நீங்கள் பலமுறை பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த ஊடக மாஃபியாவையும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் கம்யூனிஸ்ட்களையும் நீக்கவில்லை, பாடப்புத்தகங்களில் ஏன் உண்மையான வரலாறு சொல்லப்படவில்லை என்று ஆயிரம் கேள்விகளை இந்த அரசின் மீது விமர்சனமாக வைத்திருப்பீர்கள்.
இன்னும் நம் நாட்டில் கோடிக்கணக்கில் மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வீடில்லாமல், உணவில்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் மோடி அரசு ஏன் மேலே சொன்னவற்றை முக்கியமாகப் பார்க்கவில்லை என்று புரியும்.
நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று அடிப்படைத் தேவைகளுள் (உணவு, உடை, வீடு) முக்கியமானதான வீடு கிடைத்தபாடில்லை. இதை கருத்தில் கொண்டே அனைவருக்கும் தங்க வீடு கட்டுவதற்கான திட்டம் (Pradhan Mantri Awas Yojana) மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்தது.
இது இரண்டு பிரிவுகளுடையது. ஒன்று கிராமப்புற மக்களுக்காக வீடு கட்டும் திட்டம். மற்றொன்று நகரங்களில் அரசு நிலங்களில் வாழும் மக்களை மீள் குடியேற்றம் செய்யும் திட்டம்.
1) பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமீன்)
இத்திட்டத்தின் படி இதுவரை கிராமங்களில் 1.07 கோடி வீடுகளைக் கட்ட நான்கு வருடங்களில் (2014-15 லிருந்து 2017-18 வரை) அரசு உதவியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்படும் வேகம் 314 நாட்களிலிருந்து (இந்திரா ஆவாஸ் யோஜனா) 114 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது பழைய திட்டத்திலிருந்த வேகத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிக வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு முக்கிய காரணம் 2022 க்குள் அனைவருக்கும் இந்த அரசு வீடு கட்டிக் கொடுக்கும் (#HouseforAll) என்று நிர்ணயித்த இலக்கு. அதை சரிபார்க்க சரியான தலைவர் உள்ளதாலேயே அரசு நிர்வாகம் இவ்வளவு திறனோடு செயல்பட்டு ஒரு கோடிக்கு மேல் வீடுகளைக் கட்ட உதவியுள்ளது.
இந்த திட்டத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட உத்தரவிட்டது. இதனால் அதிகம் பயனடைந்த மாநிலங்களில் பீகாரும் உத்திரப் பிரதேசமும் அடங்கும்.
2) பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-அனைவருக்குமான வீடு திட்டம் (நகர்ப்புறம்)
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட உதவும் திட்டம் நான்கு படிநிலைகளை உடையது.
1. “In-situ” Slum Redevelopment (ISSR)
2. Credit Linked Subsidy Scheme (CLSS)
3. Affordable Housing in Partnership (AHP)
4. Beneficiary-led individual house construction/enhancements (BLC)
1) சேரிகளில் வாழும் மக்களை மீள் குடியேற்றம் செய்ய மத்திய அரசு 1 வீட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அளிக்கும். தனியார் பங்கும் உண்டு (ஏனெனில் இத்தனை பேருக்கு வீடு கட்ட அரசு மட்டும் போதாது)
2) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒரு வீட்டிற்கு ₹2.67 லட்சம் interest subsidy ஆக மத்திய அரசு அளிக்கும்.
3) மேலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ₹1.5 லட்சம் ரூபாய் மத்திய அரசு உதவி அளிக்கும்.
4) இதுவும் கிட்டத்தட்ட அதே தான்
இவையனைத்தும் 2022க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு என்ற கனவினாலேயே சாத்தியப்பட்டது. முடியாது என்றோ சோர்ந்தோ போயிருந்தால் காரியம் நடக்காது. நேர்மையையும் தேச சேவையையுமே மனதில் வைத்திருந்தால் மட்டுமே இது போன்ற திட்டங்கள் தோன்றுவதோடு அவற்றை செயல்படுத்த உத்வேகமும் கிடைக்கும்.
இப்படி ஒரு திட்டம் பற்றி பல பாஜக தொண்டர்களுக்கே தெரியாமலும் இருக்கலாம். ஆனால் அனைத்து கிராம மக்களுக்கும் தெரியும். அனைவரும் பயனடைந்ததோடு நில்லாமல் இந்தத் திட்டத்தினை பாராட்டுவது இந்த அரசு இடைத்தரகர்களை ஒழித்ததற்காக தான். யாரும் எந்த இடைத்தரகரையும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய பார்க்க வேண்டாம். நேரடியாக மத்திய அரசு அலுவலகங்களிலோ இணையதளத்திலோ கூட பதிவு செய்ய அரசு அனுமதி அளித்ததன் மூலம் பல கோடி ரூபாய் லஞ்சம்/ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தரக்கட்டுப்பாடு ஆணையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் (2013-2018) இந்தத் திட்டத்தால் 1 கோடியே 96 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் வெற்றியடைந்ததன் மற்றொரு காரணம் திட்டத்தினால் பயன்பெற பயனாளிகள் தங்கள் வீட்டின் முன் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும். அதோடு பணம் அனைத்தும் இணைய வழியாகவே பயணிப்பதால் இடைத்தரகர்கள்/பண விரயம் மிச்சமாக்கப்படுகிறது.
இந்தத் திட்டமும் அரசின் பிற திட்டங்களான கழிவறை வசதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு ஆகிய திட்டங்களின் கூட்டு முயற்சியினால் பயனாளிகள் முழுப் பயனையும் அடைய முடிகிறது
இவ்வளவு அருமையான திட்டங்களால் பயனடைந்த மக்கள் உத்திரப் பிரதேசம், பீகாரில் மட்டுமே இல்லை தமிழகத்திலும் அதிகமாவே உள்ளனர். முன்னேறிய மாநிலமான கேரளாவில் மட்டும் கிராமங்களுக்கான திட்டத்தில் வெறும் 12000 வீடுகளே கட்டப்பட்டன (ஆட்கள் இல்லாததால்).
மேலும் தகவலுக்கு கீழ்காணும் காணொலியை பார்கவும்.