விளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா?

கடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0

economic package, 20 lakh crores, corona

நேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0. என்னடா பட்ஜெட்டா ன்னு குழம்பாதீங்க! 20 லட்சம் கோடி என்பது மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் பணத்தை விட மிகமிக அதிகம். இது கொரோனா நிவாரணம் என்று சொல்ல முடியாது. கொரோனாவால் கிடைக்க போகும் ஆதாயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கெட்டதிலும் இன்னொரு நல்லது உருவாகும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அது இன்று 100% உண்மையாக போகிறது. […]

தருமரும் துரியோதனனும்…

மஹாபாரதத்தில் தருமர் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமோ அந்தளவு துரியோதனும் முக்கியம்.  ஒருமுறை தருமரையும் துரியோதனையும் வெளியே சென்று நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லவர்கள் கெட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார்களாம். தருமர் திரும்பி வந்து நாட்டில் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்றாராம்.  அதே ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்த துரியோதனன் நாட்டில் எல்லா பயலுமே கெட்டவர்கள் என்றாராம். ஒரே நாடு, ஒரே மக்கள் ஆனால் […]

பொருளாதார மந்தநிலை…

கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு உத்ய கோடக் நாட்டின் மிக வெற்றிகரமான வங்கியாளர்களில் ஒருவர். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கான காரணம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை விளக்கியுள்ளார். இந்திய வணிகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டும், தேவையில்லாத தவறான வழிமுறைகள் என்னும்  அழுக்குகளை வெளியேற்றும் செயல்முறையில் இருப்பதால் அதுவே சமீபத்திய பொருளாதார  மந்தநிலைக்கு காரணம் என்கிறார். இது சுழற்சி மந்தநிலையா அல்லது கட்டமைப்பினால் […]

CAA-NRC : நாட்டின் விதியை தீர்மானிக்கிறதா மக்கள்தொகை?

இப்போதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க துப்பாக்கிகள் தேவையில்லை – மனித உரிமை என்ற பெயரில் கோஷமிடும் கூட்டமே போதும் என்பதை நமது முந்தைய கட்டுரையான மக்கள்தொகைக் கட்டமைப்பு யுத்தத்தில் பார்த்தோம். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சில அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி அகதிகளின் பெருங்கூட்டம் படையெடுத்தது. […]

மகாபலிபுரம் சந்திப்பும் தேசத்தின் வளர்ச்சியும்

சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.   கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு  பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம். ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல […]

என்னடி மீனாட்சி..

வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…  கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்த இருவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீப்ரியா தன்னை ஏமாற்றி விட்டதாகப் பாடுவார் கமல்.  இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று கூறுவது.     ட்ராய் (Telecom Regulatory Authority of India – TRAI) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மொபைல் சேவையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் […]

வசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..

இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும்.  தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான்.  ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா? ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ? யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே! […]

புங்கமரத்து நிழலில் ஒரு காளை

ஒரு காளைமாடு புங்க மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தது.  ஒரு வாரமா அங்கேதான் நின்று கொண்டிருக்கிறது. காலமெல்லாம் பாரம் சுமந்து வண்டி இழுத்து ஓய்ந்து போன அதன் கால்கள் இப்போது அதன் உடலை சுமப்பதற்கே சக்தியில்லாமல் தொய்ந்து போயிருந்தன.  இனிமேல் இதனால் பிரயோஜனம் இல்லையென்பதால் சொந்தக்காரன் அந்தக் காளையை விரட்டி விட்டான்.   அப்போது அந்த மரத்தின் அருகே வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சீப்பு […]

ட்ரிங் ட்ரிங் – கடைசி மணியா? பகுதி-2

ட்ரிங் ட்ரிங் – ஆஹா இந்த மணியொலிக்குத்தான் இன்னமும் எத்தனை ரசிகர்கள்!  இன்று கூடத் தங்களது மொபைலில் இந்த மணியோசையை ரிங்டோனாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.  இந்த ஒலி நினைவூட்டுவது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே.   கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பார்ப்போம். இன்றக்கு இதன் குறைகளாகச் சொல்லக்கூடிய ஏராளமான ஊழியர்கள் என்பது திடீரென்று இந்த வருடம் சேர்ந்தவர்களில்லை.  ஆரம்ப காலத்திலிருந்தே இத்தனை ஊழியர்களும் இருந்தார்கள். அப்புறம் ஏன் இப்போது மட்டும் நஷ்டம்? […]