சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து.

ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன?

மிசோரம் மாநிலத்தில் கணிசமாக வாழ்ந்து வந்த பழங்குடியினர் “ப்ரூ”க்கள்(அ)”ரியாங்”கள். இவர்கள் இந்து பழங்குடியினர் என்பதால் பெரும்பான்மையாக இருந்த கிறிஸ்தவ மிசோக்கள் அருவருப்பாக பார்த்து இவர்களை இழிவாக பேசி, ஒதுக்கினர். அதோடு நில்லாமல் இவர்கள் மாநிலத்தின் இனத்தை சார்ந்தவர்கள் இல்லை என்று கூறி இவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று மிசோ இளைஞர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

அதோடு ப்ரூ பழங்குடி வசித்த காட்டுப் பகுதியை அரசாங்கம் வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததால் அவர்கள் தீ மூட்ட விறகு கூட வெட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அது போக ப்ரூ பழங்குடியினர் ஒரு இளம் மிசோ வனத்துறை அதிகாரியை கொன்றதாக 1997ல் அவர்களின் வீட்டிற்கு தீ வைத்து, கொன்று, கற்பழித்து, வெறியாட்டம் ஆடினர் கிறிஸ்தவ மிசோக்கள். இதனால் ப்ரூ சமூகம் திரிபுராவின் முகாம்களில் குடியேறியது.

அவர்களும் முகாம்களில் இருந்தே வாக்களிக்கக் கூடாது என்று சில என்ஜிஓக்கள் பிரச்சினை வேறு செய்தன. தேர்தலில் பல குளறுபடிகள் நடந்தன.

இப்பிரச்சினைகளுக்கு அரசு என்ன தீர்வு கண்டது?

2 வருடங்களுக்கு முன் 3000 குடும்பங்களை மிசோரத்தில் மீள்குடியேற்றம் செய்தது(எல்லாரையும் போக சொன்னார்கள் ஆனால் 3000 குடும்பங்கள் மட்டுமே அங்கே சென்றன). காரணம்:- அங்கே அரசுப் பள்ளிகள் இல்லாததால் மிஷனரி பள்ளிகளிலேயே படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட மக்களும் மிசோக்களால் இன்னும் அந்நியர்களாகவே பார்க்கப்பட்டனர்.

இப்போதைய ஒப்பந்தம் சொல்வது என்ன?

தற்போது இருக்கும் மக்களின் எண்ணிக்கை 34,000(5300 குடும்பங்கள்)

1)₹600 கோடி செலவில் ப்ரூ மக்கள் நிரந்தரமாக திரிபுராவிலேயே வாழ ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40×30 ப்ளாட்டில் வீடு கட்ட நிலம் வழங்கப்படும். அதற்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் ₹1.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

2) ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹4 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட் அரசு வழங்கும். மாதம் ₹5000 அரசு வழங்கும்.

3) அவர்களுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.

4) இதற்காக ₹1.5 கோடி ரூபாயை கூடுதலாக மத்திய அரசு திரிபுரா அரசுக்கு தருகிறது.

இது மதம்-இனம் சம்பந்தமான பிரச்சினை. சக மனிதர்களை ஒரு குறிப்பிட்ட சாதி, மதத்தில் பிறந்ததால் இழிவாக பார்க்கும் இழிவான மனநிலை (இதைக் குற்றஞ்சாட்டி மதம் மாறுபவர்களின் நிலையில் ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தான் தலித்களாக கிறிஸ்தவர்களானவர்களும் இட ஒதுக்கீடு கோருகின்றனர்).

மேலும் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியால் அவர்கள் 2018ல் மிசோரம் சென்று வாக்களித்து வந்தனர்.(நீங்கள் ஊகிப்பது சரி-பாஜகவுக்கு தான். அதனால் தான் 2013ல் 0.38% இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2018ல் 8% ஆக உயர்ந்தது. இதுவும் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாக ஒரு காரணம். ப்ரூ மக்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க முற்பட்ட பாஜகவுக்கு முன்கூட்டியே வாக்களித்த நன்றிக்கடனை மறவாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது)

இந்தப் பிரச்சினை வெடித்த போதும் சரி இப்போதும் சரி ஊடகங்கள் அமைதி காத்து அவர்களுடைய என்ஜிஓ கிறிஸ்தவ முதலாளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர்.(இது குறித்து 1997ல் எத்தனை பேருக்கு தெரியும்?)

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு ஒரு இனத்தின் அடையாளத்தை, வாழ்வாதாரத்தை உயர்த்திய மத்திய அரசுக்கே ப்ரூ சமூகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகமும் கடமைப்பட்டள்ளது.

ரவீந்திரன் துரைசாமி சொன்னது சரிதான்-சமூகநீதியை மீண்டும் நிலைநாட்டிவிட்டனர் மோடியும் அமித் ஷாவும்

 

Original article : swarajyamag.com

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.