நான் ஏன் காங்கிரஸை வெறுக்கிறேன்?

பாகம்-1 :- மன்னராட்சியின் எச்சம் நேரு குடும்பம்

காங்கிரஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது?? ‘சுதந்திரம்’ என்று சொன்னால் இன்னும் காந்தி கால கனவுகளிலே மிதந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

காங்கிரஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ‘குடும்ப அரசியல்’. நேரு காலத்திலிருந்து ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியின் வாயிலாக இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இந்த குடும்பம் இருக்கிறது. இன்னும் சிலர் மோதிலால் நேருவிலிருந்து ஆரம்பிப்பதாக சொல்வார்கள். இல்லை, மொகலாய அரசின் கடைசி அரசரான இரண்டாம் பகதுர் ஷாவிடம் தில்லி நகரின் தலைமை காவலராக இருந்த ‘கங்காதர் நேரு'[1]விடமிருந்து தொடங்குகிறது இந்த குடும்பத்தின் வரலாறு.[2][3]

  1. மோதிலால் நேரு
  2. ஜவகர்லால் நேரு
  3. இந்திரா காந்தி
  4. ராஜிவ் காந்தி
  5. சோனியா காந்தி
  6. ராகுல் காந்தி

காஷ்மீர் வந்த முகலாய மன்னர் ஃபர்ரூக்ஷியார்[4] நேருவின் முன்னோரான ‘ராஜ் கவுல்'[5] பாரசீக மொழியிலும் சமஸ்கிரிதத்திலும் வல்லவராக இருந்ததனால் மன்னரின் அழைப்பினால் பெயரும் புகழும் அடைய காஷ்மீரிலிருந்து 1716ஆம் ஆண்டு தில்லி வந்ததாக ஜவகர்லால் நேரு தனது சுயசரிதத்தில் குறிப்பிடுகிறார்.[6]

காந்தி(நேரு குடும்பம்) என்பதற்கு சமானமான அடையாளம் இந்த உலகத்தில் இல்லை சுதந்திரத்திற்கு பின்னான சுமார் 40-60 வருடங்கள் இந்திய அரசை இந்த குடும்பத்திலிருக்கும் எவரோ ஒருவரே ஆண்டிருக்கிறார்கள். இந்த குடும்பம் பிரிட்டிஷ் முடியாட்சியையும் அமேரிக்காவின் கென்னடி குடும்பத்தின் கலவையாக இருப்பதாக கார்டியன் பத்திரிக்கை குறிப்பிடுகிறது”(அடேயப்பா!!)(அதாவது பிரிட்டிஷ் குடும்பம் போல இந்தியாவின் மன்னர்கள் இவர்கள்;ஆனால், ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதால் கென்னடி குடும்பம் போல ஓட்டரசியலில் வெற்றி பெறாவிட்டாலும் வேறு கட்சி ஆட்சியிலிருந்தாலும் செல்வாக்கு இருக்கும்)[7]

மோதிலால் நேரு[8]

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தால் தன் பதவியிழந்து குடும்பத்துடன் ஆக்ரா நோக்கி ஓடுகிறார் கங்காதர் நேரு. இரண்டாம் பகதுர் ஷாவின் ஆட்சியில் தலைமை காவலராக இருந்த கங்காதர் நேருவின் கடைசி பிள்ளை தான் மோதிலால் நேரு.

இன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நேரு குடும்பத்தின் முதல் உறுப்பினர். 1919, 1928 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக அங்கம் வகிக்கிறார். 1919 அம்ரிட்சர் நகரின் காங்கிரஸ் மாநாட்டை தலைமையேற்கிறார். அந்த அளவுக்கு காங்கிரஸிற்குள் அவர் செல்வாக்கு வளர்கிறது. காந்தியுடன் ஒட்டி உறவாடியவர், 1922ஆம் ஆண்டு சௌரி-சௌரா[9] சம்பவத்திற்கு பிறகு காந்தியை விமர்சிக்கிறார். ஸ்வரஜ் பார்டியில்[10] இணைகிறார், மத்திய சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிறார், பூரண சுதந்திரம் கொடுக்க முடியாது என்று ஆங்கில அரசாங்கம் உறுதியாக இருந்ததால் மத்திய சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்து மீண்டும் காங்கிரஸில் இணைகிறார்.

