“என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா?”

“இல்லம்மா, உடம்பு சரியாய் தான் இருக்கு. மனசு தான் பாரமா இருக்கு.”

“என்னப்பா ஆச்சி?”

“மறுபடியும் தொழிற்சாலையை மூடிட்டானுங்க, பாவி பய புள்ளைங்க.”

“அய்யயோ இப்ப தானே வேலைநிறுத்தம் முடிஞ்சி தொறந்தாங்க? அதுக்குள்ள எது என்ன கொடுமை? இப்ப என்ன பண்ண போறோம்? எதுக்கு முடினாங்க?”

“அது ஏதோ அந்த தொழிற்சாலையால கான்சர் வருதாம், என்ன கன்றாவியோ. நாங்க அங்க வேல செய்றோம் எங்களுக்கு ஒன்னும் வரமாட்டேனுது.”

“தெருவுக்கு தெருவு டாஸ்மாக் தொறந்து வச்சி இதை குடி, அதை குடின்னு விக்குறானுங்க. இந்த பயலுங்க அங்க போய் என்ன கருமத்தியாசம் குடிச்சிட்டு, பத்தாததுக்கு சிகரெட்டு எல்லாம் புடிச்சிட்டு அப்புறம், கான்செர் வந்த மட்டும் இந்த கம்பெனி நாலா தான் வந்திச்சி அதா மூடுனு கூவுறானுங்க.”

வெறுப்பின் விளிம்பில் புலம்பி கொண்டிருந்தார் தமிழ்நேசன்.

தமிழ்நேசன், ஐம்பதை தொட்டு மூன்று நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டது. வயது வந்த பெண்ணை வீட்டில் வைத்து கொண்டு இன்றோ நாளையோ திருமணம் செய்ய வேண்டுமே என்ற கலக்கத்தில் இருந்த அவருக்கு, இந்த செய்தி இடியாகவே வந்து விழுந்தது.

அதன் வெளிப்பாடே மேற்கூறிய ஆதங்கம்.

பல வருடங்களாக வேலைவாய்ப்பு ஏதும் இன்றி பெரு நகரத்திலிருந்து இருந்து ஒதுங்கி இருந்த அந்த கிராமத்திற்கு ஒரு விடிவுகாலமாய் வந்தது தான் இந்த தொழிற்சாலை.

இது வந்த பின்னே தான், இந்த கிராமம் இருப்பதே கூட அரசாங்கத்திற்கு தெரிய வந்திருக்கும்.

ஒரு பள்ளிக்கூடம் கூட அந்த கிராமத்தில் இல்லை. தன் பெண் பிள்ளையை வெகு தூரம் சென்று படிக்க வைக்க வேண்டுமே என்று பள்ளிக்கூடம் கூட அனுப்பாமல் வீட்டு வேலை செய்த வண்ணம் இருந்தால் அவனது பெண்.

ஏதோ இந்த தொழிற்சாலை வந்த புண்ணியம், இந்த கிராமத்திற்கு ஒரு பள்ளிக்கூடமும் ஆத்திர அவசரத்துக்கு ஒரு சிறிய மருத்துவ உதவி செய்யும் நிலையமும் வந்தது.

ஆம், அவர்கள் தான் இந்த கிராமத்திற்கு குடிநீர் மற்றும் ஒரு பள்ளிக்கூடமும் வழங்கியுள்ளார்கள். அதன் தயவில் தான் இவன் அவனது பெண் பிள்ளையை படிக்க வைத்தான்.

ஏதோ அந்த தொழிற்சாலை வந்து இவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கு படியளப்பதாலேயே இன்று பலர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஏனோ தெரியவில்லை, கடந்த சில வருடங்களாக இது போன்று ஏதாவது ஒரு காரணம் கூறி ஆலையை முடிய வண்ணமே இருக்கிறார்கள்.

சரி, கைய கழுவி வாங்க. சாப்பிட்டு அப்புறமா மத்தத பேசிக்கலாம்.

கையை கழுவி வந்து தொலைக்காட்சி பெட்டியின் உயிரூட்டினான். வழக்கம் போல அதில் தொடர்கள் ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவன், தன் சொந்த அண்ணியையே தவறான கண்ணோட்டத்தில் பார்த்தவண்ணம் இருந்தான்.

இருந்த எரிச்சலில் அவனையும் அறியாது கையில் இருந்த ரிமோட்டை தூக்கி எறிந்தான்.

