ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகுமுத்துக் கோன் கொடூரன் யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட வரலாறு.

பூலித்தேவர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்துகோன்.

அழகுமுத்துகோன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள. அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் மன்னராக முடிசூடிக்கொண்டார்.

முதன்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன்

எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தான். எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை என கேள்வி கேட்டு யூசுகானுக்கு கடிதம் எழுதினார் எட்டயபுரம் மன்னர்.

கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து படைக்கு ஆள் சேர்த்தார்.

மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்கிமறுநாள் மாவேலியோடை அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர். எட்டையபுரத்தை முற்றுகையிட்ட யூசுப்கான் அங்கு யாரும் இல்லாததால் பலமிக்க பெரும் படையை பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான். இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை சேர்வைக்காரர் சண்டை கும்மி என்ற பாடல் சொல்கிறது.

கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதிசூரரும்.

வெங்கலகைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்.

..என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.

அழகுமுத்து கோன் கைது இந்த கடுமையான குழப்பத்தில் சிக்கி மன்னர் படைகள் சிதறுண்டன. அழகுமுத்துக் கோன், அவனோடு இணைந்து கும்பினி படையை (கம்பெனி படை) எதிர்த்தவர்களையும் கைது செய்தான் கான்சாகிப். கும்பினி படையை எதிர்த்ததற்காக மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகளை வெட்டினான் கொடூரன் யூசுப்கான்.

அழகுமுத்து கோன் உட்பட நால்வரை நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்றுபீரங்கியின் வாயில் அனைவரையும் கட்டி வைத்துபீரங்கியால் சுட்டான்.

உடல் துண்டு துண்டாக சிதறியது நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ் சேர்வை தனது புத்தகத்தில்கூறுகிறார்.

1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும். பீரங்கியில் கட்டபட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு வரி செலுத்தினால் உயிர்பிச்சை இடுவதாக கூறிய யூசுப்கானிடம் கடைசிவரை மண்டியிடாமல் உயிரைவிட்டார். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்க மாவீரர் அழகுமுத்து கோன்.

கோவில்பட்டி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ. தொலைவில் காட்டாங்குளம் கிராமம் உள்ளது. அவருக்கு அங்கு நினைவு மண்டபம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் எழுப்பபட்டுள்ளது.

அங்கு செல்வோர் ஆங்கிலேயர் கொடுத்த பதவிக்காக இரக்கமின்றி சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த கொடூரன் யூசுப்கானன தெரிந்துகொள்ளவும்.

வீரவரலாற்றை இந்தியர்களுக்கு தெரியும் வண்ணம் வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களால் வெளியிடபட்டது

கேராளாவிலும் மாவீரர் அழகு முத்துகோன் வீர வரலாறு கொண்டாடபடுகிறது.

பொழுது போனபிறகு போர்செய்வது தமிழர் மரபு அல்ல அதை தெரிந்துகொண்டு நடு இரவில் தாக்கி கைது செய்த பேடி யூசுப்கான் எனும் மருதநாயகம்.

(பல முறை தோற்று பின் இரவு சண்டை, பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் என கோரி முகமது அதர்ம வழியில் இந்தியா வந்த வழி)

நம்மிடையே வளர்ந்து நம் உணவிலே விஷம் வைத்த துரோகி யூசுப்கான் எனும் மருதநாயகன்

பல தலைமுறைகளுக்கு நமது முன்னோர்களின் வீர வரலாறு மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.

நன்றி சோழன் @thiruneeru

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.