ஆம். தமிழகத்தின் இன்றைய நிலை இது தான்.

தன் நாட்டிற்காக போராடிய வரலாறுகள் உண்டு. ஏன் தன் வாழ்க்கைக்காக போராடிய காலங்கள் கூட உண்டு. ஆனால், தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு துணைபோக போராடி பார்த்ததுண்டா? இன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க ஜனநாயகம்.

இரண்டாம் முறையாக, தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த அரசு மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசின் அனைத்து திட்டத்திற்கும் முட்டு கட்டையிட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து மக்களவையில் விவாதித்து கொண்டு வந்த குடியுரிமை சட்டம் எதிர்த்து போராட்டம்.

இதில் மேலும் கொடுமை, இதே சட்டத்தை கொண்டுவர வலியுறுத்திய அன்றைய எதிர்க்கட்சி இன்று இதற்கு எதிராக மக்களை தூண்டுவது விந்தையிலும் விந்தை. ஒருவேளை இதை நிறைவேற்ற முடியாது என்ற மிதப்பில் நிறைவேற்ற கோரினார்களோ என்னவோ!!

அன்றே சொன்னார் கவுண்டர் “அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா!!!” நீர் தீர்க்கதரிசி அய்யா!

இந்த குடியுரிமை சட்டம் ஏன், எதற்கு என்று பல்வேறு தரப்பினர்கள் விளக்கம் அளித்த பின்பும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே முன்னிறுத்தி இதை எதிர்த்து வருவதை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது.

அந்த குடியுரிமை சட்டத்தில் கூறியுள்ளதை அறிய முடியா மூடர்களா இவர்கள்? இல்லவே இல்லை. அதை நன்கு படித்து தெளிய கூடிய அறிவு நிச்சயம் இவர்களிடம் உண்டு. ஆனாலும், தனி ஒரு மனிதனின் வெறுப்பில் இவர்கள் அறிவு கண்ணை இறுக மூடிக்கொண்டு சொல்பேச்சு கேளா பிள்ளையாக திரியுகிறார்கள்.

மன்னிக்க வேண்டும். சேரா நட்பிடம் சேர்ந்து அவர்கள் சொல் பேச்சு கேட்டு தான் இப்படி போராட்டங்களும் சட்ட சீர்கேடுகளும் செய்தவண்ணம் உள்ளனர்.

சரி, போராட்டம் செய்தார்கள். அது அவர்கள் ஜனநாயக உரிமை என்றே வைத்து கொள்வோம். சட்ட ஒழுங்கு சீர்கெடும் போதும் பொது மக்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போதும் போலீஸ் தனது கடமையை செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டா இருக்கும்?

இவர்கள் நோக்கம் CAA என்பதை எதிர்ப்பதா அல்லது ஒரு சில தனி மனிதர்களை எதிர்ப்பதா என்பதை இன்று மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார்கள் இவர்கள். போலீஸ் அராஜகம் என்று சந்தேகம் இருக்குமேயானால் இவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியது ஆளும் அரசை எதிர்த்து தானே? அதை விடுத்து இன்னும் அரசியல் கட்சி கூட துவக்காத ஒருவரை பார்த்து குரலெழுப்புவது என்பது என்ன முறை?

அப்படி என்றால், இந்த போராட்டமே ஆன்மீக அரசியல் என்று கூறிய அந்த ஒரு தனி நபரை குறிவைத்து தானா என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுமா இல்லையா?

அவர் அப்படி என்ன கூறினார். (குடியுரிமை சட்டத்தால்) இந்திய இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்ப்பேன் என்று கூறினார். உண்மை.

தன் தந்தை எப்பொழுதும் தன் பக்கம் நிற்பார் என்று ஒரு பிள்ளை திருடினாலோ, அல்லது சமூகத்திற்கு தீங்கு விளைவித்தாலோ எவ்வாறு அந்த தந்தை தன் பிள்ளையை தானே கண்டிப்பாரோ, அதே பார்வையில் தான் அந்த நபரும் இருப்பார் என்று கருதுகிறேன்.

எனவே தவறையும் செய்து விட்டு தந்தை தனக்காக போராடுவார் என்று எதிர்பார்க்கும் பரிதாப மனநிலையில் உள்ள இந்த அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்வது?

அதுமட்டுமா? பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சில கட்சிகளும், தீய சக்திகளும் இதை வைத்து சட்ட ஒழுங்கை மேலும் சீர்குலைக்க எப்படியெல்லாம் வதந்திகளை பரப்பி கொண்டுள்ளார்கள் என்று பாருங்கள்.

 

 

இப்படி பட்ட கீழ்த்தரமான செயல்களை செய்து விட்டு காவல்துறை தன கடமையை செய்தால் கூட்டம் கூட்டமாக தெருவில் இறங்கி கத்த வேண்டியது.

அங்கே ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் கட்சி துவங்கியும் ஒன்றும் பெரிய தாக்கமில்லை என்றால் இங்கே ஆன்மீக அரசியல் துவங்கும் முன்பே இவ்வளவு சுவாரசியம். எதிர்ப்புகள்.

எது எப்படியோ, எந்த அரசியல் கட்சியையும் நம்பி நாம் காலம் தள்ள முடியாது. நாம் நமது பிள்ளைகளை சரியாக படிக்க வைத்து வளர்த்தால் தான் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளது. படிப்பு மட்டுமல்ல, மேலே கூறிய சமூக விரோதிகளின் பார்வையிலிருந்து அவர்களை காப்பதும் நமது தலையாய கடமையே.

நீங்கள் நிச்சயம் செய்வீர்கள். தமிழக மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.

மகேஷ் 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.