
இன்னும் சில மணித்துளிகள் தான் என்று காத்திருந்த நமக்கு இதோ வந்தே விட்டது அந்த சில மணி துளிகள்.
விக்ரம், இன்னும் சிறிது மணித்துளிகளில் தரை தொட்டு விடும்.
தரை என்று சொல்வது சரியா?
புவியிருப்பு சக்தி இருந்தால் தானே அது தரை? இங்கு தான் புவியிருப்பு இல்லையா? நிலவிருப்பு இருக்குமோ?
இருக்கட்டும். ஆம், விக்ரம் நிலவில் கால் பாதிக்கும் நேரம், அதோ, அங்கே நீல வானிலிருந்து பல தூய ஆன்மாக்கள் மகிழ்ந்து கொண்டிருக்கும்.
டாக்டர் விக்ரம் சாராபாய் துவங்கி டாக்டர் அப்துல் கலாம் வரை, அவர் மட்டுமல்ல, இன்னும் பல நல்லுயிர்கள் தாங்கள் துவக்கிய முயற்சி இன்று வெற்றி பெற்று கொண்டிருப்பதை கண்டு புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கும்.
இது எவ்வளவு பெரிய வெற்றி என்று தெரியுமா?
பல ஆண்டுகளுக்கு முன் நாம் நமது முதல் முயற்சியில் தோல்வியுற்ற பொழுது, வீதியில் மாடு மேய்க்கும் பயலுக்கு விண்ணில் பறக்க ஆசை எதற்கு என்று நம்மை கேலி செய்தது ஆங்கிலேயே கூட்டம்.
அன்று நம்மை கண்டு எள்ளி நகையாடியவர்களுக்கு இதோ இன்று எள்ளு தண்ணி தெளித்தாயிற்று. யாருமே நினைத்து பார்க்காவன்னம் நாம் இன்று சாதித்துள்ளோம்.
நிலவுக்கு செல்வதால் ஏழையின் பசி போக்க முடியுமா?
நிலவுக்கு செல்வதால் விவசாயின் கண்ணீரை தான் போக்க முடியுமா?
கேட்பார்கள், இது போன்று பலர் பலவிதம் கேட்பார்கள்.
தாய்நாட்டின் பெருமை கண்டு பெருமை கொள்ள மனதில்லா கயவர்கள் கேட்பார்கள்.
தன் தாய்நாட்டின் விஞ்ஞானிகள் சாதனையை பொறுக்க முடியா ஞானசூனியன்கள் அப்படி தான் கேட்பார்கள்.
நிலவிலும் விண்வெளியிலும் ஒரு மிக பெரிய வர்த்தகம் உண்டென்று அறியா மூடர்கள் அப்படி தான் கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆம்.
ஒரு நாடு நிலவுக்கு செல்லும் அளவிற்கு அறிவியல் பெற்றிருந்தால் அவர்கள் விண்ணில் ஆளுமை செலுத்த முடியும்.
இந்த உலகில் அனைத்து நாட்டினாலும் விண்ணில் சென்று செயற்கைகோள்கள் செலுத்த இயலாது. அதற்கு அவர்களிடம் காசு பணமிருந்ததாலும் அதற்கேற்ற அறிவியலும் தேவை.
ஆகவே, அவர்கள் நாடுவது அந்த அறிவியல் அறிவு கொண்ட, அதை நிருபித்துள்ள நாடுகளையே. அப்படி நாடும் பொழுது அதில் பல்லாயிரக்கணக்கான, பல கோடி வியாபாரம் உள்ளது.
ஆம், ஓடும் குதிரைமேல் தான் பந்தயம் கட்டுவார்கள். அது போன்றே முன்னேறிய நாடுகளையே இந்த பணிக்காக மற்ற நாடுகள் அணுகி தங்களுக்கு உதவ கோரும். அதன் மூலம் மட்டுமே அரசுக்கு பல கோடி வருமானம் வரும்.
அது இருந்தால் தானே ஓர் அரசு மக்கள் நலத்திட்டங்கள் செய்ய முடியும்? இதனால் நமக்கு வரிச்சுமையும் குறைய வழிவகை உண்டாகும்.
