
வரலாற்றில் கால வரையறையைக் கூறும்போது சர்வதேச அளவில் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளுக்கான மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் கி.மு (BC) (கிறிஸ்துவுக்கு முன்) மற்றும் கி.பி (கிறிஸ்துவுக்கு பின்) [A.D. (Anno Domini)] ஆகியவை இனி பயன்படுத்தப்படாது.
நிகழ்காலத்திற்கு முன் [B.P (Before Present)], பொது சகாப்தத்திற்கு முன் [B.C.E – Before Common Era], மற்றும் பொது சகாப்தம் [C .E – Common Era] ஆகியவை ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும் சுருக்கங்களாகும். அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பாட புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“B.C.E. மற்றும் C.E பயன்பாடு 1708 ல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 2007 முதல் புழக்கத்தில் உள்ள NCERT புத்தகங்களும் இதையே பின்பற்றி வருகின்றன. இச்சுருக்கங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், புதிய பாடத்திட்டத்துடன் அச்சிடிப்பட்ட பாடப்புத்தகங்களிலும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் டி. உதயச்சந்திரன் கூறினார்.
இச்சுருக்கங்களின் பயன்பாடு பாடநூல்களிலும் மற்றும் அறிவியல் பத்திரிகைகளிலும் அதிகரித்து வருகிறது. அடுத்த வருடம் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகளின் புத்தகங்களிலும் இந்த மாற்றம் இருக்கும் என்றும் திரு. உதயச்சந்திரன் கூறினார்.
தகவல் பெட்டி ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் “What is history?”; என்ற தலைப்பில் இருக்கும் முதல் பாடத்தில், B.C.E & C.E. காலக்குறியீடு பற்றியும் அவை எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பது பற்றியும் தகவல் பெட்டியில் விளக்கப்பட்டுள்ளது. அதே போல், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் பரிந்துரையின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் NCERT சமூக அறிவியல் பாடநூல்களிலும் இவ்வாறான காலக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2006ல், அப்போதைய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார் “மதச்சார்பற்ற” கால குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். “C.E. மற்றும் B.C.E. இன் பயன்பாடு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை. அது இங்கே பயன்படுத்தப்படத் தொடங்கியபோது, பாடநூல்கள் மேலும் மதசார்பற்றதாக விளங்க இது நம் மாநில பாடநூல்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் கோரியிருந்தேன்” என்று அவர் கூறினார்.
பாடநூலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கால குறியீடுகள் ஒரு நல்ல தொடக்கம் என் திரு ரவிக்குமார் கூறியுள்ளார்.