ஏன் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்? முழுக்க முழுக்க காங்கிரஸ் வெள்ளையர்கள் தயவால் இயங்குகிறது என தெரிந்து, அங்கு தான் பசையான பதவி கிடைக்கும் என அறிந்து காங்கிரஸில் இணைகிறார் (தமிழ்நாட்டிலுள்ள தலைவர் தன் குடும்பத்தின் பதவிக்காக பால்லாயிரம் குடும்பங்களை சாகடித்தாரே அதுபோல). 1916ஆம் ஆண்டு மன்னராட்சியை போல தன் குடும்பத்து தலைச்சன் பிள்ளையிடம் காங்கிரஸ் கைமாறுகிறது. இதுவும் தமிழ்நாட்டின் இரண்டாம் பேரரசருக்கு முதலாம் பேரரசர் இளவரசர் பட்டம் சூட்டியது போல(முதலாம் பேரரசர் இறக்கும்வரை அவரிடமே செங்கோல்!).

ஜவகர்லால் நேரு[11]

‘மாமா நேரு’ என்று அன்போடு அழைக்கப்படும் ஜவகர்லால் நேரு, மோதிலால் நேருவின் இரண்டாவது மனைவி ஸ்வரூபராணிக்கு பிறந்த முதல் பிள்ளை. காந்தியின் தொடர்ந்த வழிகாட்டுதலால் காங்கிரஸின் உச்சத்தை அடைகிறார் கேம்பிரிட்ஜ் பல்ககலைகழகத்தில் சட்டம் படித்த இந்த மாமேதை. இந்தியாவில் பிராமண(??) குடும்பத்தில் பிறந்த பொழுதும் முகலாய மற்றும் ஆங்கில கலாச்சார தாக்கங்களே இருந்தன[12]. வழக்கறிஞர் தொழிலில் அவரின் தந்தையை போல திறனில்லாதவர், வழக்கறிஞராக தோற்றார்.

ஜப்பானிய ருசிய போர்களை பார்த்து அரசியலில் ஈடுபாடு வருகிறது(நம்பினால் நம்புங்கள்!). காங்கிரஸ் 1907சூரத் மாநாட்டில் இரண்டு அணிகளாக பிரிகிறது, ஒன்று மிதவாதிகள், சட்ட வழியிலான போராட்டங்களின் மூலம் ஆங்கில அரசுக்கு எதிர்ப்பு; இரண்டு தீவிரவாதம், கிளர்ச்சி போராட்டம், புறக்கணிப்புகள். இரண்டு அணிகளின் பந்தலிலும் விருந்து சாப்பிடுகிறார்[13].

தந்தை மோதிலால் நேரு ஸ்வரஜ் பார்ட்டியில் இணைந்தபொழுதும் ஜவகர்லால் நேரு காங்கிரஸிலேயே இருக்கிறார்(தமிழ்நாட்டின் முதலாம் பேரரசர் இவரிடம் தான் பாடம் படித்திருப்பார் போல!).

சுபாஷ் சந்திர போஸ் ஆயுதம் ஏந்தி போராட முனைந்த போது அவருடனான நட்பு முறிகிறது. வன்முறையால் சுதந்திரம் கிடைத்தால் ஆங்கிலேயர்களுக்கு அவமானம், அதனால் எடுப்பார் கைப்பாவையான ஜவகர்லாலிடம் ஆங்கிலேயர்களின் அன்பு அதிகமாகிறது. இதுவரை சுதந்திர போராட்டங்கள் ஒரு சிறு பகுதிக்குள்ளேயே அடங்கியிருந்தது, மேலும் நாடு முழுக்க போராட்டத்தை விரிவாக்க நூற்றுக்கும் அதிகமான சிற்றரசர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை உருவாக்கி ஜவகர்லால் நேரு தலைவராகிறார்.[14]

முஸ்லிம் லீக் ஜின்னாவும்[15] மாமா நேருவும் நண்பர்கள். “நாட்டை துண்டாடி ஆளுக்கு ஒரு பங்கு போட்டுக்கலாம் பங்கு” என்று நாட்டை பிரித்து, சுபாஷ் சந்திர போஸ்[16], பட்டேல்[17], ராஜேந்திர பிரசாத்[18], மௌலானா அசாத்[19] என இந்த பக்கத்தில் அடக்க முடியாத அளவுக்கு திறமையான தலைவர்களிருந்தும் மாமா நேரு பிரதமர் ஆகிறார்.

