தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும். 

 

உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் இருக்கும் வண்ணம் சர்ச் இதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறது. டி.எம். கிருஷ்ணா போன்ற ஐயங்கார்கள் சர்ச்சின் பயனுள்ள முட்டாளாக மாறுகிறார் என்பதை நாம் கவனிக்கும்போது, சர்ச்சின் ரகசிய கூடாரங்கள் இங்கே எவ்வளவு நீண்ட, ஆழமான வேர்களுடன் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது.

 

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் 46.85 சதவீதமாக உள்ளனர். இது மாநிலத்திலேயே மிக உயர்ந்த சதவிகிதம். கடலோர தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளும் இப்போது கிறிஸ்தவத்தின் பிடியில் உள்ளது. பேராசிரியர் திரு. ஆர் வைத்தியநாதன் அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தமிழகத்தில் FCRA வழியாக வெளிநாட்டு நிதி மூலம் கிறித்தவ மதமாற்றம் நடைபெறுவதை தெளிவாக விளக்கியுள்ளார்.

 

கிறித்தவ திருச்சபையின் தமிழ்நாட்டின் மீதான பிடிப்பு சில சந்தர்ப்பங்களில் — 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குடங்குளம் ஆர்ப்பாட்டங்களுக்கு தன் அசாத்தியமான உலகளாவிய நெட்வொர்க்குகள் மற்றும் அதன் பரந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி – தேசிய அரசியலில் சலசலப்பை உண்டாக்கியதன் மூலம் திருச்சபையின் அழிவுகரமான பங்கை அறிந்துகொள்ளலாம். மேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மூடுவது தொடர்பான சார்சயில், வன்முறையை வெளிப்படையாகத் தூண்டியதில் திருச்சபையின் முக்காடு முழுவதுமாக விலகியது.

 

ஸ்டெர்லிட் கலவரத்தில் சர்ச்சின் பங்கு பற்றி ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளோம்

 

[visual-link-preview encoded=”eyJ0eXBlIjoiZXh0ZXJuYWwiLCJwb3N0IjowLCJwb3N0X2xhYmVsIjoiIiwidXJsIjoiaHR0cHM6Ly92YWFuYXJhbS5pbi9taXNzaW9uYXJpZXNfbGlua3NfaW5fc3RlcmxpdGVfcHJvdGVzdHMvIiwiaW1hZ2VfaWQiOi0xLCJpbWFnZV91cmwiOiJodHRwczovL2kwLndwLmNvbS92YWFuYXJhbS5pbi93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAxOC8wNy9QRU9QTEUtQ0hBU0lORy1QT0xJQ0UtU1RFUkxJVEUtUFJPVEVTVFMuanBnP2ZpdD02MTUlMkMzODQmc3NsPTEiLCJ0aXRsZSI6IlJvbGUgb2YgQ2hyaXN0aWFuIG1pc3Npb25hcmllcyBpbiBTdGVybGl0ZSBwcm90ZXN0cyAtIOCuteCuvuCuqeCusOCuruCvjSIsInN1bW1hcnkiOiJJIHdpbGwgdHJ5IHRvIGRpc2N1c3MgdGhlIGxpbmtzIGJldHdlZW4gRHJhdmlkaWFuLU1pc3Npb25hcnkgTmV4dXMsIGV4cG9zZSB0aGUgbGlua3MgYmV0d2VlbiB0aGUgc28gY2FsbGVkIE5HT3MgYW5kwqAjQnJlYWtpbmdJbmRpYcKgYnJpZ2FkZSwgaG93IHRoZXkgcGxhbiB0byBkZXJhaWwgYWxsIGRldmVsb3BtZW50YWwgcHJvamVjdHMgbW9zdGx5IGluIHRoZSBTdGF0ZSBvZiBUYW1pbCBOYWR1LiBXaGlsZSBpbiByZWFsaXR5IG1vc3Qgb2Yga25vdyB0aGF0IHRoZXJl4oCZcyBtdWNoIG1vcmUgdG8gdGhlIFR1dGljb3JpbsKgcHJvdOKApiIsInRlbXBsYXRlIjoidXNlX2RlZmF1bHRfZnJvbV9zZXR0aW5ncyJ9″]

இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை வன்முறை தூண்டியதன் மூலம், இந்திய அரசுக்கு எதிராக திருச்சபை நேரடி சவால் விட்டிருக்கிறது: நாங்கள் (திருச்சபை) தேர்ந்தெடுக்கும் இடத்திலும் நேரத்திலும் இந்தியா முழுவதும் சிறு போர்களை நடத்துவோம். (முடிந்தால் எங்கள் மீது கை வையுங்கள், பார்க்கலாம்).

 

 

பிஷப் ராபர்ட் கால்டுவெல் இன்று உயிருடன் இருந்திருந்தால் திருச்சபை நடத்தும் இந்த அராஜகங்களை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பர். 

 

உண்மையில், கடந்த ஒரு நூற்றாண்டில் இந்த திராவிட சித்தாந்தம் கட்டவிழ்த்துவிட்ட அட்டவிஸ்டிக் (atavistic) சக்திகளால் தமிழகத்தில் சொல்லமுடியாத தீங்கு விளைந்துள்ளது: சமூக நீதி மூலம் அடக்குமுறையிலிருந்து விடுதலை என்று சொல்லி ஒரு சாரரை கொடுமையாக சித்தரிப்பது; தமிழ் மொழியின் “தூய்மை” மற்றும் தொன்மை, போன்ற மாயைகளை காட்டி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொள்கின்றனர். 

 

திராவிடத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கடந்த காலங்களில் தமிழ் சமுதாயத்தின் சில பிரிவினர் அனுபவித்த சமூக அல்லது பிற அநீதிகள் எதுவாக இருந்தாலும், உள்ளங்கையில் உள்ள கொப்புளத்திலிருந்து விடுபட கோடரியைப் பயன்படுத்துவதற்கு ஒத்ததாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் “தூய” திராவிட அல்லது தமிழ் அடையாளத்திற்கான தேடலானது வெங்காயத்தின் அடுக்கடுக்கான தோல்களை உரிப்பது போன்றதே. கடைசியில், தோலை உரித்தவர் கண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.