கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற 646 படகுகளில் 566 படகுகள் கரை திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே கூறியுள்ளார். நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோவா , கர்நாடகா , குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் பெரும்பாலோனோர் கரைதிரும்பியுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 19 விசைபடகுகள் உள்ளிட்ட 80 படகுகள் மட்டுமே கரை திரும்ப […]

தமிழகத்தில் பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை

வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையின் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், நள்ளிரவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகை மாவட்டங்களில் பலத்த மழை […]

நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை -பொதுப்பணித் துறை

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி செயற்பொறியாளர்களே நீரை திறந்து விடலாம் என்று பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது- பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள  89 அணைகளில் 15 பெரிய அணைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளன. ஏரி,  குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. எனவே, கன மழை பெய்து நீர்நிலைகளில் கரை […]

தமிழகத்திற்கு வரும் 7ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்

வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையிலும், பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாகவும் வானிலை தொடர்பான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுவடைந்து புயலாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலிலும் மற்றொரு குறைந்த […]