
என்னுடைய முந்தைய பதிவிற்கு அளித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
இங்கே நாம் சாதி சார்ந்து இந்துத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் எடுக்கும் இரட்டை நிலைப்பாடுகளை பார்ப்போம்.
கௌசல்யா-சங்கர் பத்தி நான் அந்த பெண்ணின் அனைத்து செயல்களையும் ஏத்துக்கொளள்வில்லை நானும் கவுசல்யா சக்தியை திருமணம் செய்ததை விமர்சித்தவன் விமர்சிப்பவன் தான்.அவள் கணவன் இறந்த பின் அவளின் எந்த ஒரு செயலும் அருவருக்கத்தக்கதாகவே உள்ளன என்பதில் உங்களைப் போல் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
நான் இங்கே சொல்ல வருவது இந்து இந்துத்துவா என்று வாய் கிழிய பேசற நாம அங்கே இறந்ததும் தாலி அறுந்து நிற்பதும் ஒரு இந்து தான் என்பதை கவனிக்கவே இல்லை.
இந்துக்கள் ஒன்றுபடுவதை தடுக்கப் பயன்படுகிற சாதியை நாம் தூக்கி பிடித்து ஆணவக் கொலைகளை ஆதரித்தால் பார்க்குறவன் காறி துப்புவான்(அதை தான் தேர்தலில் மக்கள் செய்தார்கள்)
பொம்மி நாயக்கன் பட்டியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த கலவரதத்துக்கு பொங்கிய நாம் ஒரு சத்துணவு ஊழியர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் அவள் பிற சாதி குழந்தைகளுக்கு உணவளிக்க கூடாது என்று ஆதிக்க சாதியினர் பிரச்சினை செய்த போது நாம் யார் பக்கம் நின்றிருக்க வேண்டும்?
இந்த செய்தி நம்மில் பலருக்கும் தெரியாது காரணம் நாம் இங்கே opinion makers/narrative creators ஆன இணையதள திமுக தொண்டர் படையின் எந்தவொரு பதிவையும் பாலோ செய்வது ஏன் பார்ப்பது கூட இல்லை(நான் இப்ப தான் அதை உணர்ந்தேன்).
இதை தெளிவாக விளக்குறேன:- நம் தமிழ் நாடு,ஆந்திரா,கேரளா தவிர எல்லா இடங்களிலும் செய்தியை நாம் தான் தீர்மானிக்கிறோம்-எ.கா சர் ஜடேஜா,ஃஷேபாலி வைத்யா,நூபூர் ஷர்மா,ரிஷி பாகரி,அன்ஷூல் சக்சேனா, கர்நாடக பாஜக டிவிட்டர் பக்கம் என்று அனைவரும் எதிராளிகள்,ஊடக ப்ரோக்கர்களின் ஒவ்வொரு பொய்யையும் தவிடு பொடி செய்கிறார்கள்.
ஆனால் நாம் நமக்குள்ளே ஒரு வட்டத்தை உருவாக்கிட்டு திமுகவை கலாய்ச்சுட்டு இருந்தோம்.
தமிழக பாஜக செயல்படல அதன் நிர்வாக சீர்திருத்தம் பற்றி வாய் கிழிய பேசற நாம் நமக்குள்ளே செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய தவறிவிட்டோம்.
இதை தெலுங்கானா பாஜகவினர் செய்ததால் தான் அமைப்பு பலம் இல்லாமல் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளை தோற்கடிக்க முடிந்தது.
இப்போதும் திருந்தவில்லை எனில் ரஜினி பக்கம் போகும் மோசமான நிலைக்கு நாம் வந்துருவோம்(இந்து என்று வெளிப்படையாக குரல் கொடுக்கும் பாஜகவே இந்துக்களுக்கு எதிரான சட்டங்களை நீக்குவதில் தயங்கும் போது ரஜினி பாஜக ஆள் என்று நம்புவது சுத்த மடத்தனம்).
இங்கே திமுகவை தோற்கடிப்பது முக்கியமல்ல(அதிமுக ஆளும் 8 வருசத்துல பாலாறும் தேனாறுமா ஓடுது)தாமரையை மலர் வைப்பதே முக்கியம்.
இதை உணரவில்லை எனில் நோட்டாவை பாஜக என்றும் தாண்டப் போவதில்லை.
இப்படிக்கு,
தங்களில் ஒருவன்,
இந்துக்கள் ஒன்றுபடுவதை தடுக்கப் பயன்படுகிற சாதியை நாம் தூக்கி பிடித்து ஆணவக் கொலைகளை ஆதரித்தால் பார்க்குறவன் காறி துப்புவான்(அதை தான் தேர்தலில் மக்கள் செய்தார்கள்)
ஜாதி ஓட்டுகளுக்காக ஜாதி வேட்பாளர்கள் நிற்க வைக்கப்படவே இல்லை … போங்க தம்பி …
பொம்மி நாயக்கன் பட்டியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த கலவரதத்துக்கு பொங்கிய நாம் ஒரு சத்துணவு ஊழியர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் அவள் பிற சாதி குழந்தைகளுக்கு உணவளிக்க கூடாது என்று ஆதிக்க சாதியினர் பிரச்சினை செய்த போது நாம் யார் பக்கம் நின்றிருக்க வேண்டும்?
முதலில் நாம் ஒன்றாகி தலைமையற்று கிடக்கின்றோம், தலைகள் தருதலைகளாக இருக்க, குரல் தருவதற்கு வலைத்தளம் தாண்டி ஒலிக்க வேண்டுமா என்றே கேள்வி.
15 ஆகஸ்ட் ஒரு முஸ்லீம் கோடி எரிக்க போறான் வள்ளுவர் கூட்டத்துல, ஆளனுப்பவும் போராடான்னு சொல்லிட்டு கைதாகி போலீஸ் வண்டியில போறதை லைவ் பீடில் போட தெரிஞ்சவங்கதான் இன்றைய இளைஞர் பாசறை கும்பல். நம்பி அனுப்பி இருந்தா அவனுங்க எதிர்க்கலாம் என்னவாகி இருக்கும்?
நாம் யார் பக்கம் நின்றிருக்க வேண்டும்? அதான் சொல்லிடீங்க நானும் ஒத்துக்கொண்டேன், நம்ம தலைகள் தருதலைகள் என்று, அதனால் நாம் தான் யிர்னகி நின்று செய்திருக்க வேண்டும் ஆனால் மேலே உள்ளதை படித்து ஒருமுறைக்கு பலமுறை சொல்லவும்.
தெலுங்கானா பாஜகவினர் செய்ததால் தான் அமைப்பு பலம் இல்லாமல் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளை தோற்கடிக்க முடிந்தது.
முதலில் கட்சிக்குள் இருக்கும் கோடாரிக்காம்புகளையும் புல்லுருவிகளையும் விலக்கினாலே போதும் !!!
அடுத்து அந்த அமீத் ஷாவையும் மோடியையும் தமிழ்நாட்டில் வந்து எப்படி மற்ற மாநிலங்களில் வெச்சு ஜெயிச்சாங்களோ அப்படி செஞ்சு காட்ட சொல்லுங்க.
இந்தில இருக்கற திட்டங்களை அப்படியே ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லிட்டரேட் பண்ணறது பெரிசில்ல அதை மக்கள் புரியரா மாதிரி கொண்டு போய் சேர்க்கணும். தெருக்கூத்தில் பட்டி தொட்டிகளை அடையலாம் நலத்திட்டங்கள் !!!
அது நம் கையில் இல்லை நான் சொல்லியது தொண்டர்களாகிய நாம் செய்திருக்க வேண்டியது