“எங்க உங்களுக்கு எவ்வளவு கோவம்.”

“நிம்மதியா சாப்பிடலாம்னு பார்த்தா என்னடி எழவு இந்த டிவில.”

“ஆமாம், இன்னைக்கு தானா இப்படி. பொழுதன்னைக்கும்இந்த கண்றாவிய தான் போடுறான். அதுக்கு நம்ப வீட்டு டிவிய போட்டு ஓடப்பிங்களா?”

உண்மை தான். இது வெறும் கதை என்று நினைத்து விடாதீர்கள். இது தான் இன்றைய தமிழகத்தின் உண்மை நிலை.

எப்படியிருந்த என் தமிழ்நாடு?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகிற்கு எடுத்துரைத்த தமிழ் சமூகம்.

இந்திய மக்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள் என்று சொல்லி வளர்த்த இந்திய பாரம்பரியம்.

அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசை படக்கூடாதென்று உரைத்த தமிழ் பரம்பரை.

ஆனால் இன்றைக்கு, எவர் பொண்டாட்டியும் எவர் புருசனும் எவர் கூட சென்றாலும் அது அவர்கள் தனிப்பட்ட உரிம்மை என்று போராடி உரிமை கோரும் அவல நிலைக்கு மாற்றிவிட்டார்கள்.

பாரதி கூறிய புதுமை பெண்ணும் சரி, சுவாமி விவேகானந்தர் விழித்தெழு என்று கூறிய இளைஞனும் சரி, நிச்சயம் இவர்கள் அல்ல.

ஆண்கள் தவறு செய்தால் தட்டி கேட்கும் புதுமை பெண்ணையே எனது முண்டாசு கவிஞர் பாரதி அன்று பாடினார். ஆனால் இன்றைய பெண்களோ அந்த தவறை தாங்கள் ஏன் செய்ய கூடாது என்று கேட்பதையே புதுமையாக கருதுகிறார்கள்.

ஆம், சம உரிமை என்பதனை தவறாக புரிந்ததினால் வந்த விளைவு தான் இது.

இதற்கு காரணம்?

கடைநிலையிலுள்ள என் மக்களுக்கும் கிடைக்க வேண்டிய படிப்பறிவு, அவர்களுக்கு எட்டா கனியாக இருப்பதே.

பல அரசியல் நோக்கங்கள் கொண்டு கடை நிலை மக்களுக்கு இந்த படிப்பறிவை சென்று சேரவே விடாது தடுத்து கொண்டிருக்கும் சில நயவஞ்சகரின் சூழ்ச்சியே காரணம்.

நீ தாழ்ந்தவன் என்று பிறர் தூற்றுவதாக கூறியே உன் உணர்ச்சியை தூண்டியவன், அதை வைத்து அவனது அரசியல் சதுரங்க வேட்டையை நடத்தியவன், ஒரு முறையேனும் அதை முறியடிக்கும் வழிமுறையை கூறினார்களா?

இல்லையே, மாறாக என்ன கூறினார்கள்? வேற்று ஜாதி பெண்களை திருமணம் செய்வதற்கும் கலப்பு திருமணம் என்ற போர்வையில் சில பல குடும்பங்களை ஏமாற்றவுமே உங்களை வழி நடத்தினார்கள்.

பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்று சில சமூகத்திற்கு எதிராக உங்களை தூண்டியவண்ணமே இருக்கும் இவர்கள், உங்கள் மனதில் ஒரு காழ்ப்புணர்ச்சியையே வளர்க்கிறார்கள். இதை எப்போது நீங்கள் உணரப்போகிறீர்கள்?

சரி, இத்தனை ஆண்டுகளாக இடஒதுக்கீடு மூலமாக நீங்கள் பயன்பெற்றது போன்று, அவர்கள் கூறிய சமூகத்தினர் இது ஏதும் இன்றி உள்ளார்கள். இருந்தும் அவர்கள் மட்டும் வாழ்க்கையினில் மேல் நோக்கி வளர என்ன காரணம் என்று ஒரு முறையாவது சிந்தித்ததுண்டா?

அடுத்தவர் பற்றி பொறாமை கொள்ளாமல், இடஒதுக்கீடு பற்றி புலம்பாமல், தன்னால் இயன்ற முயற்சி கொண்டு நன்கு படித்து வருகிறார்கள். தங்கள் திறமைகளையும் வளர்த்து கொண்டுள்ளார்கள்.

