மஹாபாரதத்தில் தருமர் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அந்தளவு துரியோதனும் முக்கியம்.  ஒருமுறை தருமரையும் துரியோதனையும் வெளியே சென்று நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார்களாம். தருமர் திரும்பி வந்து நாட்டில் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்றாராம்.  அதே ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த துரியோதனன் நாட்டில் எல்லா பயலுமே கெட்டவர்கள் என்றாராம். ஒரே நாடு, ஒரே மக்கள் ஆனால் இருவர் பார்வையிலுமே வெவ்வேறாகத் தெரிந்தது. ஏன்? எல்லோரையும் தன்னைப் போலவே நம்புவது மனிதனின் உளவியல். 

இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டை தருமரும் துரியோதனும் பார்த்தால் என்ன சொல்லியிருப்பார்கள்?

பட்ஜெட்: வருட வருமானம் ஐந்து லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது.

தருமர்:  மாதம் 44 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனும்போது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்த வரம்பிற்குள்தான் வருவார்கள். 5 லட்சம் வரை வரி கிடையாது எனும்போது அவர்களுக்கு ரூ.12,500/- மீதமாகும். மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் என்பது மத்திய தர, கீழ் மத்தியதர வர்கத்தினருக்க்கு பெரிய தொகையாகும்.  இது மக்களுக்கு நல்ல செய்தி

துரியோதனன்:  அய்யகோ, 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 12,5000/- வரி இருந்ததால் இதனைத் தவிர்க்க நடுத்தர மக்கள் பி எஃப், சேமிப்பு பத்திரங்கள் என பணத்தை சேமித்து வந்தனர். இப்போது வரி கட்ட வேண்டியதில்லை என்பதால் சேமிக்க மாட்டார்கள். மக்களைப் பெரிதும் பாதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஹிந்துத்தவ ஃபாசிச அரசு.

பட்ஜெட்:  சகாய விலையிலான வீடு கட்டம் திட்டத்துக்கு வரி விலகு நீட்டிப்பு

தருமர்:  நடுத்தர மக்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.

 

துரியோதனன்:  அய்யகோ, வீடு கட்டி வாடகைக்கு விட்டு அதை நம்பிப் பிழைக்கும் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? சொந்த வீடு வைத்துள்ள ஏழை மக்கள் மற்றும் வாடகை வீட்டுக்குப் பட்டா வைத்துள்ள எளிய மக்களைக் கசக்கிப் பிழியும்  பட்ஜெட்.

பட்ஜெட்:  99,300 கோடி ரூபாய்கள் கல்விக்காக ஒதுக்கீடு

தருமர்: நாட்டில் கல்வித் தரத்தை உயர்த்தும்.  மாணவர்களின் அறிவுத்திறனை உயர்த்தி வாய்ப்புக்களை அதிகரிக்கும்.

துரியோதனன்: அய்யகோ, கல்வியை காவிமயமாக்க ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடுகிறதே ஹிந்துத்துவ அரசு.

பட்ஜெட்:  ஸ்டார்ட்-அப்புகளுக்கான வரிச்சலுகைகள் அதிகரிப்பு

தருமர்:  புதிய துறைகளில் சுயதொழில் துவங்க முன்வரும் இளைஞர்களுக்கு உத்வேகமாக அமையும்.  இதன்மூலம் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழி பிறக்கும்

துரியோதனன்:  பார்ப்பன பனியா கும்பலுக்கு மட்டுமே வரிச்சலுகை கொடுக்கும் ஹிந்துத்தவ அரசை எதிர்ப்போம்.

பட்ஜெட்:  நிலுவையிலுள்ள சுமார் ஐந்து லட்சம் வருமான வரி சம்மந்தமான தாவாக்களில் வரியை மட்டும்  கட்டினால் போதும், அபராதத் தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை.

தருமர்:  வரிகட்டுவோரின் சிரமம், நேரம் விரயமாவது தவிர்க்கப்படும்.  வழக்கு செலவுகளும் குறையும்.

