தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டம் வெற்றி – ஒரு பார்வை

swachch bharat

பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய $20 பில்லியன் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தின் மூலம் 111 மில்லியன் கழிப்பறைகள் ஐந்து வருடங்களில் கட்டி முடிக்கப்படும். 2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்தலே இத்திட்டித்தின் நோக்கமாகும். இது மக்களின் […]

ஸ்திரீகளின் நாட்டில் சபரிமலை சர்ச்சை!

sabarimala temple

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் […]

மூடிய கதவுகளும் தடம்மாறும் வாழ்க்கையும்: ஸ்டெர்லைட்

போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.

செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்

sukanya samriddhi - selvamagal semippu

“அழகிய தேவதைக்கும், தேவதையை பெற்றெடுத்த தாய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இவள் இனி உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புமாய் எல்லா வளமும் நலமும் பெற்றிட துணைபுரிவாள்“. நண்பருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் வாட்ஸாப்பில் செய்தி அனுப்பினேன். பதிலுக்கு நன்றி என்று ஒற்றைசொல்லில் உரைக்காமல் திரும்ப அழைத்து அவர் மகிழ்ச்சியை பகிர்ந்ததும், அவர் நான் சொன்ன வார்த்தைகளை உளமாற உணர்ந்திருப்பது புரிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை பெண்குழந்தைகள் பிறப்பு 1991க்கு […]

தடம்மாறிய போராட்டம் தடுமாறும் தமிழகம்: ஸ்டெர்லைட்

போராட்டத்தால் போராட்டமான மக்களின் வாழ்வு ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் செம்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் ஒரு தொழிற்சாலை. மின்மாற்றியில் பயன்படும் செப்புப் பட்டை, மின்சார செம்புக் கம்பிகள், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோஃப்லோரொ சிலிக்கிக் அமிலம், ஜிப்சம் முதலியனவற்றை தயாரிக்கிறது. மின்சாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதால் நாட்டின் மின்சாரத்துறை வளர்ச்சியிலும் நேரடியாக ராணுவ உபகரணங்கள் தயாரிப்பிற்கு செம்பு வழங்குவதாலும் நாட்டில் ஒரு முக்கியமான தொழிற்சாலையாக பங்கு வகிக்கிறது.

ஜிஎஸ்டி (GST) ஆதரவும் எதிர்ப்பும்! ஒரு அலசல்

2014ல் இந்த அரசாங்கம் பதவியேற்றவுடன் பொருட்கள் மற்றும் சேவை மீதான மறைமுக வரிகள் அத்தனையும் GST யின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும் கூச்சல்கள். GST என்றால் என்னென்று நன்கு அறிந்தவர்கள் கூட நாட்டுக்கு நல்லதில்லை என குந்தகம் விளைவிக்க எத்தனித்தார்கள். வருடங்கள் இரண்டு உருண்டோடி 2017 ஜுலை மாதம் முதல் நாளிலிருந்து GST அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.

கொங்கு மண்டலத்தை வஞ்சிக்கிறதா தமிழ்நாடு?

coimbatore temple

தமிழ்நாட்டில் தொழில் நகரங்கள் அமைந்த பகுதி மேற்கு மாவட்டங்கள். தமிழ்நாட்டு அரசின் பெரும் வருவாயை ஈட்டித் தருவதும் இந்தப் பகுதியே. பின்னலாடை, நூற்பு ஆலைகள், விசைத்தறிகள் என்று நெசவுத்தொழிலில் உச்சமும் முட்டைகளையும் கூமுட்டைகளையும் உருவாக்கும் அதிக கட்டணம் வாங்கும் பள்ளிகளும், இந்தியாவின் மொத்த லாரிகளில் 25% வைத்திருக்கும் சிற்றூரையும், “திருப்பூர் வந்தவன் வெறுங்கையோட திரும்ப மாட்டான்”என்ற சொலவடையும் பல சிறப்புகளை கொண்ட மேற்கு மண்டல மக்களின் பல கோரிக்கைகளை வரிசையாக […]

ஏடிம் கார்டு ஸ்கிம்மிங் திருட்டு: உங்கள் பணம் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி?

atm machine

ஏ.டி.எம் (ATM) எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் கார்டு தகவலை சேகரித்து அவர்கள் கணக்கில் உள்ள பணத்தை சுலபமாகத் திருடுகின்றனர் சமூக விரோதிகள். திருடப்பட்ட கார்டு தகவல்களை வைத்து போலி கார்டு தயாரித்து பணத்தை கொள்ளையடிக்கும் முறை ஒன்று. மற்றொன்று, திருடப்பட்ட கார்டு கணக்குகளில் இருக்கும் பணத்தை வேறு ஒரு டிஜிட்டல் வாலெட் (Digital wallet) கணக்குக்கு மாற்றி உலகின் எந்த மூலையில் இருந்தும் அவற்றை செலவு செய்வது.

சிலைதடுப்பு சூப்பர்ஸ்டார் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற உயர்நீதிமன்றம்

pon manickavel, idol wing

ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற சென்னை உயர்நீதிமன்றம். சிலைதடுப்பு பிரிவின் கடும்முயற்சி வீண் போகாது என்று அறிவிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் சிலை தடுப்பு பிரிவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புபிரிவுடன் அரசு மோதல் போக்கை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடநூலில் கிறிஸ்துவ குறியீடு முறை மாற்றம் – பொதுமுறைக்கு மாறிய மதசார்பற்ற கல்வி

bc bce ad

வரலாற்றில் கால வரையறையைக் கூறும்போது சர்வதேச அளவில் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கான மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் கி.மு (BC) (கிறிஸ்துவுக்கு முன்) மற்றும் கி.பி (கிறிஸ்துவுக்கு பின்) [A.D. (Anno Domini)] ஆகியவை இனி பயன்படுத்தப்படாது.