{இன்னும் பதவிக்காக செய்த காரியங்கள், காமக்களியாட்டங்கள், பிறப்பு, மௌன்ட்பேட்டன் அம்மையாரின் நட்பு, பிற கூத்துகளை பட்டியலிட்டால் இரண்டு மூன்று புத்தகங்கள் எழுதலாம்}

சுதந்திரம் கிடைத்தவுடன் அண்ணல் காந்தி காங்கிரஸை கலைக்கச் சொல்கிறார். பதவியை தனக்கென வைத்துக்கொள்ளப் பழகிப்போன நேரு மறுத்தார். உலகத்தையே கட்டி ஆண்ட ஆங்கிலேயர்களை எதிர்த்த காந்தியால் நேருவை எதிர்க்க முடியவில்லை.

நேரு நாட்டிற்கு செய்த மிகப்பெரிய துரோகம் பல மாநிலங்களில் பிரதேச ராஜாக்களை வளர விட்டது; திராவிட நாட்டின் அரசரை முளையிலே கிள்ளி எறியாமல் விட்டது தேச ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தது. நேரு இறந்த 5 வருடங்களில் திராவிட அரசர் ஆட்சியை பிடிக்கிறார்.

மாமாவின் இறப்பு[20]

ஜவகர்லால் நேரு இறந்தவுடன் லால் பஹதூர் சாஸ்திரி[21] என்ற நல்ல மனிதர் பிரதமாகிறார். நாட்டிற்கு விவசாயமும் வீரர்களும் முக்கியம் ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்று முழக்கமிடுகிறார்(நாட்டை நன்றாக புரிந்துகொண்டவர்).

1947ல் ஜவகர்லால் நேரு செய்த ஒரு தவறை திருத்துவதற்காக தாஷ்கென்ட் ஒப்பந்தத்தில்[22] கையெழுத்திட செல்கிறார். கையெழுத்திட்டவுடன் நேரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக CIAவின் கைகூலிகளால் உஸ்பேகிஸ்தான் நாட்டின் தற்போதைய தலைநகர் தாஷ்கென்ட்டில்[23] கொல்லப்படுகிறார்(இந்திய அரசாங்கம் மாரடைப்பு என கூறிவருகிறது).

கிங் மேக்கர் காலா காந்தி காமராசரை பிரதமர் பதவி ஏற்க தில்லி அழைக்கிறது, பிழைக்க தெரியாத மனிதர் நேருவின் மகளான இந்திரா பிரியதர்ஷினியை முன்மொழிகிறார்[24]. காமராசர் பதவியேற்றிருந்தால் குடும்ப அரசியல் உடைய வாய்ப்பிருந்தது. அந்தோ பரிதாபம்!!


இந்திரா பிரியதர்ஷினி
/ இந்திரா ஃபெரோஸ்/ இந்திரா காந்தி[25]

காமராஜர் செய்த மிகப்பெரிய பிழை இது மட்டுமே. அதிகாரத்தை தனக்கே வைத்துக்கொள்ளும் சர்வாதிகாரி, அதிரடியான பெண், கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களை எண்ணி கற்பனையில் மிதந்தவர், இந்தியாவின் இரும்புப் பெண்மணி என பலவாறு அழைக்கப்பட்டவர். அதிராடியாக செயல்படுகிறேன் என்று எடுத்தோம் கவிழ்தோம் என சில காரியங்களை முடித்து சிக்கலில் சிக்கியவர். எமர்ஜென்சி அறிவித்து நாட்டின் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியவர். ‘இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா’ என்று கூட காங்கிரஸில் இருப்பவர்கள் கூறினார்கள்.

1971ல் தேர்தல் வெற்றி தேர்தல் முறைகேடுகளால் செல்லாது என 1975ல் அலஹாபாத் நீதிமன்றம் திர்ப்பு வழங்குகிறது. இந்திராவை பதவி விலகக் கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.[26]

ஃபக்ருத்தீன் அலி அஹமது[27] என்ற காங்கிரஸ் அபிமானியை வைத்து தன் பதவியை காத்துக்கொள்ள அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எந்த விதத்திலும் அதிகாரம் தன்னை விட்டு போகக்கூடாது என்பதில் மிகத்தெளிவாக செயல்பட்டார். அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் வெறுப்பையும் சாம்பாதித்தார்.

எமர்ஜென்சி காலத்தில் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியின் அட்டூழியங்கள் சொல்லிலடங்காதவை[28]. இந்திர காந்தி பிரதமராக இருந்தபோதிலும் சஞ்சய் காந்தி தன் விருப்பம் போல செயல்பட தனது தாய் இந்திராவை தன் பிடியில் இருந்து விலகாமல் இருகப் பற்றிக்கொண்டார்[29]. 1975 முதல் 1977 வரை அந்த 21 மாதங்கள் சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவின் இருண்ட காலமாக கருதப்படுகிறது.

