வந்துட்டேன்னு சொல்லு…(2)

இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை […]

வந்துட்டேன்னு சொல்லு…(1)

விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான். […]

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0

economic package, 20 lakh crores, corona

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]

தருமரும் துரியோதனனும்…

மஹாபாரதத்தில் தருமர் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அந்தளவு துரியோதனும் முக்கியம்.  ஒருமுறை தருமரையும் துரியோதனையும் வெளியே சென்று நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார்களாம். தருமர் திரும்பி வந்து நாட்டில் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்றாராம்.  அதே ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த துரியோதனன் நாட்டில் எல்லா பயலுமே கெட்டவர்கள் என்றாராம். ஒரே நாடு, ஒரே மக்கள் ஆனால் […]

ப்ரூ பழங்குடியினர்..

சில நாட்களுக்கு முன் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ப்ரூ பழங்குடியினர் திரிபுராவிலேயே நிரந்தரமாக வாழ்வதற்கான ஒப்பந்தத்தை மிசோரம், திரிபுரா மாநில முதலமைச்சர்கள், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ப்ரூ பழங்குடியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் நம் வெகுஜன காட்சி, செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எந்த முக்கியத்துவத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, புறக்கணிப்பையே சந்தித்து. ப்ரூ பழங்குடியினரின் பிரச்சினை என்ன? மிசோரம் மாநிலத்தில் […]

குலசை ராக்கெட் ஏவுதளம்

சமீபத்தில் குலசைப் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என ISRO அறிவித்து இருந்தது. சென்ற நவம்பர் 28, 2019 அன்று அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் திரு ஜித்தேந்திர சிங் இதனை ராஜ்யசபாவில் அறிவித்து இருந்தார். சமீபத்தில் ISRO இது பற்றி அறிக்கை வெளியிட்டவுடன் அதனை மீடியாக்கள் அறிவித்து, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் செய்தியைப் பகிர்ந்து இருந்தது. அதன் பின்னூட்டங்களில் எப்போதும் போல சில பொங்கல்களைப் பார்க்க நேர்ந்தது… […]

பொருளாதார மந்தநிலை…

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும்  அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார  மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]

CAA-NRC : நாட்டின் விதியை தீர்மானிக்கிறதா மக்கள்தொகை?

இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. […]

அனைவருக்கும் வீடு (PMAY)

நீங்கள் பலமுறை பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த ஊடக மாஃபியாவையும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் கம்யூனிஸ்ட்களையும் நீக்கவில்லை, பாடப்புத்தகங்களில் ஏன் உண்மையான வரலாறு சொல்லப்படவில்லை என்று ஆயிரம் கேள்விகளை இந்த அரசின் மீது விமர்சனமாக வைத்திருப்பீர்கள். இன்னும் நம் நாட்டில் கோடிக்கணக்கில் மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வீடில்லாமல், உணவில்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் மோடி அரசு ஏன் மேலே சொன்னவற்றை முக்கியமாகப் பார்க்கவில்லை என்று புரியும். […]

தனி மனிதனிடம் இருந்து துவங்கட்டும். . .

” ஜாதிகள் இல்லையடி பாப்பா” இந்த வாக்கு மகான் பாரதியாரின் அமுத மொழிகளில் இருந்து வந்தது. இந்திய நாடு கலாச்சார வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றுபட்ட கூட்டுச்சமுதாயமாக எப்போதும் வளர்ந்து வந்துள்ளதாக வரலாறு பேசியுள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் தாண்டியும் இந்தியா வளர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக ஜாதி என்ற மோசமான விஷயம் காணப்படுகிறது. ஜாதிப்பாகுபாடு குறித்து பல்வேறு வரலாற்று ஆய்வுகள் […]