணைப்புகள் சரிவர பராமரிக்கப்படாவிட்டால், மொழியியல் பன்முகத்தன்மையில் பாதகமான சமூகவியல் விளைவுகள் இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
சமஸ்கிருத போதனை மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த 1994 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் கோடிட்டுக் காட்டி, மொழியை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்.
சாதி புதிர் தொடர்பான பிரச்சினைகளின் வரம்பை விவாதிக்க அம்பேகர் ஒரு முழு அத்தியாயத்தையும் அர்ப்பணிக்கிறார். இந்த அத்தியாயத்தில், ஜாதியின் தோற்றம் மற்றும் கட்டமைப்பை அவர் பிறப்பு மற்றும் பிரிவின் அடிப்படையில் உயர் அல்லது தாழ்வாக பிரிப்பது பிற்கால விபரீதங்கள் என்று சுட்டிக்காட்டி, இது “ஜாதி-வ்யாவஸ்தா” அல்லது சாதி அமைப்பாக இது அந்த கட்டமைப்பை உருகுல செய்தது என்றும் விவரித்துள்ளார்.
சாதியை ஒழிப்பதற்கான மகாத்மா காந்தியின் பணிகளையும் ஆராய்ந்து, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்ஜ்வார் சமூக நீதியை சங்க நெறிமுறைகளில் எவ்வாறு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.
“டாக்டர்ஜி அவரது காலத்தை விட மிகவும் முன்னால் இருந்திருக்கிறார். தீண்டாமை மற்றும் சாதி பாகுபாட்டை சங்கத்திற்க்கு உள்ளே வராமல் பார்த்துக்கொண்டார். மேலும் அனைத்து சாதியினருக்கும் சமமான உறவின் அடிப்படையில் இருக்குமாறு சங்கத்தைத் வழிநடத்திச்சென்றார். எனவே, சங்கம், அதன் ஸ்தாபக நாளிலிருந்து, அதன் அமைப்பின் செயல்பாட்டில் சாதி எந்தப் பங்கையும் வகிக்காது என்று முடிவில் உறுதியாக இருந்தனர்,” என்று எழுதுகிறார்.
எந்த சாதியினரிடமிருந்தும் வந்து சுயம்சேவகர்களும் சமமாக கருதப்படுகிறார்கள் என்று அவர் தொடர்கிறார். எந்தவொரு நாளிலும் அவர்களுக்கு எந்த பணியையும் ஒதுக்க முடியும், அது கழிப்பறைகளை சுத்தம் செய்வதாகட்டும், உணவு தயாரித்தல் அல்லது ஆய்வு அமர்வுகளை நடத்துதலாகட்டும், எந்தவொரு பாகுபாடும் அங்கில்லை.
பாரம்பரியத்தின் வலிமையை நம்பினாலும், சமூகத்தில் தொடர்ச்சியான சீர்திருத்தத்தின் வலுவான உந்துசக்தியாக ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு இருந்துள்ளது என்பதை சாதி பற்றிய பிரிவு ஆராய்கிறது. சமூக நீதிக்கான ஆர்.எஸ்.எஸ் முயற்சிகள் மற்றும் சாதி சார்புகளை வேரறுக்க திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் கருத்தரிக்கப்படுகின்றன என்பதை இந்த பிரிவு விவாதிக்கிறது.
பாகுபாடு மற்றும் சமூகத்தில் ஊடுருவியுள்ள சிதைவுகளை பற்றி அவர் குறிப்பிடும்போது, அவற்றை எதிர்கொள்ள சமாஜிக் சமரஸ்தா அல்லது சமூக நல்லிணக்கம் மூலம் அவைகளை களைய முடியும் என்று சங்கம் பலமாக நம்புவதாக கூறுகிறார். இந்த பிரிவின் மிக முக்கியமான பகுதியில், சாதி விதிகளின் கடினத்தன்மையை உயர்த்துவதற்காக புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் விவாதிக்கிறார்.
