கருப்பு நிறத்தில் மேலே மட்டும் மஞ்சள் நிறத்தில் அம்பாஸடர்களும் ஃபியட் பத்மினிகளும் ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் டாக்ஸி வேண்டுமென்றால் தெருவில் நின்று கொண்டு எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் கதாநாயகி “ஏய் டாக்ஸி” என்று கத்தினால் டாக்ஸிக்கு முன்பாக வில்லன் தனது காரில் வந்து நிற்பான். டாக்ஸி ஸ்டாண்டுகள் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இருக்கும். இல்லையென்றால் ரிக்ஷாதான். அதுக்கப்புறம் ட்ராவல்ஸ்கள் தலை தூக்க […]
ஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்
சென்ற முறை நாம் இத்தாலியிலுள்ள உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் கண்டு களித்து வந்தோம். இன்று நாம் எங்கே செல்லவுள்ளோம் தெரியுமா? சுனாமிக்கு பூகம்பத்திற்கும் பிரசித்தி பெற்ற நாடு இது. ஒழுக்கத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெயர் போன நாடு இது. இன்னும் தெரியவில்லையா? புல்லெட் ரயில் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் நாடு எது? ஆம், ஜப்பான் நாட்டிற்கு தான் இன்று நாம் விஜயம் செய்ய உள்ளோம்.
பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்
“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசியம் வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…“ என்று ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்தும் ஐஸ்வர்யாவும் ஆடிய அந்த காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் தாண்டி அங்கே ஒரு பிரம்மாண்டம் நின்றிருந்ததை, மன்னிக்கவும், சாய்ந்திருந்ததை, நீங்கள் கண்டு களித்திருக்கலாம். அந்த பிரம்மாண்டத்தை நேரில் காண அவா உள்ளதா? அப்படிஎன்றால் நீங்கள் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும். ஆம், இன்று நாம் காணப்போவது இத்தாலியின் […]