
நம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது.
இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே?! இவர்களிடம் இருந்து, வேறொரு கட்சிக்கு ஆட்சி மாற்றம் நடந்தது ஓரிரு முறைதான். அப்போதெல்லாம் இவர்கள் எப்படியோ மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள்.
எப்படி?! மக்கள் ஏன் இவர்களை இன்னும் ஆதரிக்கிறார்கள்?! மக்கள் ஆதரிக்கிறார்களா இல்லை குழப்பப்படுகிறார்களா?!
சற்று யோசித்தால், மக்களை குழப்பியே இவர்கள் தனக்குத் தேவையானதை சாதித்துக்கொள்கிறார்கள் என்று புரியும்.
அப்படிக் குழப்பும் உத்திகளில் ஒன்று, “இந்த அரசு, தன்னிச்சையாக இயங்கும் சிபிஐ போன்ற அமைப்புகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது, அவர்கள் வேலைகளில் தலையிடுகிறது” என்பது. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா!
முன்னாள் சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜஸ்டிஸ் M H பேக் (மிர்சா ஹமீதுல்லாஹ் பேக் )
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்த போது, ஆட்கொணர்வு கேஸில் இந்திராவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாராம். அதன் பின் தான், சாதாரண நீதிபதியாக இருந்த இவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு நின்றுவிட்டதா என்ன?! அவர் ஓய்வு பெற்ற பின், மைனாரிட்டி கமிஷனின் தலைவராக 9 ஆண்டுகள் இருந்துள்ளார். அத்தோடு நிற்காமல், நேரு துவங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் டைரக்டராகவும் இருந்தார். அடேங்கப்பா… காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகயை வைத்து என்னவெல்லாம் சாதித்துக்கொண்டதோ?!!
முன்னாள் சிபிஐ டைரக்டர் அஷ்வனி குமார்
இவர் தான் அமித்ஷா கைது செய்யப்படுவதற்கு முக்கிய பங்காற்றியவர். அதுவும் சிபிஐயின் தரப்பிலேயை கைது செய்யப்படுவதை எதிர்த்தும்! இந்த அஷ்வனி குமார், அதற்குப் பின் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார்!
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா
இவர்தான், 1984-ல் நடந்த சீக்கிய படுகொலை பற்றி விசாக்க அமைக்கப்பட்ட ஒரு தனிநபர் கமிட்டியில் இருந்தவர். காங்ரஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர். இவர் 1998-ல் காங்ரஸ் கட்சியினால் இராஜ்ய சபை உறுப்பினர் ஆனார்! இவை போன்ற ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரையில் செல்வாக்கு செலுத்திய ஒரு குடும்பம், இன்னும் தன் தாகம் தீராமல் என்னவெல்லாம் செய்ய எத்தனித்திருக்கிறதோ. ஆண்டவன் தான் இந்தியர்களை இந்த குடும்பத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும்!
Source : @pokershash
Translated by : மன்னா