திரைகடலோடியும் திரவியம் தேடு! இது யாருக்கு சொன்னாங்களோ தெரியாது. நம்ம பிரதமர் மோடி திரவியம் தேடுறாரா தெரியாது, ஆனா என்னமா ஊரு சுத்துறாரு, பார்ரா! மனுஷன் நம்ம வரி பணத்துல இது வர 55 வாட்டி வெளிநாடு போய் வந்திருக்காரு! அதுல ரஷ்யாவுக்கு மட்டுமே 4 தடவைபோய் வந்திருக்காரு! அப்படி ரஷ்யால மனுஷன் பண்ணது என்னவா இருக்கும்?
கிழக்கு பொருளாதார மன்றம் (Eastern Economic Forum, EEF)
இந்த EEF என்பது ரஷ்யாவின் விலாடிவாஸ்டக்கை தலைமையாகமாக கொண்டு 2015 முதல் ஆசிய பசிபிக் நடுகளை ஒன்றிணைத்து செயல்படும் அமைப்பு. இந்த அமைப்பை ஒரு நாடாக கொண்டோமென்றால், நிலப்பரப்பில் உலகிலேயே 8வது மிகப்பெரிய நாடாகவும் மக்கட்தொகையில் 4வது பெரிய நாடாக இந்த அமைப்பு அமையும். சரியா புரிஞ்சுகாட்டீங்க, இதே காரணங்களால் தான், சீனாவும் அமெரிக்காவும் இங்க ஆதிக்கம் செலுத்த வந்தாங்க!
அட, விலாடிவாஸ்டாக்கா??? நம்ம பிரதமர் போயி ஏதோ கப்பல் போக்குவரத்தாமே, அந்த ஊர்தானே? (இந்த ஊர் பெயர நம்ம ஜப்பான் முதல்வர் எப்படி சொல்லப்போறாரோ, எல்லாம் அந்த சீனி சித்தப்பாவுக்கே வெளிச்சம்)
ஏன் அங்கே?
சீன எல்லைக்கு அருகாமையிலும், ரஷ்ய பசிபிக் கடற்பகுதியின் மிகப்பெரிய துறைமுகமும், ரஷ்யவின் பசிபிக் கப்பற்படையின் தலைமையகமும், ரஷ்ய நாட்டை கிழக்கு மேற்காக இணைக்கும் ட்ரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் கிழக்கு தலைமையகம் என பல முக்கிய இடங்களை தன்னுள் கொண்டுள்ளபடியால் விலாடிவாஸ்டக் நகரை கிழக்கை ஆள்பவன் என பெருமையாக சொல்வதுண்டு. இந்தியாவின் மிக் மற்றும் சூகோய் ரக விமானங்கள் இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டு ஓன்ஜிசி விதேஷ் நிறுவனமும் ஷகலினில் உள்ள எண்ணைகிணறுகளில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் இப்பகுதியில் கனிமவளங்கள் மிகுதியாக உள்ளதால் ரஷ்ய அரசும் மனித வளத்திற்காக பல நாடுகளை அணுகியது.
சீனத் தொடர்பு
சீனா தனது பட்டுக்களை விற்க பொ.ஆ2 முதல் பயன்படுத்தி வந்த பாதைக்கு “பட்டுப்பாதை” என்று பெயர்! தற்போது கம்யூணிஸ்டுகளால் ஆளப்படும் சீனா ஒட்டுமொத்த கிழக்காசிய கடல் பகுதி முதல் ஆப்பிரிக்கா வரை தன் கைக்குள் வைக்கும் முயர்ச்சிக்கும் அதே பெயர்தான் (Maritime Silk Route). அதை இந்தியா கவனக்குறைவாக விடக்கூடாது என்று வெளியுறவுத்துறை வல்லுனர்கள் சொன்னாலும் சீனாவின் இந்த விரிவாக்க முயற்ச்சியில் ஆடிப்போனது ரஷ்யா தான்! இருக்காதா? தங்கள் அந்தஸ்த்தை விட்டுக்கொடுக்க எந்த நாடு தான் விரும்பும்?
சென்னை–விலாடிவாஸ்டக் கப்பல் போக்குவரத்து
இங்க தான் நம்ம பிரதமர் மோடி களமிறங்கினார்! மும்பை முதல் பீட்டர்ஸ்பர்க் வரை 8675nm கப்பல் போக்குவரத்து இருக்கும் போது, சென்னை முதல் விலாடிவாஸ்டக் 5647nm கப்பல் போக்குவரத்தும் இருக்கலாமே? இதற்காக கடந்த ஆண்டுகளில் ரஷ்யாவுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ச்வராஜ். அதன் பயனாக இந்த வருட EEF கூட்டத்தில் பிரதமர் முக்கிய பேச்சாளராக போனபோது ரஷ்யாவுடன் இந்த போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தானது! ஓஹோ, அப்போ பிரதமரோட அந்த 4 முறை ரஷ்ய பயணத்துல இதெல்லாம் பேசி பட்டி டிங்கரிங் பண்ணீருப்பாங்க இல்ல?
இந்த புது வழிதடத்தால, 40 நாள் கொண்டுபோன சரக்குகள் 26 நாள்ல கொண்டு சேர்க்க முடிகிறது. ஆக, 14 நாள் மிச்சமாகும். 14 நாளா? அடேங்கப்பா. அப்போ அவ்வளவு நாள் கப்பல் எரிபொருள் மற்றும் பிற செலவுகள், அதில் வேலை செய்பவர்கள் மனித நேரமும் மிச்சமாகுமில்ல?
இந்த கப்பல் வழித்தடத்துல தான் தெற்க்கு ஜப்பான் கடல், கொரியா, தாய்வான், பிலிப்பீன்ஸ், தெற்க்கு சீன கடல், சிங்கப்பூர், மலாக்கா நீரிணி மற்றும் அந்தமான் தீபகற்பம் வருகிறது. இதனால் இந்தியாவின் கடல் ஆளுமையும் இந்த நாடுகளுடனான உறவும் மேம்படும். தென்சீன கடல்ல ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சீனாவின் மூக்கு உடைபடும்! இந்த கடற்பகுதியில் சீனாவை பிடிக்காத பல நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படும். மேலும் துறைமுகம் சார்ந்த தொழிலில் தமிழகம் இதனால் மேலும் பயன்பெறும்.
அடேங்கப்பா! இரண்டு நாட்டு ஒப்பந்தத்துல இவ்வளவு விஷயம் இருக்கா? மோடி படா கில்லாடியா இருப்பாரு போல! ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிருக்காரு!
ஊர் சுற்றுகிறார் மோடி என சொல்றவங்க, இந்தியா இதனால அடையும் வெளியுறவு வெற்றியை கண்டும் காணாமல் பாராட்ட மனமில்லாமல் இருக்காங்களோ? கோ பேக் மோடி என கூக்குரலிடும் கூட்டத்திற்க்கு அவர் தங்களுக்கும் சேர்த்தே உழைக்கிறார் என எப்போது தான் புரியுமோ?
நல்ல விஷயத்தை நாலு பேருக்கு கொண்டு சேர்க்கும் பொழுது, எழுத்துப் பிழைகளை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், இதையும் கேலி பேசி, கட்டுரையின் நோக்கத்தை திசை மாற்றிவிடுவார்கள் இந்த திராவிட உடன்பிறப்புகள். என் தாழ்மையான கருத்து