மீண்டும் இந்தியா இவ்வுலகை வெல்ல வேண்டும் அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல-சுவாமி விவேகானந்தர்

மேற்கண்ட பொன்மொழிக்கேற்ப தற்போது இந்தியா செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாக வந்தே விட்டது.ஆம்!எது நடக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் முதல் பாகிஸ்தான், பத்திரிக்கையாளர்கள் வரை நினைத்தனரோ அது நடந்தே விட்டது

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதென எதிர்க்கட்சிகள்/பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சிறு ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள் (என்ன பொழப்போ?)

இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டியது நம் கடமை.முதலில் இந்த மசோதா மத ரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்துகிறது என்ற பிரச்சாரம் அடிப்படை ஆதாரம் அற்றது.

இச்சட்டம் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களைச் சந்திக்கும் சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்தவர்கள்,பார்சிகள், சமணர்கள்,பௌத்தர்கள், சீக்கியர்கள் என 2014 டிசம்பருக்கு முன் வந்த அத்தனை அகதிகளும் இந்நாட்டின் குடிமக்களாக வழிவகை செய்கிறது.இந்த சட்டம் அங்கிருந்து வரும் முஸ்லிம்கள் இங்கே குடியுரிமை வாங்குவதை தடுக்கவில்லை.இது பொய்ப் பிரச்சாரம்.இந்திய முஸ்லிம்களுக்கும் இதனால் ஒரு பிரச்சினையும் இல்லை

இதை உணர்ந்த இவர்கள் எடுத்த அடுத்த வாதம் இலங்கை தமிழர்களை (இவர்கள் ஆட்சியில் அவர்களை சிங்களவர்கள் படுத்திய நிலை என்ன? மோடி ஆட்சியில் தமிழர்கள் வாழும் நிலை என்ன என்பதை ஒப்பிடவும்)ஏன் சேர்க்கவில்லை என ஒரு ஒப்பாரி வைக்கிறார்கள்.நீங்களே சொல்லுங்கள் ஈழத்தமிழர்களை அவர்கள் நாட்டில் கௌரவமாக இலங்கையிலேயே வாழ வழி வகை செய்வது நல்லதா(அவர்களுக்கு வடக்கு மாகாணங்கள் பல உள்ளன)இல்லை இங்கே கூப்புட்டு குடியுரிமை வழங்குவது நல்லதா?

இந்த சட்டமானது அரசியலமைப்பின் 14வது பிரிவு உட்பட எதையுமே மீறாததால் கபில் சிபில், பிரஷாந்த் பூஷன் என அர்பன் நக்சல்கள் என்ன வழக்கு போட்டாலும் கவலை இல்லை.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கள் சொந்த நாட்டில் செய்த அட்டூழியங்களை அறிந்து தான் சவுதி அரேபியா கூட அவர்களை ஏற்க தயாராக இல்லை(எனவே இந்தியா இவர்களை நிச்சயம் அகதிகளாக கூட உள்ளே அனுமதிக்க கூடாது)

இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்த மக்களு ங்குகுடியுரிமை வழங்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு(இதை இந்தியா செய்யக்கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணம் அப்போ எவ்வளவு மோசமானதாக இருக்கு என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள் )

ஏன் இவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும்? ஏனெனில் இந்துக்களின் நாடு இந்தியா.இந்துக்களுக்கு வேறு நாடு எங்கு உள்ளது (நேபாளம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் அது மதச்சார்பற்ற நாடு)

நான் ஒரு இந்துவாக நான் வாழும் நாட்டில் இருந்து குறைந்தபட்ச உரிமைகளை(அவ்வுரிமை பிற மதத்தினருக்கு மறுக்கப்படாத நிலையில்) எதிர்பார்த்தால் இவர்களுக்கு எங்கே எரியுதாம்!

நம் நாட்டில் இதுநாள் வரை நம்மோடு இருந்து விட்டு ராட்க்ளிப் பிரித்த எல்லைக்கோட்டால் மட்டுமே ஒரு இஸ்லாமிய தேசத்தின் இரண்டாம் நிலை குடிமக்களாக அவர்கள் வாழ வேண்டுமா! அவர்களை நம்மோடு வாழ அழைப்பது இந்தியனாக நம் கடமை அல்லவா!இது ஏன் இந்த மதச்சார்பற்ற வேசம் போடும் ஆசாமிகளுக்கு புரியவேயில்லை

இச்சட்டத்தினை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்கும் பிற மாநிலக் கட்சிகளுக்கும் இந்துக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்தியத்தாய் உலகில் தலைநிமிர்ந்து நின்றால் சிலருக்கு எரியுதெனில் அதற்காகவே இந்தியர்களாகிய நாம் உழைக்க வேண்டும்.

பாரத மாதா கீ ஜே

தீக்கோழி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.