இதெல்லாம் அடுத்த நாட்டுக்குள் புகுந்து தீமை செய்ய காத்துக்கொண்டிருக்கும் கும்பலுக்கு புரியாது.
சரி, அவர்களை சற்று தள்ளி வைத்து நம் நமது நாட்டின் சாதனையை பற்றி பார்ப்போமா?
அது என்ன சந்திராயன்-2?
நம் இந்திய நாடும் மனிதனை சந்திரனில் கால்பதிக்க செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் நமது முன்னாள் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்களின் ஆசியுடன் துவக்க பெற்ற திட்டமே சந்திராயன்.
2003ம் ஆண்டு அமரர் வாஜ்பாய் தலைமையில் சந்திராயன்-1 என்ற திட்டம் துவங்கி 2008ம் ஆண்டு வெற்றிகரமாக முடிந்தது.
இந்த திட்டத்தின் மூலமாக நிலவில் நீர் இருக்க சாத்திய கூறுகள் உண்டு என்று நாம் இந்த உலகிற்கே உணர்த்தினோம்.
அதன் தொடர்ச்சியாக தான் இன்றைய சந்திராயன்-2, நமது முயற்சியில் மற்றுமொரு மைல் கல்.
சந்திராயன்-2, இது உலகில் இதுவரை எந்த நாடும் தொட்டு பார்க்கா, ஏன், சிந்தித்து கூட பார்க்கா இடமான நிலவின் தென் துருவம் நோக்கி தன் பயணத்தை GSLV Mk-III ஏவுகலம் மூலம் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி துவக்கியது.
GSLV Mk-III ஏவுகலமிலிருந்து பிரிந்து சென்ற சந்திராயன்-2 சுற்றுகலம் பல நாட்களாக நம் பூமியின் வட்ட பாதையை சுற்றி கொண்டிருந்தது.
அப்படி பூமியை சுற்றி கொண்டிருந்த சுற்றுகலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியன்று நிலவின் வட்ட பாதைக்கு மாறியது.
அமெரிக்கா மட்டும் நிலவிற்கு 48 மணிநேரத்திற்குள் சென்றடைந்தது, நாம் ஏன் 48 நாட்களாக சுற்றி கொண்டுள்ளோம்?
நியாயமான கேள்வி தானே.
இரத்தின சுருக்கமாக கூறவேண்டுமானால், காசு, பணம்.
ஆம். 2 தினங்களில் சென்றடைய அமெரிக்கா செலவு செய்தது ஏறக்குறைய இன்றைய மதிப்பில் 150 பில்லியன் அமெரிக்க டாலர்.
நாம் செலவு செய்ததோ, 150 மில்லியனுக்கும் குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு.
“என்ன கத வுடுறியா” அப்பிடின்னு நீங்க சிரிக்கிறது கேக்குது. அதுக்கு தான் இந்த தளம். படியுங்கள், முழு விவரங்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
விளக்கமாக கூறவேண்டுமானால், நீங்கள் சிறிது பொறுமையுடன் பின் வரும் தகவலை படிக்க வேண்டும்.
பூமியிலிருந்து நேராக நிலவை அடைய வேண்டுமாயின் பூமியின் புவியிருப்பு விசையின் எதிராக செயல்பட வேண்டியதிருக்கும். அப்பிடியெனில், சிறிய தூரத்தை கடக்கவே மிகவும் சக்தி வாய்ந்த மோட்டார் கொண்டு செலுத்த வேண்டிவரும். அதற்கு அதிக எரிபொருளும் தேவைப்படும். அதை கொண்டு செல்வதால் மேலும் பாரங்கள் அதிகரிக்கும்.
சாதாரணமாக செல்வதென்றால் இந்த நிலைமை. இதில் பல ஆயிர பாரங்கள் கொண்ட விண்கலங்களை சுமந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தால் நிலைமையை சிந்தித்து பாருங்கள்.
அதிக பலமுள்ள மோட்டார், அதிக எரிபொருள், அதை சுமந்து செல்வதால் மேலும் அதிக பாரம், என்று அனைத்துமே பலமடங்கு உயரும்.
