
பிப்ரவரி 14, காதலர்கள் தினம்.
ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள்.
மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை.
இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில்.
அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை இராணுவ செல்வங்கள் பட்ட பாடு தெரியுமா?
இவர்கள் இப்படி சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்க காரணமானவர்கள் அங்கு ரத்தமும் சதையுமாக சிதைக்க பட்டுள்ளனர்.
ஆம். இங்கு அமர்ந்து முகநூல் கொண்டு வசை பாடும் அனைவரையும், பேரிடர் காலங்களிலும் நம்மை காத்து வருகின்றவர்கள் நம் இராணுவ வீரர்கள் தான்.
இந்த கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்பது எவ்வளவு உண்மை ஆகிவிட்டது?
நம்மையும் நம் மண்ணையும், கண்ணை இமைபோல் காத்து வந்த வீரர்களை கொன்று குவித்த கயவர்களுக்கு இத்தனை ஆதரவா? அதுவும் இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணின் வளங்களை கொண்டு வளர்ந்து வெறும் ஒரு சதை பிண்டமாய் உள்ள நடைபிணங்களிடம் இருந்து.
இவை அனைத்தையும் பொறுத்த படியே நாம்?
அது சரி, உலகமே தொலைக்காட்சியில் தெள்ள தெளிவாய் கண்ட ஒரு கொடுமையை, அதை நிகழ்த்தி வந்த ஒரு நயவஞ்சகனை பல ஆண்டுகள் கேள்வி கூண்டில் வைத்து அழகு பார்த்த மக்கள் அல்லவா நாம்? ஆம், மும்பை கொலை வழக்கில் கையும் களவுமாக பிடிப்பட்ட அஜ்மல் கசாப் என்ற மிருகத்தை தான் கூறுகிறேன்.
தேசப்பற்று என்றால் என்ன என்று கூட தெரியாத கூட்டம் தான் இங்கு மிக உண்டு.
தேசியகீதம் பாடினால் தான் தேசப்பற்று உள்ளது என்று நிரூபிக்க வேண்டுமா என்று கேட்கும் மடையர்களும் இங்கு இருக்க தான் செய்கிறார்கள்.
நூறு கோடி மக்களுக்கு மேல் உள்ள இந்த நாட்டில், ஆளுக்கு ஒரு சிந்தனை, மொழி, கலாச்சாரம் என்று எத்தனை பேதம் இருப்பினும், இந்தியன் என்ற ஓர் உணர்வு கொள்ள, தேசப்பற்று உள்ளதென்று பெருமை கொள்ள ஒரு தேசிய கீதம் கூட பாட முடியாத மக்கள் உள்ள பாரதத்தில் நாம் என்ன செய்து நாட்டுப்பற்றை வளர்க்க போகிறோம்?
சமீபத்தில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் நாற்பதற்கும் மேற்பட்ட வீரர்களை நாம் இழந்துளோம். நமக்கோ அவர்கள் வெறும் இராணுவ வீரர்களே. ஆனால் அவர்களது சொந்தங்களுக்கு?
மழலை சிரிப்புடன் அடுத்த விடுமுறைக்கு வருவார் என்று டாடா காட்டிய அந்த பிள்ளைக்கு அப்பாவாக…
தாய்நாட்டை நீங்கள் பேணி காப்பது போன்று நம் குடும்பத்தை நான் பார்த்து கொள்வேன் என்று உறுதியளித்த மனைவிக்கு ஓர் நல்ல கணவனாக…
என் மகன் பட்டாளத்தில் உள்ளான் என்று பெருமை கொள்ளும் பெற்றவர்களுக்கு ஓர் மகனாக…
இதோ வந்ததும் அடுத்து உனக்கு காது குத்தி மொட்டை தான் என்று நம்பி இருக்கும் ஓர் தங்கையின் அண்ணனாக…
அவளின் பிள்ளைக்கு ஓர் மாமனாக…
என்று அனைவருக்கும் அனைத்துவே அவர் ஒருவர் தானே?
நம்மை நம்பி தானே அந்த குடும்பம் தன் சொந்தத்தை எல்லைக்கு அனுப்பியது? இன்று அவர்களுக்கு நாம் எந்த முகத்துடன் ஆறுதல் கூற போகிறோம்?
அவர்களை எவ்வாறு இந்த துக்க செய்தி பாதிக்குமோ என்று நாம் தவித்து கொண்டிருக்கையில், அவர்கள் இறந்த இடத்தில் அவர்களது இரத்தம் காயுமுன் அவரைகளை கொன்ற கயவர்களை குற்றமற்றவர்கள் போன்று சித்தரிக்க எத்திணைக்கும் கூட்டம் இருக்கும் போது என்ன செய்ய??
நம் முன்னோர்கள் எல்லாரும் நாம் நாலு பேருக்கு நல்லது செய்தால் சொர்க்கம் செல்ல வாய்ப்பு உண்டென்று கூறி வளர்த்தார்கள். சொர்கம் என்பது உண்மையோ பொய்யோ, அது முக்கியம் அல்ல. அந்த ஒரு சிந்தனையே மக்களை நல்வழி படுத்தும் என்ற நோக்கமே அதற்கு காரணம்.