துரியோதனன்:  பார்த்தாயா டோலர், ரஜினிகாந்துக்குக் காட்டிய சலுகையை நாட்டில் காவியை ஆதரிக்கும் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது இந்த அரசு.

பட்ஜெட்:  வருமான வரிகளுக்கு இதுவரை உள்ள 70க்கும் மேற்பட்ட விலக்குகள் நீக்கப்பட்டுகின்றது

தருமர்:  இந்த விலக்குகள் எல்லாம் மெத்தப் படித்தவர்களும் வசதியானவர்களும் ஆடிட்டர்களை அமர்த்திக் கொள்ள முடிபவர்களும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். இவைகள் நீக்கப்பட்டு வெளிப்படையான நேரடியான வரி விதிப்பு முறை இந்த பாரபட்சத்தை நீக்கும்.

 

துரியோதனன்: பார்த்தாயா டோலர், இனிமேல் சார்ட்டட் அக்கவுண்டண்டுகள் வேலையில்லாமல் பாதிக்கப்படுவார்கள்.  ஏழை எளிய சார்ட்டட் அக்கவுண்டண்டுகளை பாதிக்கும் இந்த பட்ஜெட்டை எதிர்ப்போம்.

பட்ஜெட்:  ஜி எஸ் டி படிவங்கள் இன்னும் சுலபமாக்கப்படும்

தருமர்:  இதன்மூலம் சிறிய நடுத்தர நிறுவனங்கள் ஜி எஸ் டி படிவம் சமர்ப்பிப்பது சுலபமாகும். இதனால் அவர்களது சுமை குறையும்.

துரியோதனன்: ஏமாந்து விடாதே டோலர், மறைமுகமாக இந்த அரசு சரக்கு மற்றும் சேவை வரியை எல்லா துறைகளிலும் திணிக்கிறது. இனிமேல் சமூக சேவை செய்தால் கூட வரி வாங்குவார்கள்.

பட்ஜெட்:  தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் நன்கொடைகள்  உங்கள் வருமான வரிக் கணக்கில் தானாகவே சேர்க்கப்படும்.

தருமர்: இனி நன்கொடைகளின் ரசீதுகளைப் பெற்று அவற்றை வருமான வரிப் படிவத்தில் ஒவ்வொன்றாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.  நன்கொடை கொடுக்கும்போது உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டால் போதும். ரசீது தேவையில்லை. உங்கள் வருமான வரிக்கணக்கில் அது சேர்க்கப்படும்.

துரியோதனன்:  இது சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட சதி. இனி நீங்கள் யாருக்கு என்ன நன்கொடை கொடுக்கிறீர்கள் என்பதை மோடி அரசு கண்காணித்துக் கொண்டேயிருக்கும். இதனால் சிறுபான்மையினர் அச்சத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.  இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து வரும் திங்கள் கிழமை 3 லட்சம் கி மீ தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

பட்ஜெட்:  முகமில்லா வருமான வரிக்கணக்கு பரிசீலனையானது மேல்முறையீட்டுக்கும் நீட்டிக்கப்பட்டு முகமில்லா முறையீட்டுத் திட்டம் அமல்.

தருமர்:  தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் சட்டத்தின் ஷரத்துக்களை பலவிதங்களில் அர்த்தப்படுத்திக் கொள்வதும் தவிர்க்கப்படும்.  பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு குறையும். ஊழல் ஒழியும்.

துரியோதனன்:  இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மோடி பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பது இல்லை. அதே போலவே அதிகாரிகளும் மக்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்ற ஹிட்லரின் கொள்கைகளை அமல்படுத்துகிறது.  இதனை எதித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நாளை தொடங்கும்.

 

போதுங்க, இவிங்க ரெண்டு பேரும் பேசிக்கறதைக் கேட்டா தலை சுத்திருச்சி. இத்தோட நிறுத்திக்கறேன்.

 

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.