இப்பொழுது புரிகிறதா, ஏன் நேர் கோட்டில் செல்லாமல், பூமியையும் நிலவையும் சுற்றியவண்ணம் சந்திராயன்-2 சென்றான் என்று?
இவ்வாறு சுற்றி நிலவின் வட்ட பாதையை அடைந்த இது, பின் சிறுது சிறிதாக நிலவிற்கும் தனக்கும் உள்ள இடைவெளியை குறைத்து கொண்டே வந்து பின், சில கிலோமீட்டர் இடைவெளியில் தன் வயிற்றில் இதுவரை சுமந்து கொண்டிருந்த தரையிறங்கியை பி
கேட்பதற்கு எளிமையாக சுகமான சுமையாக இருப்பினும் இந்த வட்டப்பாதை மாற்றம் மற்றும் தரையிறங்கியை வெளியிலி
ஆம், நிலவினிலிருந்த 100 கிமீ தொலைவை அடைந்ததும், அது வரை சமத்தாக சந்திராயன்-2 சுற்றுகலத்தில் இருந்த விக்ரம்
விஞ்ஞானிகளின் கட்டளை படியே கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி விக்ரம் வெற்றிகரமாக வெளிவந்து விட்டது.
விக்ரம், இந்த தரையிறங்கிக்கு இதை விட வேறு பெயர் பொருந்தவே பொருந்தாது. ஆம், நமது இந்திய நாட்டின் விண்ணுலக வேட்கைக்கு வித்திட்ட மாபெரும் விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சரி, 100கிமீ தொலைவில் இருக்கும் விக்ரம் எனும் தரையி
இதுவே நமது முதல் முயற்சியாகும். அது சரி, பூமியிலிருந்து 3,84,000 கிமீ வந்த நாம் இந்த தூரத்தையும் வெற்றிகரமாக கடப்போம் என்று நம்புவோம்.
அந்த இறுதி 15 நிமிட திக் திக் தருணம்
அது தான் அந்த கடைசி திக் திக் நேரம்.
இதில் நாம் வெற்றி கண்டால் இந்த தரையிறங்கும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் நான்காம் இடத்தில் நாமும் இடம் பெறுவோம்.
இந்த 15 நிமிடங்களில் நிகழ வேண்டியவை யாவை?
1. விக்ரம் தரையிறங்கி தனது வேகத்தை நிலைமைக்கு ஏற்றவாறும் இடைவெளிக்கு ஏற்றவாறும் கட்டுப்படுத்த வேண்டும்.
2. தரையிறங்க நல்லதொரு சமத்தளத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. வேகத்தை முறையாக குறைத்து மெதுவாக கால் பாதிக்க வேண்டும்.
4. கால் பதித்தும் சரியாக நிலையாக நின்று தன்னுள் இருக்கும் ஆய்வுக்கலத்தை வெளியில் இறக்க வேண்டும்.
இவைமட்டுமல்ல, இதை செயல்படுத்தும் அதே வேளையில் பெங்களூரில் உள்ள தளத்திற்கும் விவரங்களை உடனுக்குடன் தாண்ட வண்ணம் இருக்க வேண்டும். அதே போன்று, ஆய்வுக்கலத்தையும் கண்காணித்தவண்ணம் இருத்தல் வேண்டும்.
ஒரு சில மணித்துளிகூட விரயம் செய்ய முடியாது. ஏனெனில், இந்த தரையிறங்கி வெறும் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனுள் தனது ஆய்வுகளை முடித்து பூமிக்கு தெரிவித்த வண்ணம் இருக்க வேண்டும்.
இதோ, நேரம் நெருங்கி விட்டது.
இந்தியா மட்டுமல்ல இந்த உலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது.
நம் பிரிதமர் உள்பட அனைத்து மக்களும் இந்நிகழ்வுகளை நேரடியாக காண ஆவலுடன் உள்ளனர்.
நீங்களும் காண வேண்டுமா? இதோ இதன் மூலம் கண்டு களியுங்கள்.
நாளை என்ன நடக்கும்?
நன்றே நடக்கும் என்ற நம்பிக்கையில்,
விடை பெறும் உங்கள் நண்பன்,