அரசியலில் விஷாலுடன் கைகோர்க்கிறாரா விஜய் சேதுபதி..?

சென்னை: 96 பட பிரச்சனைக்கும் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்க 96 படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது, சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறார்கள் 96 பிரேம் குமார் எடுத்த படம். அது அந்த ஆளுக்கு மட்டுமே […]

ஆமாம்.. தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூது விட்டாங்க.. தமிழிசை அதிரடி!!

சென்னை: தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் அதிமுகவையும் அமமுகவையும் இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார், அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், அதிமுகவுடன் சேர்வது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழிசை கருத்து […]

கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே கூறியுள்ளார். நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பெரும்பாலோனோர் கரைதிரும்பியுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 19 விசைபடகுகள் உள்ளிட்ட 80 படகுகள் மட்டுமே கரை திரும்ப […]

எச். ராஜா பேசியதில் தப்பே இல்லை.. மக்கள் சொல்கிறார்கள்..!

சென்னை: “இப்படியா சிறைக்குள் பிரியாணி செய்து சாப்பிடுவது? அப்போ எச்.ராஜா பேசியதில் தப்பே கிடையாது” என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொர்க்க வாழ்க்கை செல்போன் படங்கள் மூலமாக வெளி உலகுக்கு தெரிந்து பரபரப்பானது.

தமிழகத்தில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை மாவட்டங்களில் பலத்த மழை […]

நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ எடிட் செய்ய பட்டதா ..?போலி வீடியோ தயாரித்தவர்களுக்கு ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட்..! கர்நாடக கோர்ட் அதிரடி..!

நித்யானந்தாசுவாமிக்கு எதிராக  போலியாக வீடியோ வெளியிட்ட , லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து நித்யானந்தர மற்றும் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பதாக ஒரு பரபரப்பான போலி வீடியோவை தயாரித்து 2010ஆம்  ஆண்டில் வெளியிட்டனர். இது தொடர்பாக கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டது போன்று சென்னை நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. 2010 ம் ஆண்டு சுவாமி நித்யானந்தருடன் வீடியோவில் இருப்பதாக தொடர்புபடுத்தி சொல்லப்பட்ட நடிகை ரஞ்சிதா அவர்கள் பெங்களுரில் […]

பெட்ரோல், டீசல் மீதான விலை ரூ.2.50 குறைப்பு – மத்தியமோடி அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் […]

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது இஸ்லாமிய மௌலானா : மத்திய பிரதேசத்தில் கொடூரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மதராசாவின் 52 வயது மௌலானா ஒருவர்,  10 வயது மாணவியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) அன்று ​​குற்றம் சாட்டப்பட்ட மௌலானா அப்துல் ரவூப் (52),  10 வயது சிறுமியை இஸ்லாமியப் பள்ளியின் ஒரு மூலையில் வைத்து பாலியல் வன்கொடுமை  செய்ததாக கூறப்படுகிறது. கஜிரனா காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து FIR […]

நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை -பொதுப்பணித் துறை

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி செயற்பொறியாளர்களே நீரை திறந்து விடலாம் என்று பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது- பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள  89 அணைகளில் 15 பெரிய அணைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளன. ஏரி,  குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. எனவே, கன மழை பெய்து நீர்நிலைகளில் கரை […]