ஆனால் இந்த கயவர்களோ நாற்பது பேரை கொன்று குவித்து, அதனால் சொர்க்கம் செல்வோம் என்று நம்பி அளைந்து கொண்டிருக்கிறார்களே, இவர்களை என்ன செய்ய?
அப்படி என்ன ஒரு மத வெறி?
என்னை பொறுத்த வரையில், இது போன்ற கயவர்களை கண்டறிவது கூட சுலபம். ஆனால், நம்மில் ஒருவராய் இருந்து கொண்டு நமது இராணுவத்தையே குறை கூறி பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்களே அவர்களுக்கு தான் முதலில் தண்டனை பெற்று தர வேண்டும்.
படிப்பது மட்டும் இன்றியமையாதது அல்ல. படிக்கும் புத்தகமும் கிடைக்கும் நட்பும் சிறந்து இருத்தல் வேண்டும். இல்லையெனில், இது போன்ற தீயவர்களே பெரிதும் தோன்ற துவங்குவார்கள்.
படிக்கும் புத்தகம் கொண்டே ஒரு குழந்தையின் சிந்தனை செதுக்கப்படுகிறது. தாய்ப்பாலுடன் வீரத்தையும் சேர்த்து ஊட்டி வளர்த்த அந்த காலங்கள் எங்கே? தாய்ப்பால் ஊட்டவே சிந்தனை கொள்ளும் இக்காலம் தான் எங்கே?
பணம், வசதி வாய்ப்பு என்று அளைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தாய் தந்தையும் இதை தவறாமல் சிந்தையில் வைத்து தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
அன்று தன் சுயநலத்திற்காக தீய சக்திகளிடம் கையேந்தி சில பிச்சைக்காக தன் நாட்டின் இராணுவத்தினரின் மீதே கற்கள் எறிந்த போதே அவனது பெற்றோர்கள் அவனுக்கு நல்லது எடுத்துரைத்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்குமா? அதை விடுத்து, இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தி மீண்டும் பெரும் பிழையை செய்கின்றனர் சில புல்லுருவிகள்.
இவை அனைத்திலும் ஓர் ஆறுதல் என்னவென்றால், அப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்ட பலரின் நிறுவனங்கள் சுயமாக இந்த இழிசெயலை செய்த ஊழியர்களை தன் நிறுவனத்தில் இருந்து நிறுத்தியதே ஆகும்.
இது அவர்களுக்கு தரும் தண்டனையாக நான் பார்க்கவில்லை. இது ஓர் முன்னுதாரணம். இனி வரும் எந்த ஒரு மக்களும் நம் இராணுவத்தினரின் செயல்களை இழிவு படுத்தினால் என்ன விளைவு என்று தெரிந்து கொள்ளவே இந்த உதாரணம். இது மிகவும் தேவை.
இந்த தருணத்தில் தான் நாம் மிகவும் விழிப்புடன் செயல் படவேண்டும். கத்திக்கு கத்தி, இரத்தத்திற்கு இரத்தம் என்று நாம் என்றுமே திரிந்தவர்கள் அல்ல.
இதற்கு காரணமானவர்கள் யார் என்று உலகமே அறியும். இருப்பினும், சாதுரியமாக செயல்படவேண்டியது தான் ஓர் நல்ல அரசியல் தலைவனுக்கு அழகு.
நாம் அண்டை நாட்டை தீவிரவாத நாடாக அறிவிக்க நாம் உலக நாட்டினை கோருவது ஒரு புறம் இருந்தாலும், அதை ஏன் நாம் முன்மொழிய கூடாது?
பாரத மக்கள் கொதித்து உள்ளார்கள். சமூக வலை தளங்களில் பாகிஸ்தானிற்கு எதிராக மிக பெரிய வெறுப்பு தெரிகிறது. இதுவே தருணம். இதை பயன்படுத்தி நமது அரசு இதை செய்யுமா?
செய்ய வேண்டும். மேலும், நல்லுணர்வு என்று கூறி பல பாக் நாட்டினருக்கு நுழைவு சீட்டு தந்துள்ளது நமது அரசாங்கம். அவர்கள் அனைவரையும் திரும்ப அவர்கள் நாட்டிற்கு அனுப்பவேண்டும்.
இனியும் தீவிரவாதம் மதம் சார்ந்தது அல்ல என்று நம்மை நாமே ஏமாற்றி கொண்டு திரிய கூடாது. இவ்வளவு தெள்ள தெளிவாக வீடியோ எடுத்து ஒளிபரப்பி விட்டு கொன்று குவித்த பின்னும், அவன் மதம் சார்ந்தவன் அல்ல என்று நம்பி கொண்டிருந்தால், நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொண்டதற்கு சமம்.
1947ம் ஆண்டு விதைக்க பட்ட தீய விதை.
என்றோ எவனோ விதைத்த வினை இன்றும் நம்மை தொடர்ந்து நாசமாக்கி வருகிறது.
இதற்கு தீர்வு வெகு விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் விடைபெறும்,
உங்கள் மகேஷ்.