இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க?  பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க   உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி.

 

செய்தி என்பது என்ன?  எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?  டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததாக ஒரு புலம்பல். பல்கலைக்கழகம் என்ன தனி நாடா அனுமதி பெற்று நுழைவதற்கு? ட்விட்டரில் லட்சக்கணக்கானோர்  தொடரும் ஒரு அறிவாளி. அவர் ட்வீட்டுகிறார் – சட்டப்படி துணை வேந்தர் அனுமதியின்றி நுழையக்கூடாது. எந்த சட்டப்படி என்று கேட்டவுடன் அந்த ட்வீட்டையே டெலிட் செய்துவிடுகிறார். வாட்ஸப்பிலும் ட்விட்டரிலும் வருவதை நம்பும் முட்டாள்தனம் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

இதைவிட மோசமானது இந்தியா டுடே இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி.  அந்தச் செய்தி என்னவென்று சொல்வதற்கு முன்னர் ஒரு கேள்வி — என் வீட்டுக்குள் இந்தியா டுடேவின் காமிராமேனும் நிருபரும் அத்துமீறி நுழைந்து சமையலறைக்குள் புகுந்து என் பாட்டி சுட்டிருந்த வடையை இவர்கள் சுட்டுக் கொண்டு போய்விட்டனர் என்று நான் பேட்டி கொடுக்கிறேன்.  இதைப் பிரசுரிப்பார்களா? ஆதாரம் எங்கே என்று கேட்க மாட்டார்களா?

 

இந்த லிங்கில் உள்ள செய்தியைப் பாருங்கள்.

 

 

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly93d3cuaW5kaWF0b2RheS5pbi9pbmRpYS9zdG9yeS9jaGFuZGlnYXJoLXB1bmphYi11bml2ZXJzaXRpZXMtY2FhLWNhYi1qYW1pYS1taWxpYS0xNjI4ODgwLTIwMTktMTItMTciLCJpbWFnZV9pZCI6LTEsImltYWdlX3VybCI6Imh0dHBzOi8vYWttLWltZy1hLWluLnRvc3NodWIuY29tL2luZGlhdG9kYXkvaW1hZ2VzL3N0b3J5LzIwMTkxMi9JTUctMjAxOTEyMTYtV0EwMDMzLTY0N3gzNjMuanBlZz92MDRiM19mVG9CR1ptc2w4RFZDbG1SSHJnck4uMnEydCIsInRpdGxlIjoiQW50aS1DQUEgc3RpcjogMiBwcm9taW5lbnQgdW5pdmVyc2l0aWVzIGluIFB1bmphYiBqb2luIGFnaXRhdGlvbiBpbiBzb2xpZGFyaXR5IHdpdGggSmFtaWEiLCJzdW1tYXJ5IjoiU3R1ZGVudHPigJkgYWdpdGF0aW9uIG92ZXIgdGhlIENpdGl6ZW5zaGlwIEFtZW5kbWVudCBCaWxsIGVzY2FsYXRlZCBvbiBUdWVzZGF5IGFzIHVuaXZlcnNpdGllcyBhbmQgY29sbGVnZXMgYWNyb3NzIEluZGlhIHRvb2sgdG8gdGhlIHN0cmVldHMgdG8gYmFjayBKYW1pYSBzdHVkZW50cy4iLCJ0ZW1wbGF0ZSI6InVzZV9kZWZhdWx0X2Zyb21fc2V0dGluZ3MifQ==”]

 

டில்லி போலீஸ் அத்துமீறி பெண்களின் ஹாஸ்டலில் நுழைந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பேட்டி என்ற பெயரில் பொய்ப்பிரச்சாரம். அதுவும் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கிடையாது.  பஞ்சாப் பல்ககைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அமைப்பின் தலைவராம். ஆனால் இதன் உண்மைத்தன்மையைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இதனையும் பிரசுரித்திருக்கிறது இந்தியா டுடே பத்திரிக்கை.  