மற்றொரு முக்கியமான அத்தியாயம் இந்துத்துவத்தின் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இங்கே அம்பேகர் வரலாறு, கலை, இலக்கியம் மற்றும் சீர்திருத்தவாதிகள் வரை பல்வேறு சிறந்த ஆதாரங்களைத் காட்டுகிறார். இந்துத்துவாவை இந்து வாழ்க்கை முறை என்று அழைப்பதற்கான ஒரு வரையறையை அவர் வழங்குகிறார்:
அவர் இதை இவ்வாறு எழுதுகிறார்:
இந்த வாழ்க்கை முறையை உருவாக்கியது இந்தியா என்பதால், இந்துத்துவா என்பது இந்திய கலாச்சாரம், இங்கு கலாச்சாரம் என்பது வெவ்வேறு மரபுகள் மற்றும் இயற்கையுடனான மக்கள் மத்தியில் உள்ள உறவுகளின் வலையமைப்பைப் பொதுவாக புரிந்துகொள்வதாகும்.
இந்து ராஷ்டிரா, மற்றும் இந்து வாழ்க்கை முறை தொடர்புடைய கருத்துக்களை ஆராய்ந்த அவர், இந்துத்துவத்தை உள்ளடக்கிய மூன்று சூத்திரங்களை கோடிட்டுக் காட்டுகிறார் – ஒருங்கிணைப்பு, ஒப்புதல் மற்றும் சகவாழ்வு.
இதை ‘மோதல் இல்லாத உலகத்திற்கான 21 ஆம் நூற்றாண்டு இலக்கணம்’ என்று அழைத்த அவர், இந்த கருத்து அனைத்து ஆர்.எஸ்.எஸ் பணிகளுக்கும் எவ்வாறு மையமானது என்பதை விவாதிக்கிறது. இந்த அத்தியாயத்திற்கு இன்னும் சமகால கண்ணோட்டத்தை பசு பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பின் 30 வது பிரிவு போன்ற சில முக்கிய பிரச்சினைகள் பற்றிய சுருக்கமான விவாதம் அளிக்கிறது.
அம்பேகரின் புத்தகம் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோருக்கான பயனர்களின் கையேடு. இது ஏற்கனவே இருக்கும் யோசனைகளின் முழு வரம்பையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் அமைப்பின் வரலாறு, பயணம் மற்றும் இலட்சியங்களையும் தொடுகிறது.
புத்தகம் விரைவான துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இது படிப்பதற்கும் குறிப்பதற்கும் எளிதாக்குகிறது. எழுத்து வாதங்களின் வடிவத்தில் இல்லை, ஆனால் மிகவும் நிதானமான, விவேகமான மற்றும் தியான வடிவத்தில் உள்ளது. நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸைப் புரிந்து கொள்ள விரும்பினால், இந்த புத்தகம் ஒரு தங்க பொக்கிஷம்; நீங்கள் குறைகளை காண விரும்பினால் – நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
இதுவரை, ஆர்.எஸ்.எஸ் பற்றிய இலக்கியங்கள் ஒரு இடது-தாராளவாத மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்குள் அமைப்பை மதிப்பீடு செய்து விவரிக்க முயன்றன. இந்த புத்தகம் ஆர்.எஸ்.எஸ்ஸை அதன் சொந்த சூழலுக்குள் புரிந்து கொள்வதில் இது முதல் முயற்ச்சியாகும். .
புத்தகம் ஒரு எதிர்கால தோற்றத்தை எடுப்பதால், 2047 ஆம் ஆண்டில் இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆரம்பகால மறு செய்கைக்கு அம்பேகர் பதிலளிக்கிறார். அதற்குள், ஆர்.எஸ்.எஸ் சர்க்கரை போன்று சமூகத்தில் கரைந்துவிடும் என்று அவர் கருதுகிறார்.
இந்த பதிவை ஆங்கிலத்தில் எழுதிய ஆசிரியர் ஸ்வதேஷ் சிங் டெல்லி பல்கலைக்கழகத்தின் சத்தியாவதி கல்லூரியில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்.
ஆங்கிலப் பதிவை இங்கே படிக்கலாம்.
நன்றி : https://swarajyamag.com