அகரம் இப்போ தகரம் ஆச்சி…

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘,  என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]

ஸ்ரீராமநவமியும் கொரோனாவும்..

  இன்றைக்கு ஸ்ரீராமநவமி.  கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை.  எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக.  நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு? இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம்?  கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்? […]

எப்போது பொங்குவோம்?

pongal festival

பொங்கல் நல்வாழ்த்துகள் —  திடீர்னு ஒரு சந்தேகம், பொங்கல் என்பது தமிழர் திருநாள்னு சொல்றாங்க.  ஆனா கேரளா தவிர கிட்டத்தட்ட அஸ்ஸாம் முதல் பக்கத்துல இருக்க ஆந்திரா வரைக்கும் கொண்டாடும் பண்டிகையை எப்படித் தமிழர் திருநாள்னு சொல்லலாம்? ஆந்திராவில் இதைத் தெலுங்கர் பண்டிகைன்னு சொல்றதில்லை. கர்நாடகாவில் இதை கன்னடப் பண்டிகைன்னு சொல்றதில்லை. அப்புறம் இங்கே மட்டும் ஏன்? சரி, மொதல்லே பொங்க வைப்போம் —  மறுபடியும் ஒரு சந்தேகம். என்ன […]

மார்கழித் திங்கள் – 30

காதலிக்கறவங்களைக் கேட்டுப் பாருங்க எதுக்கு காதலிக்கிறீங்கன்னு? பட்டுனு பதில் வரும் – இதென்ன கேள்வி?  கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கறதுக்காக. ஆனா இன்னைக்கு கல்யாணம் பண்ணிட்டுன்னு சொல்றது கொறைஞ்சிட்டு வருது.  சேந்து சந்தோஷமா இருக்கறதுக்கு, அப்புறம் அதுவும் மாறி சந்தோஷமா இருக்கறதுக்கு அப்டீன்னு வரலாம். அதை விடுங்க, காதலிக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் கிஃப்ட் வாங்கிக் குடுக்கறதும், சர்ப்ரைஸ் குடுக்கறதும், ஒரே ஜாலியா இருக்கும்.  ஆனா கல்யாணம் ஆன பிறகு இதெல்லாம் குறைந்து […]

மார்கழித் திங்கள் – 29

நேற்று வரைக்கும் ஒருவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு விட்டு திடீரென்று இன்றைக்கு இன்னொருவரைத் தலைவன் என்று கொண்டாடுவது சரியா?  மறுபடியும் நாளைக்கே பழைய தலைவனைத் தேடிப் போய்ச் சேர்வது சரியா? என்ன வெட்கங்கெட்ட விளையாட்டு இது? ஆனால் இதையும் மக்கள் அங்கீகரிக்கிறார்களே?  அதுதான் கொடுமை.   நீ இங்கே இருந்தால் எனக்கே ஆபத்து என்று தலைவர் ஒருவரை வெளியேற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அப்படி வெளியே போனவன் மீண்டும் அந்தத் […]

மார்கழித் திங்கள் – 28

உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று ஒரு புகழ்பெற்ற வாக்கியம் உண்டு.  ஆனா இப்போ உன் தலைவனைக் காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு படி போய் உன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரைக் காட்டு, உன்னை வேலைக்கு எடுக்கலாமா இல்லையா என்பதை யோசிக்கலாம் என்று கம்பெனிகள் சொல்லும் அளவுக்கு ஆகி விட்டது நிலைமை.  இனிமேல் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்தால் சமூக ஊடகக் கணக்கு […]

மார்கழித் திங்கள் – 27

இந்த சீனா இருக்கு பாருங்க,   டோக்லாம்லே ஊடுருவல் செய்து பல நாட்கள் நமது ராணுவமும் சீன ராணுவமும் எதிரெதிரே பதட்டத்துடன் இருந்த நிலை மறக்க முடியுமா?  சீனாவுடன் நட்புறவு பேண வேண்டியது அவசியம், சீனாவுடன் தகறாரு வேண்டாம் என இங்கே இருக்கும் சில சீன அடிமைகளும் அடிவருடிகளும் எலும்புத் துண்டுகளுக்கு விலை போனவர்களும் கூவியதும் நினைவிருக்கும். ஆனா  போன வருஷம் சீன அதிபர் இந்தியாவுக்கு வந்தார், நம்ம மகாபலிபுரத்துக்கு […]

மார்கழித் திங்கள் – 26

“மாதொருபாகன்” நினைவிருக்கிறதா?  பெருமாள் முருகன் என்ற ஒரு அறிவுஜீவி எழுதிய கதை.  கதை என்று நாம் சொல்கிறோம், ஆனால் இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்றுதான் அவர் ஆரம்பித்தார்.  இதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு வழக்கம் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதாவது குழந்தை இல்லாத பெண்கள் வருடத்தில் ஒரு நாள் அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருவிழாவின் போது  தங்களைப் பொதுவில் வைப்பார்களாம், அப்போது யார் வேண்டுமானாலும் […]

மார்கழித் திங்கள் – 25

தமிழ் இருக்கே மிகவும் பழமையான மொழி.  அதுலும் இந்தப் பழமொழிகள் இருக்கே அது ரொம்ப ரொம்ப அறிவார்ந்தது.  பழமொழின்னா என்னன்னு தெரியலயா? அதாங்க நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது வாலக் கொழச்சிக்கிட்டு  —– திங்கப் போகும்னு வீட்ல பெரியவங்க சொல்லுவாங்களே இதெல்லாம்தான் பழமொழி.   அதை விடுங்க.   மஹாபாரதத்துல துரியோதனனுக்கு எல்லாருமே கெட்டவங்களாத்தான் தெரிஞ்சாங்களாம். அது அவனோட சுழி.     கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து […]

மார்கழித் திங்கள் – 24

“மன்மத லீலையை வென்றார் உண்டோ?”  எம் கே தியாகராஜ பாகவதர். ஒரு காலத்தில் இவர்தான் தமிழ்நாட்டின் ஒரே ஒரு கனவுக் கதாநாயகன். பாகவதர் கிராப் என்று அவரது சிகையலங்காரம் அந்தக் கால இளைஞர்களால் பின்பற்றப்பட்டு பெரியவர்களால் மழுங்க மொட்டையடிக்கப்பட்டு வந்ததாக இந்த காலப் பெரியவரின் தாத்தா சொன்னதாக கர்ண பரம்பரைக் கதை.  எம் கே டி என்று அன்பாக அழைக்கப்பட்ட அவர் தெருவில் நடந்து வந்தாரென்று தெரிந்தால் வீட்டுப் பெண்கள் […]