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் ஜமியா மிலியா இஸ்லாமியா  ( ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியா பல்கலைக்கழகமா என்று கேட்டால் நீங்கள் ஒரு ஹிந்து தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.  ஹிந்து பல்கலைக்கழகம் மட்டும் இருக்கலாமா என்று கமெண்ட் போடுபவன் சுத்தமான 24 காரட் 200ரூபாய் உபி என்று அறிந்து கொள்க ) பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.  அதென்னங்க இந்தப் போராட்டங்களெல்லாம் ஐ ஐ டி, ஐ ஐ எம், எய்ம்ஸ் போன்ற இடங்களில் நடப்பதேயில்லை? டில்லியில் கூட டில்லி பல்கலைக்கழகத்தில் இத்தகைய போராட்டங்கள் நடைபெறுவதேயில்லை.  ஒருவேளை இந்த ஐ ஐ டி மாணவர்களெல்லாம் பி ஏ ( ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்) போன்றவற்றைப் படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் குறைவானவர்களா? ஒருத்தரும் ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும். அப்புறம் ஏங்க இந்த வித்தியாசம்?

 

இங்கே கூட பாருங்க பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எந்தப் போராட்டத்திலுல் ஈடுபடுவதில்லை —  தங்களுக்கு அலவன்ஸ் உயர்த்த வேண்டும், மேற்படிப்பில் இடமளிக்க வேண்டும் என்பது போன்ற தங்களது துறை சார்ந்த போராட்டங்கள் தவிர.  

 

இதைப் பாக்கும்போதே எங்கேயோ உதைக்குதேன்னு தெரியுதில்லையா?

 

சரி, இப்போ அந்த பொய்ப்பிரச்சாரத்துக்கு வருகிறேன்.  இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது, முஸ்லீம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று ஒரு பெரிய பிரச்சாரம் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.  

 

ஏற்கெனவே கேட்டதுதான்.  பாக்கிஸ்தானிலோ ஆஃப்கானிஸ்தானிலோ பங்களாதேஷிலோ ஒரு முஸ்லீம் தன் மதத்தைப் பின்பற்றுவதில் எதாவது தடை இருக்கிறதா? இதே நாடுகளில் ஒரு ஹிந்து, சீக்கியர், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினர் தங்கள் மதத்தைப் பின்பற்ற ஏராளமான தடைகள் இருக்கின்றன என்பது உண்மையா இல்லையா?

 

ஆக, ( இந்த வார்த்தையை உபயோகிக்காதே என்று என்னைத் தடுக்க முடியாது )  ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் போன்றோருக்கு எதாவது சலுகை அளித்தால் அது முஸ்லீம்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போன்ற ஒரு பிம்பம் நாட்டிலே எதிர்க்கட்சிகளாலும் மறைமுக தேசவிரோத சக்திகளின் ஆதரவில் போராட்டங்களை எடுத்துச்செல்லும் டுமீல் போராளிகளாலும்  நாட்டிலே உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதோ ஒரு பகீங்கரமான சவால்.  குடியுரிமை சட்டத்தில் முஸ்லீம்களுக்குக் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று ஒரு வரி இருந்தால் கூட ஒரு கோடி பரிசு கொடுக்கப்படும்.  சவாலை சந்திக்கத் தயாரா? யாரானாலும் சர்வாதிகாரியாக இருந்தால் மட்டும் போதாது, சர்வ அறிவும் பெற்றிருக்க வேண்டும். அதிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் பெறலாம், அறிவைப் பெற காலம் உண்டு. பருவத்தே பயிர் செய்ய வேண்டும், இல்லையென்றால் அறிவாளியின் விஞ்ஞானியின் தத்துவ ஞானியின் மகனாக இருந்தாலும் அறிவைப் பெற முடியாது என்பது அறிவியல். 

மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன் – குடியுரிமை சட்டம் 2019 மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி பாக்கிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் & பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இங்கு தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகை செய்கிறதே தவிர முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை எக்காலத்திலும் மறுக்கவில்லை. மற்ற மதத்தினருக்கு கருணை காட்டினால் அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று கருத்தை எதிர்க்கட்சிகள் விதைப்பது தேச ஒற்றுமைக்கே எதிரானது.  இது பிற மதத்தினரை எல்லாம் முஸ்லீம்களுக்கு எதிரானதாகத் திருப்பக் கூடிய ஆபத்து நிறைந்தது. ஆனால் தேச ஒற்றுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இத்தகைய தேசவிரோத மக்கள் விரோத போராட்டங்களில் இறங்கியுள்ளது கவலையளிக்கிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.