இன்று (2/27/2020) காலை எல்ல தமிழ் ஊடகமும் பரபரப்பாக பரப்பிய ஒரு செய்தி டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தை விசாரித்த நீதிபதி முரளிதர் மோடி அரசுக்கு எதிராக கருத்து சொன்னதால் பணியிடம் மாற்றப்பட்டார் என்பது தான். டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று (2/26/2020) ஐகோர்ட் விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். முரளிதர் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை தான் […]
பச்சபுள்ளயா நீங்க?
தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்த் எதாவது தவறு செய்வாரா? அவர் மீது ஏதாவது குற்றம் சாட்ட முடியுமா? என்று எல்லா கட்சிகளும் ஆவலும் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் மீதான வருமானத் துறையின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றது ரஜினிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படும் நிகழ்வாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று The Hindu பத்திரிக்கையில் வெளியான விரிவான செய்தியின் அடிப்படையில் ரஜினிகாந்த் கந்துவட்டி தொழில் செய்கிறார் என்று […]
உண்மை ஊர சுத்தறக்குள்ள பொய் உலகைச் சுத்திரும்
“ இப்போல்லாம் யாரு சார் உண்மையை விரும்பறாங்க? பொய் சொன்னாத்தான் கை தட்டி ரசிக்கிறாங்க “ உண்மை ஊர் சுற்றி வருவதற்குள் பொய் உலகையே சுற்றி வந்து விடுகிறது என்று ஒரு பழமொழி. செய்தி என்பது என்ன? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் அறிந்து வெளியிடுவதுதான் செய்தி. இதுதான் ஊடக தர்மம். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? டில்லி காவல்துறை அத்துமீறி அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் […]
ப்ரேக்கிங் ந்யூஸ்
ஆங்கிலத்தை விடவும் தமிழில்தான் அதிகமான செய்தி சேனல்கள் இருக்கின்றன போலத் தோன்றுகிறது. பொழுதுபோக்கு சேனல் நடத்துவதை விடவும் அதிகமான செலவு செய்தி சேனலுக்கு ஆகும். குறைந்தபட்சம் தமிழகமெங்கும் செய்தியாளர்களும் கேமராமேன்களும் வேண்டும். உடனுக்குடன் அதனை தலைமையகத்துக்கு அனுப்ப தகவல் தொடர்பு கட்டமைப்புக்கள் வேண்டும். எல்லா நிகழ்ச்சிகளையும் ஸ்டூடியோவிலேயே எடுத்துவிட முடியாது. நிறைய எடிட்டர்கள் வேண்டும். இப்படி பல செலவுகள். என் டி டி வி – இது ஆங்கிலத்தில் முதன் […]