உங்களில் பெருவாரியானவர்களுக்கு இந்த புள்ளி விவரங்கள் தெரிந்திருக்காது. அதாவது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாலின விகிதம் (அதாவது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஈடாக உள்ள பெண் குழந்தைகள் எண்ணிக்கை) 1991ல் 945:1000 என்று இருந்தது; 2001ல் இது 927:1000 குறைந்து, பின் 2011ல் 918:1000 ஆக சரிந்தது.
இந்த அபாயகரமான சரிவு குறித்து முந்தைய அரசுகள் எதுவும் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம். மத்தியில் நிலையான ஆட்சி இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கொள்ளலாம். இருந்தும் நம் பொருளாதார மேதை தலைமையிலான பத்தாண்டு ஆட்சி ஊழலில் காட்டிய அக்கறையை இந்த அடிப்படை பிரச்சினையை சரி செய்ய முற்பட்டிருக்கலாம்.

இப்போது பிரச்சினைக்கு வருவோம். ஏன் இந்த கணக்கு முக்கியம்? பெண்கள், சமூகத்தில் முன்னேற பெண் சிசுக்கொலை, பெண் கல்விக்கான முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முந்தைய அரசுகள் தவறியதன் விளைவாக பெண்களின் முன்னேற்றம் தடைபட்டு நின்றது.

மும்பையில் ஏன் இப்போது சென்னை, கோவை வரை வந்துவிட்ட கலாசாத்தில் பெண்கள் சுதந்திரமாக அறைகுறை உடையை அணிகின்றனரே என்று கேட்கலாம்(அதுவும் பெண் விடுதலை தான்). எது Women empowerment? அரைகுறை ஆடையுடன் சுற்றுவதா? இல்லை பெண் குழந்தை பிறந்ததும் கொல்ல நினைக்கும் கிராம மக்களை தடுத்து அந்த குழந்தைக்கு கல்வி, பணம், சுகாதாரம் முதலிய அடிப்படை விஷயங்களை அளிப்பதா?

எனவே குழந்தை பாலின விகிதத்தை அதிகரிக்க எண்ணிய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு “பெண் குழந்தைகளை காப்பாற்றி கல்வி கொடுக்கும்” Beti Bachao Beti Padhao Yojana என்ற திட்டத்தை 2015ல் அறிவித்தது.

இந்த திட்டம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சம் ஆகியவற்றின் கீழ் செயல்படுகிறது. துறை அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இதற்காக ஆலோசனைகளை கேட்ட பிரதமர் அலுவலகம் அதை இந்த விகிதம் குறைவாக இருந்த 100 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தியது.

பல்வேறு யோசனைகளில் குறிப்பிடத்தக்கவை இது குறித்த விழிப்புணர்வு, தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளை தாங்கள் ஆக நினைக்கும் நபர்களிடம் (எ.கா.மருத்துவர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள்) ஒரு நாள் அவர்களுடன் செலவழிப்பது என்ற பொதுவான யோசனையை நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் (ஹரியானா, உத்தர பிரதேசம்) பல்வேறு விதமாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தோடு தூய்மை இந்தியா திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை (இதற்கு ஆதரவு இருந்தால் அதையும் எழுதுறேன்). இவைகளை ஒன்றுக்கொன்று பிரித்து பார்க்க முடியாது.

இந்த திட்டங்கள் வெற்றி பெற்றனவா?

தற்போது நடைபெற்ற ஆய்வுகள் சொல்வது முன்பு 918:1000ஆக இருந்த குழந்தை பாலின விகிதம் தற்போது இந்த அரசின் சீரிய முயற்சியால் 931:1000 என்று முன்னேறியுள்ளதாக தெரிவிக்கின்றன. இதுவும் குறைவு தான். ஆனால் பல வருடங்களாக சரிந்து வந்த பெண்கள் விகிதம் தடுக்கப்பட்டு, ஆண்-பெண் வித்தியாசம் குறைகிறது.

சென்ற மாதம் கூட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களையும் மாநிலங்களையும் பாராட்டி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பெண் சுதந்திரம் என்பது சமூகத்தின் கீழ்தட்டு பெண்கள் மருத்துவராக, வக்கீலாக, நீதிபதியாக, அரசியல்வாதியாக மிளிர்வதற்கு தன்னாலான உதவிகளை செய்வதே என்று ஒரு அரசு யோசிக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு யோசிக்க ஒரு பிரதமர் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின் வர வேண்டியுள்ளதே என்பது தான் கொடுமை.

இந்த திட்டத்தை பற்றிய மேலும் தகவலுக்கு இந்த காணொளியை பாருங்கள்.

4 Replies to “ஓடி விளையாடு பாப்பா..”

  1. அருமையான எழுத்தாக்கம். தொடர்ந்து எழுதவும்

    – சுந்தரேசன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.