தமிழக பாஜக ஆதரவாளர்கள் ஆகிய நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சமீபத்திய
தேர்தல் தோல்விக்கு எதிர்க் கட்சிகளின் பொய் பிரச்சாரம், தமிழக பாஜக தலைவர்களின்
அசட்டை,அரசியல் செய்யத் தெரியாமை, narrative ஐ தங்களுடைய கைக்குள் வைத்துக்
கொள்ளாதது (ஆனால் பிற மாநிலங்களில் பாஜக தான் அந்த narrativeஐ தங்களுடைய
கைகளில் வைத்திருந்தன), எப்போதும் தற்காத்தே அரசியல் செய்தது, மேற்கு வங்காள
மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை வெகுஜனங்களிடம் இங்கே ஏற்படுத்தாதது, மிக
முக்கியமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஐடி விங் ஐ உபயோகப்படுத்தாதது
(கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும்) என்று பல காரணங்களை அடுக்கிக்
கொண்டே போகலாம்.
ஆனால் இவற்றை எல்லாம் விட்டுவிடலாம். ஏனெனில் இவை எதையும் நம்மால்
கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கட்சிக்காக அரசியல்
பேசும் நாம் செய்யக்கூடாததை செய்தோம்?
1) ஒரு தலைமை அல்லது குழு மனப்பான்மை நம்மிடம் இல்லை.
2) சாதி சார்ந்த நம் கண்ணோட்டம்.
3) திராவிடத்தை குறைத்து மதிப்பிட்டது.
இவை அனைத்தையும் எ.கா உடன் பார்ப்போம்.
முதல் பாயிண்ட் தான் நாம் மொத்தமாக கோட்டை விட்டது. இதை பாஜகவுக்கு எதிராக
அவர்கள் ட்ரெண்ட் செய்த #GobackModi #ஆத்தோடஅடிச்சிட்டுபோயிடபடாதா ஆகிய
டேக்களில் பார்க்கலாம்.
இதை ஆரம்பித்தவர்கள் திமுக இணைய கூட்டம் கூட இல்லை. யாரோ போகிற
போக்கில் சொன்னதை எவ்வளவு organised ஆக ட்ரெண்ட் பண்ணாங்க? ஆனால் நாம்
ஒரு டேக் லயே underscore போடறது spelling mistake விடறது என்று எவ்வளவு
தவறுகள்!
2&3 வதில் உள்ள சிக்கல் தான் இங்கே மோடி-அமித் ஷா பாஜக ஆட்சியிலேயே இல்லாத
மாநிலங்களில் (உபி, மகாராட்டிரம், ஹரியானா) பெரு வெற்றி பெற உதவிய positive
social justice or social engineering.
இது எப்படியானது என்றால் 50 ஆண்டு காலமாக ஜாட் ஆதிக்கத்தில் இருந்த ஹரியானா
மாநிலத்தில் ஒரு பஞ்சாபி பனியாவை முதல்வராக்கும் சக்தியை கொண்டது.
உத்தரபிரதேசத்தில் அதிகாரமற்ற சாதிகளை பாஜக தங்கள் பிடிக்குள் கொண்ட வந்ததன்
மூலமே மகாகட்பந்தன் செய்த அரசியலையும் மீறி 60 இடங்களை வெல்ல உதவியது.
நாம் செய்ய தவறிய முதல் விஷயம் தலித் மக்களை கண்டுக்காம விட்டது. அந்த
கௌசல்யா புருசனை சாதி வெறியர்கள் கொன்னப்ப இந்துத்துவ அமைப்புகள் மற்றும்
நாம் அவளோட இருந்திருந்தால் அந்த அப்பாவி பெண் சக்தி என்னும் பொம்பள
பொறுக்கியை கல்யாணம் செய்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
அந்த சமயத்தில் அவங்களுக்கு தேவைப்பட்ட மன ஆறுதலை திராவிடம் தான் வழங்கியது.