நீங்கள் ஏன் அதையே பின்பற்ற கூடாது? உங்கள் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்குங்கள். அடுத்தவர் வாழ்வதை எண்ணி பொறாமை கொள்வதும், அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதும் உங்கள் மனதை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும்.

சுவாமி விவேகானந்தரும் அய்யா அப்துல் கலாமும் கண்ட இளைஞர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று விருப்பமா? வாருங்கள், மாற்றம் கொண்டு வருவோம்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சாதி ஒழிக்க போராடுங்கள், சுற்றுப்புற சூழல் காக்க போராடுங்கள், அதற்கு போராடுங்கள், இதற்கு போராடுங்கள் என்று கூறும் அரசியல்வாதிகளை நன்றாக போராட சொல்லுங்கள். அவர்கள் இந்த பொது வாழ்க்கைக்கு வந்ததே மக்கள் போராட்டத்திற்காக தானே? போராடட்டும்.

மேலும் இன்னும் பல தலைமுறைக்கு வேண்டிய பொருள் அனைத்தும் சேர்த்து வைத்துள்ள உங்கள் அரசியல்வாதிகள் போராடினாலும் அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், நீங்கள் அப்படியல்ல. உங்களை நம்பியே உங்கள் குடும்பங்கள் உள்ளது. பெற்ற தாய் தந்தை உங்கள் உயர்வை காண துடித்து கொண்டுள்ளார்கள். எனவே, நீங்கள் நேரே ஒரு நல்ல பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைகளுக்கோ சென்று உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.

உங்கள் அறிவை மெருகேற்றி கொள்ளுங்கள். உங்கள் சமூகத்தில் உள்ள இயலாதவர்களுக்கு உதவுங்கள். அவரது பிள்ளைகளை எப்பாடுபட்டாவது பள்ளிக்கு சென்று படிக்க வையுங்கள்.

உங்கள் வாழ்க்கையே ஒரு போராட்டம் தான், முதலில் அதை போராடி வெல்ல பாருங்கள்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினையே அழித்துவிடுவோம் என்று கூறிய பாரதி போன்றே, எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வியறிவு தர இந்த அரசாங்கமோ அல்லது வேறு சூழ்ச்சியாளர்களோ மறுப்பாரேயானால் அதை நிவர்த்தி செய்வதே நம் தலையாய கடமை.

எக்காரணம் கொண்டும் இதை நிறுத்த கூடாது. இது போன்று தொடர்ந்து ஒரு 5-6 வருடங்கள் செய்து பாருங்கள். படிப்பறிவு தரும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

முதலில் பணக்காரர்கள் அனைவருமே கயவர்கள் என்ற இந்த சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். அவர்கள் உங்கள் சொத்தையும் உரிமையையும் பறித்தவர்கள் என்ற மாயையிலிருந்து மீளுங்கள்.

இந்த உண்மையை என்று உணர்கிறீர்களோ அன்றே உங்களுக்கு விடிவு காலம். அதுமட்டுமல்ல நீங்களும் அந்த பணக்காரர்கள் போன்று வாழ்வில் முன்னேற முடியும் என்பதை உணரவும் முடியும்.

இனியும் அவன் கூறினான், இவன் கூறினான் என்று கயவர்களின் பின் செல்வதை நிறுத்துங்கள். உங்கள் நோக்கம் ஒன்றே. உங்கள் குடும்பத்திற்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல மனிதனாக இருந்து அவர்கள் முன்னேற வழிவகை செய்யும் கல்வியறிவை அவர்களுக்கு கொண்டு செல்வதே ஆகும்.

செய்வீர்களா?

செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்,

உங்கள் மகேஷ்

One Reply to “போராடுவோம் போராடுவோம் ..”

  1. This is True reality in Tamilnadu 😈🤑😭
    மக்களை ஏமாற்றி போராட்டம் நடத்ததும் சமூக விரோதிகள் மிஷினரிகள் அரசியல் வியாபாரிகளும் களத்தில் இறங்கி உள்ளே சென்று மூளைச்சலவை செய்யும் கம்யூனிஸ்ட் நக்சல் அமைப்புகள் வேறூண்டி வளர்ந்து நிற்கும் நிலையில்
    உணருமா? அரசு..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.