
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நிகழ்ந்து முடிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் சந்திப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கை வகிக்கிறது. கலாச்சாரம் ஒரு தேசத்தை பல்வேறு வகையில் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்கிறது. எனவே கலாச்சாரத்தின் முக்கியத்துவமானது தேச அபிவிருத்தியில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை பற்றி இங்கு காணலாம்.
ஒரு நாட்டிலுள்ள கலாச்சாரமானது பல முகங்களைக் கொண்டதாக இருக்கிறது. இதன் காரணம் என்னவெனில் மக்கள் பல்வேறு பின்புலங்களைக் கொண்ட கலாச்சார சூழலில் வளர்ந்து வருகின்றனர். எனினும் ஒட்டுமொத்த நாடும் மக்கள் அனைவரின் மொத்த கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகவே இருக்கின்றது. பொதுவாக ஒரு நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பு என்பது, எவ்வாறு சிறு சிறு புள்ளிகள் சேர்ந்து பெரிய அழகான கோலமாக மாறுகிறதோ; அது போல சிறு சிறு கலாச்சாரங்கள் ஒன்றுபட்டு ஒட்டுமொத்த நாட்டின் ஒன்றிணைந்த கலாச்சாரமாக பரிமளிக்கிறது.
கலாச்சாரமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கூட பெரும் பங்கு வகிக்கிறது. உதாரணமாக ஒரு பகுதியில் உள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் கொண்டவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் பெரியோரை மதிக்கும் கலாச்சாரம் கொண்டவர்களாக இருப்பதாகவும் மற்றும் இயற்கையை, தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் கொண்டவர்களாக இருப்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். இவ்வகையான கலாச்சார கட்டமைப்பு கொண்ட மனிதர்கள் சமூக வாழ்வில் நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்களது பொருளாதாரத்தை சிறப்பாக கட்டமைத்துக் கொள்கின்றனர். ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் என்பது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு சிறு கட்டமைப்பு ஒரு தனிப்பட்ட குடும்பத்தில் பொருளாதாரம் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார வலைப்பின்னலில் ஒரு சிறு சங்கிலி ஆகவும் உள்ளது. எனவே ஒரு தேசத்தின் பொருளாதார வலைப்பின்னல் ஒரு தனிமனிதனின் கலாச்சார நிகழ்வில் இருந்து தொடங்குகிறது. பொருளாதாரம் மட்டுமல்லாது தேசத்தின் இன்ன பிற வளர்ச்சியிலும் கலாச்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது. பிற நாடுகளோடு தொடர்பு கொள்ளுதல், நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு ஆகியவற்றிலும் கலாச்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் ஆழமான கலாச்சார பின்னணியில் மற்றும் பெருமையும் கொள்ளாதவராக இருந்தால் அவனால் சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வெகு எளிதாக புரிந்து கொள்ள இயலாது.
இதன் காரணமாகவே சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட கலாச்சாரங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கும் விதமாக இவ்வமைப்பு பல்வேறு நிதிகளை செலவிட்டு வருகிறது.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் சர்வதேச அளவில் பல்வேறு விதமாக உற்று நோக்கப்படுகிறது. கலாச்சாரத்தின் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் விதமாகவே பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக அமைகிறது. ஒரு நாடு தமது கலாச்சாரத்தை கொண்டாடாவிடில் அது தமது வளர்ச்சியை இழக்கிறது. கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கும் மற்றும் அதன் பெருமையை உணர்ந்து கொண்டாடும் நாடுகள் அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் விண்வெளித்துறை ஆகியவற்றில் முன்னேறி வருவதை பல்வேறு சமயங்களில் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. எனவே கலாச்சாரம் ஒரு தேசத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிப்பதை உணர முடியும்.
இப்போது புரிகிறதா, ஏன் நமது பிரதமர் நரேந்திர மோடிஜி சீன நாட்டின் அதிபரை மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேசினார் என்று?. கலாச்சாரம் சார்ந்த வளர்ச்சியை முன்னிறுத்தியே நமது பிரதமர் தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். வாழ்க பாரதம். வாழ்க நரேந்திர மோடி ஜி.