ஆனால் அவள் கணவன் இறந்த போதும் சரி அதன் பின்னரும் சரி நாம் நின்றது அந்த
பெண்ணின் கொலைகார பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடன் என்பதை
மறக்காதீர்கள்.
இப்படிக்கு,
தங்களில் ஒருவன்,
சோப்பு டப்பா.
நாம் செய்ய தவறிய முதல் விஷயம் தலித் மக்களை கண்டுக்காம விட்டது. அந்த
கௌசல்யா புருசனை சாதி வெறியர்கள் கொன்னப்ப இந்துத்துவ அமைப்புகள் மற்றும்
நாம் அவளோட இருந்திருந்தால் அந்த அப்பாவி பெண் சக்தி என்னும் பொம்பள
பொறுக்கியை கல்யாணம் செய்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பிண அரசியல் நடத்தவில்லை தம்பி. செத்ததை சாதகமாக்க தெரிந்திருந்தால் பிஜேபி வேறு பாதையில் பயணித்திருக்க முடியும். ஜாதி வெறியை வைத்திருக்கும் சமுதாயத்தில் புரட்சி புண்ணாக்கு பண்ணுவது கத்தியை கொண்டு நகம் வெட்டுவது போல். நகம் போனால் முளைக்கும் விரல் போனால்?
அந்த சமயத்தில் அவங்களுக்கு தேவைப்பட்ட மன ஆறுதலை திராவிடம் தான் வழங்கியது.
ஆனால் அவள் கணவன் இறந்த போதும் சரி அதன் பின்னரும் சரி நாம் நின்றது அந்த
பெண்ணின் கொலைகார பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடன் என்பதை மறக்காதீர்கள்.
மன ஆறுதல் திராவிடம் தந்ததா, எப்படி தவறான நட்புக்கள் வளர உதவியதாலா? இந்து சமய
வழிப்பாட்டில் மனதை ஒருநிலை படுத்தி இறந்த சங்கரின் குடும்பத்தை நிர்கதியாக வைத்திருக்க உதவி யார் செய்தாலும் சாமியாரிணி ஆக்கறதுக்கு வந்துட்டாங்க என்றுதான் செய்திகள் வரும்.நேரம் கொண்டு சிந்தியுங்கள், பெற்றோரின் நிலையிலிருந்தும் மற்றோரின் நிலையிலிருந்தும்.
பெற்றோர் நிலையிலிருந்தே எல்லாரும்(காவிகள்) பார்த்ததாலேயே இவ்வளவு பிரச்சினையும் என்பது எனது தாழ்மையான கருத்து
(எனக்கு வயதில்லை எனினும் சொல்ல வேண்டிய கருத்து) சுதந்திரமாக வாழ்க்கை துணையை தேடும் அளவுக்கு பெண்ணை அனுமதிச்சு(அதாவது அந்த அளவுக்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தி) பின் அவள் செய்த பின் மறுப்பது வீண்(மறுக்க உரிமை உண்டு) ஆனால் கொலை தான் செய்வேன் என்றால் உங்களுக்கு உங்க பொண்ணு முக்கியமா இல்லை சாதி முக்கியமா
பெற்ற பின்னே தெரியும் … ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருந்திடக் கூடாதென என் கருத்து.
சுதந்திரம் தந்தமைக்காக தறிகெட்டு திரியக்கூடாது , திருட்டுத்தனமும் கூடாது … பெற்றோரின் நிலை வேறு … கூட இருப்பவர் எத்தனை நாள் இருப்பர் ???
