brahmin sambar powder meeran

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆம் பெயரில் தான் எல்லாம் இருக்கறது. பூவை பூவுனு சொல்லலாம், புஸ்பம், புய்ப்பம் இப்படியும் சொல்லலாம்.. அனிதாவை சரிதானும்.. சரி விடுங்க… விஷயத்துக்கு வருவோம்..

சம்பீத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. ப்ராஹ்மணாள் கஃபே என்று பெயரில் இருக்கும் ப்ராஹ்மணாள் என்பதை அகற்றவேண்டும் என்று வழக்கு போட்டு இருக்கிறார்கள். வேற யாரு – திராவிடம்னு பெரு வச்சு இருக்கிற ரெண்டு மூணு லெட்டர் பேட் கட்சிகள். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு அருகில் 100 சதுர அடியில் அமைந்து இருக்கும் “ஸ்ரீ கிருஷ்ணா ஐயர் (பாரம்பரிய ப்ராஹ்மணாள் கஃபே)” மீதுதான் இப்படி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

krishna iyer mess - brahmin's cafe

அடைப்புக்குறிக்குள் இருக்கும் “பாரம்பரிய ப்ராஹ்மணாள்” என்ற இரண்டு வார்த்தைதான் சர்ச்சைக்கு காரணம். அது மற்றவர்களை தாழ்த்தி குறிப்பிடுவதாகவும், அகற்ற கோரிக்கை வைப்பது சமத்துவத்தை நிலைநாட்டவே என்பது திராவிட கட்சிகளின் வாதம். அந்த கட்சிகளை சேர்ந்த சுமார் 100 பேர் ஊர்வலமாக சென்று கடை உரிமையாளரையும், பெயர் பலகைலயில் கருப்பு பெயிண்ட் அடிக்க முயன்றதை தடுத்த போலீசாரையும் மிரட்டியுள்ளனர். ப்ராஹ்மணர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். அங்கே சாப்பிட வந்தவர்களை உள்ளே போக விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

“ப்ராஹ்மணாள் கஃபே” மற்றவர்களை தாழ்த்தி குறிப்பிடுகிறதோ இல்லையோ, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இந்த திராவிட கட்சியினரின் தாழ்வு மனப்பான்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

அனைத்து ஊர்களிலும் இப்படி பெயரிடபட்ட உணவகங்கள் உண்டு. ரெட்டி மெஸ், நாயுடு மெஸ், முதலியார் மெஸ் இப்படி சாதியின் பெயர் கொண்ட உணவகங்கள், மிலிட்டரி ஹோட்டல், முனியாண்டி விலாஸ், முருகன் இட்லி கடை, தலைப்பா கட்டி இப்படி ஒரு குறிப்பிட்ட இனம், பிரிவின் பெயர் கொண்ட உணவகங்கள் தமிழகம் எங்கும் நிறைந்து இருக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் “பாரம்பரிய ப்ராஹ்மணாள்” -கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது திராவிட கட்சிகளின் (குறிப்பிட்ட ஒரு) சாதி மத எதிர்ப்பு அரசியலைத்தான் காட்டுகிறதே தவிர, சாதி ஒழிப்பையோ அல்லது சமத்துவத்தை நிலைநாட்டவோ அல்ல.

‘ஹலால்’ என்று அரபி எழுத்துக்களில் குறிப்பிடாத அசைவ உணவகங்களில் உண்பது இல்லை என்று குறிப்பிட்ட மதத்தினர் கூறுவது பற்றி இவர்கள் வாய் திறப்பது இல்லை என்பதை சாய்ஸில் விட்டுவிடவேண்டியதுதான்.

iyengar bakeryநிற்க, வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. நீதிபதி கூறுகையில், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது இல்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். அங்கு ப்ராஹ்மணர்கள் மட்டுமே உணவருந்த அனுமதி என்று இருந்தால் மட்டுமே உணவகத்தை தடை செய்ய முடியும் என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில்,  ப்ராஹ்மணாள் கஃபே என்று பெயர் இருக்க தடையேதும் இல்லை என்று கூறி இருக்கிறார். ஐயங்கார் பேக்கரி என்று இருக்கும் போது, இதில் தவறேதும் இல்லை என்றும், தானே ரெட்டியார் மெஸ்ஸில் அடிக்கடி சாப்பிடுவதுண்டு என்றும் கூறியுள்ளார்.

கஃபே உரிமையாளர் திரு.கிருஷ்ணன் ஐயர் பேசுகையில் – நாத்திகம் பேசிக்கொண்டு, கடவுளை இழிவு படுத்திய பெரியாரின் சிலை கோவிலுக்கு முன்பு இருப்பது பல கோடி இந்துக்களின் உணர்வை புண்படுத்திகிறது. திராவிட கழகத்தினர் அந்த சிலையை அகற்றினால், தானும் ப்ராஹ்மணாள் என்ற பெயரை நீக்குவேன் என்று ஒரே போடு போட்டு இருக்கிறார்.

periyar srirangam statue

பெயர் பலகையில் கருப்பு பெயிண்ட் அடிக்க முயன்ற பெரியார் பாசறை, பெரியார் திராவிட கழகம் முதலானவர்களிடம் ஒரே கேள்வி.. ப்ராஹ்மணாள் என்ற வார்த்தையை நீக்குவதின் மூலம் சமத்துவம் எப்படி நிலைநாட்டப்படும்?

கர்நாடகத்தில் “Brahmin” பெயருடன் சாம்பார் பொடி விற்பனை செய்யப்படுகிறது. இந்து Eastern Condiments Pvt Ltd என்ற நிறுவனத்துடையது ஆகும். இந்நிறுவனம் பிரோஸ் மீரான் என்ற இஸ்லாமியருக்கு சொந்தமானது.

brahmin sambar powder meeran

ஒரு வேளை அந்த நிறுவனம் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இந்த திராவிட கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது யாவரும் அறிவர்.

2 Replies to ““ப்ராஹ்மணாள் கஃபே” – பெயரில் என்ன இருக்கிறது?”

  1. Justice prevailed.Govt should enact a law to protect rights of people particularly brahmins.Constitution protects all religion equally.The attitude of dravidian parties highly condemnable.

  2. IT IS A ANTI HINDU AND ANTI BRAHMIN PARTYBUT PRO MUSLIM AND CHRISTIAN PARTY HINDUS ARE FOOLS TO VOTE FOR THAT PARTYLOOTERS OF THE COUNTRY

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.