குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை கொஞ்சம் அறிவார்ந்த விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம்.

என்ன தான் சொல்லியிருக்கு இந்த திருத்த சட்டத்தில்?

இந்த திருத்த சட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் மத ரீதியாக தினமும் துன்புறுத்தப்படும், அந்தந்த நாடுகளில் மைனாரிட்டி மக்களாக வாழும் இந்து, கிருத்துவர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமை பெரும் முறையை சற்று தளர்த்தியுள்ளது. சற்று கூர்ந்து கவனித்தால், அங்கிருந்து வரும் எல்லா மைனாரிட்டி மக்களுக்கும் உடனே குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லப்படவில்லை. டிசம்பர் 2014-க்கு முன்னாக வந்தவர்களே இந்த திருத்த சட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

அப்படியா? எதனை பேர் அப்படி வந்துள்ளார்கள்?
இந்துக்கள் – 25447, சீக்கியர்கள் – 5807, பௌத்தர்கள் – 2, கிருத்துவர்கள் – 55, பார்சிகள் – 2. ஆக மொத்தம் சுமார் 32000 பேர் மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் இன்றைய நிலைமையில் குடியுரிமை பெறுவார்கள்.

இந்த திருத்த சட்டம் முஸ்லிம்களை குறிப்பிடவில்லை. அதனால் இங்குள்ள அனைத்து முஸ்லிம்கள் குடியுரிமை இழப்பார்களா?
இந்த கேள்வி, மக்களை குழப்புவதற்க்காக இங்குள்ள சில அரசியல் கட்சிகளால் பரப்பப்படுகிறது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது விஷயம் இதுதான். இந்திய குடியுரிமை பற்றி இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் எந்த வரையறையையும் இந்த திருத்த சட்டம் மாற்றவில்லை. அப்படியிருக்க, எப்படி இந்த கேள்வி எழுகிறது? அதனால் இது முற்றிலும் தவறான பிரச்சாரம்.

பாகிஸ்தானில் சில முஸ்லிம்களும் பாதிக்கப்படலாம் அல்லவே? மனிதாபிமான அடிப்படையில் நாம் அவர்களுக்கும் தஞ்சம் வாழங்க வேண்டுமே? இந்த சட்டம் அதை தடுக்கிறதாக சொல்கிறார்களே?
ஏற்கனவே சொன்னபடி, தற்போதிருக்கும் இந்திய குடியுரிமை சட்டத்தில் உள்ள எந்த பகுதியும் நீக்கப்படவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், இந்த சட்டத்தால் ஒரு முஸ்லீம் குடியுரிமை பெற முடியாது என்று இந்த சட்டம் சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கும் முறைகளில் அவர்கள் முயற்சிக்க தடை இல்லை. இங்கு நாம் சில கேள்விகள் கேட்க வேண்டும். இஸ்லாமிய நாடக அறிவிக்கப்பட்ட நாட்டில் ஏன் ஒரு இஸ்லாமியர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளவார்? மதத்தின் அடிப்படியில் நாடு வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள் ஏன் திரும்பி இந்தியா வரவேண்டும் என்று நினைப்பார்கள்? இதெல்லாம் யதார்த்தமான வாதமாக தெரியவில்லை.

பிறகு ஏன் தான் இந்த போராட்டங்கள்? இந்த போராட்டங்களில் வைக்கப்படும் வாதம், இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று. இந்த சட்ட திருத்தம் ஏற்கனவே இருக்கும் இந்திய குடியுரிமை பெறும் வழிகளை நீக்கிவிடவில்லை. அதனால் இந்த குழப்பம் சில அரசியல் கட்சிகளால் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாக்குகளை பெற வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. இதற்கும் ஒரு படி மேல் பொய், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை கேட்கின்றனர். இதை என்னவென்று சொல்வது?

நியாயமாக பார்த்தால், இந்த போராட்டத்தில் ஈடுபடும் கட்சிகள், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிடம், உங்கள் நாட்டிலுள்ள மைனாரிட்டி மக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள் என்று கேள்வி கேட்க வேண்டும். ஒருமுறையாவது கேட்டார்களா? அதை விட்டுவிட்டு, துன்புறுத்தும் மக்களுக்கும் சேர்த்து குடியுரிமை கேட்கிறார்கள். ஏன் இந்த வாக்கு வாங்கி அரசியல். நியாயமான விவாதத்தில் ஈடுபடாமல் நாட்டை ஏன் பற்றி எரியவைக்கிறார்கள்? நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது.

 

மன்னா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.