//பெற்றோர் நிலையிலிருந்தே எல்லாரும்(காவிகள்) பார்த்ததாலேயே இவ்வளவு பிரச்சினையும் என்பது எனது தாழ்மையான கருத்து.// ஜாதி இல்லை என்பவன் லூசுக்கூவை , எங்கில்லை சாதி, எதில் இல்லை வேற்றுமை. ஒரு ஜாதிக்கு இன்னொரு ஜாதி உயர்ந்தது, மற்றோன்று தாழ்ந்தது அவ்வளவே அவர்களின் எண்ணம். 100 கோடி வருடங்கள் ஓடினாலும் மாறாதது அது 🙂
//சுதந்திரமாக வாழ்க்கை துணையை தேடும் அளவுக்கு பெண்ணை அனுமதிச்சு(அதாவது அந்த அளவுக்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தி)//
பெத்தவங்க வாழ்க்கையை வாழ சுதந்திரம் தந்தாள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் அவர்களின் நம்பிக்கையை சிதைப்பதும் கொலை தானே? கவுசல்யாவின் சுற்றத்தில் நாளை இன்னொரு பெண்ணை நம்பி அனுப்புவாங்களா கல்லூரிக்கு? உறுதியால் ஒரு சமூகம் பல கேள்விக்குறிகளுடன் அவதிப்படணுமா?
கொலை செய்தது தவறு மறுக்கவில்லை ஆனால் கொலை செய்வர் என்று தெரிந்தும் தான் காதலித்தவனை சாகடித்து போல தான் உள்ளது நடந்தது. ஆணவக்கொலை தவறே ஆனால் அதுக்குன்னு இதை ஒரு கருத்தாக கொள்ள முடியாது. பெற்றவர் ஏற்பாடு செய்த கல்யாணம் தவறென்று தப்பான எடுத்துக்காட்டாகும்.
பொண்ணும் முக்கியம் ஜாதியும் முக்கியம் அதனை விட மனிதமும் முன்னேற்றமும் முக்கியம் … சிந்தியுங்கள் … மேலும் கருத்துகளை பகிர்வோம், நன்றி.
கவுசல்யாவின் சுற்றத்தில் நாளை இன்னொரு பெண்ணை நம்பி அனுப்புவாங்களா கல்லூரிக்கு? //
நீட் தோல்விக்கு அனிதா தற்கொலை பண்ணது போல நம்ம மகன்/மகள் பெயில் ஆனால் தற்கொலை பண்ணிக்க வாய்ப்பிருக்கிறது என்று யாரும் அவங்களை நீட் எழுத வேண்டாம் என்று சொல்வதில்லை எந்த அவநம்பிக்கையும் ஏற்படுவதில்லை!அதுக்கும் உங்க பொண்ணை அனுப்புறதுக்கும் சம்பந்தமே இல்லை
அவன் பொண்ணு அவன் பேச்சை கேக்கலைனா தப்பு அவன் மேல அவன் வளர்ப்பு மேல் (எல்லா பெண்களுமா காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்?)கட்டுப்பாட்டோடு பெண்ணை வளர்க்காமல் தறிகெட்டு திரியவிட்டு கையை விட்டு அவள் தழுவிய பின் அவள் கணவனை கொல்வது எந்த வகையிலும் அவள் எடுத்த (திருமண)முடிவை தவறென நிரூபிக்கப்போவதில்லை
கௌசல்யா அப்பா அவளுக்கு சங்கரை விட மோசமான மாப்பிள்ளையை பார்த்திருந்தால் நிலைமை என்ன?
//இவ்வளவும் செஞ்சுட்டு சாதி பாசத்தை விட முடி
ஜாதி இல்லை என்பவன் லூசுக்கூவை , எங்கில்லை சாதி, எதில் இல்லை வேற்றுமை. ஒரு ஜாதிக்கு இன்னொரு ஜாதி உயர்ந்தது, மற்றோன்று தாழ்ந்தது அவ்வளவே //
அது அவங்க எண்ணம் எனில் அதை கிறிஸ்தவ மிஷனரிகளால் நமக்கு ஏற்படும் ஆபத்தை கூறி மாற்ற வேண்டியதே நாம் செய்ய வேண்டியது
கொலை செய்த அவர்களை நியாயப்படுத்துவது அல்ல
இவ்வளவும் பண்ணிட்டு இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்றால் எவன் சார் மதிப்பான்?
அதான் தேர்தலில் காறி துப்பிட்டான்