1977ஆம் ஆண்டு பல கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கின்றன, தங்களுக்குள் அடித்துக்கொண்டதால் 1980ல் வரும் தேர்தலில் காங்கிரஸை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிறார்கள். சஞ்சய் காந்தி தனக்கு நெருக்கமானவர்களை மாநில முதல்வர்களாக நியமிக்கிறார்.

அதே வருடம் விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறக்கிறார்(சதி கோட்பாடுகள் கொல்லப்பட்டார் என்கின்றன). வேறு யாரும் தன் குடும்பத்தில் மிஞ்சியில்லாத்தால் அரசியலில் ஒரு துளியேனும் நாட்டமில்லாத தனது முதல் மகனை ராஜீவை அரசியல் களத்தில் இறக்கி விடுகிறார் இந்திரா. வழக்கம்போல காங்கிரஸ் கட்சியினர் ஒருவரும் நேரு குடும்ப வாரிசு அரசியலை கேள்வி கேட்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலில் இறக்கி விட்டிருந்தார்கள்.

1984ஆம் ஆண்டு இந்திரா தமது மெய்க்காவலர்களால் கொல்லப்படுகிறார். படுகொலைக்கு காரணமானவர்கள் சீக்கிய மதவாதிகள்/காலிஸ்தானிய பிரிவினைவாதிகள் என்று வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ராஜிவ்காந்தி சொல்கிறார் “ஒரு பெரிய மரம் சாயும்பொழுது நிலம் அதிரும்”[30][31]


ராஜிவ் காந்தி
[32]

யார் வேண்டுமாலும் பதவிக்கு வர காங்கிரஸ் ஒன்றும் ஆண்டி மடம் இல்லையே, ஆகவே இந்திராவிற்கு பிறகு ராஜிவ் பிரதமாராகிறார். அனுவமில்லாதவர், அரசியல் ஆர்வமின்மை, அப்பாவி, மேற்கத்திய வளர்ச்சியின் மேல் மதிப்பு(அவர்களின் பரம்பரை குணம்), ஆட்சியில் பல குளறுபடிகள், மாலத்தீவுக்கு வீரர்களை அனுப்பியது, ஈழப் பிரச்சனையின் தலைவர், போபால் விஷவாயு கசிவு, பீரங்கி ஊழல் என ராஜீவின் பட்டியல் நீளம். 1984ஆண்டு தொடங்கி 1989 வரை 5 வருடத்தில் மேற்சொன்ன எல்லா புகார்களிலும் ராஜிவின் பெயர் அடிபடுகிறது.

1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைகிறது. 1989ஆம் ஆண்டிலிலிருந்து 1991வரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் இரண்டு முறை பிரதமர்கள் மாற்றப்படுகிறார்கள். 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரையில் இருந்த பொழுது விடுதலை புலிகளின் தற்கொலை படையால் கொல்லப்படுகிறார் ராஜிவ்.

ராஜிவ் காந்தி இறப்பு[33]

கருணாநிதி உட்பட பல தலைவர்களை கைகாட்டுகிறது ஜெயின் கமிஷன் அறிக்கை. ஏன் காங்கிரஸ் தலைவர்களே சிலர் கொலையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இன்னும் பல மர்மங்களுடன் தூசி படிந்து எங்கோ ஓர் மூலையில் கிடக்கிறது ஜெயின் கமிஷன் அறிக்கை.[34]


சோனியா காந்தி
[35]

1991 தேர்தலில்[36] ராஜீவ் இறந்த அனுதாப அலையில் காங்கிரஸ் வெற்றி பெற்று திரு.நரசிம்மராவ்[37] பிரதமாகிறார். ராஜீவின் மரணத்திற்கு பிறகு சோனியா அம்மையார் பிரதமாராக முயற்சிக்கிறார், எதிர்ப்பு கிளம்பியதால் காங்கிரஸ் திரு.நரசிம்மராவ் அவர்களை தேர்ந்தெடுக்கிறது. உடல்நலம் குன்றிய நிலையில் பதவியேற்றுக்கொண்ட திரு.நரசிம்மராவ் கொஞ்ச காலத்தில் இறந்து விடுவார் என சோனியா அம்மையார் பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருந்தார். பிரதமரானதும் நரசிம்மராவ் உடல் நலம் பூரண குணமடைந்து ஐந்து வருடங்களும் முழுவதுமாக பிரதமர் பதவியிலிருக்கிறார்.

1996 நாடாளுமன்ற தேர்தலில் தொங்கு பாராளுமன்றம் அமைகிறது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ஓட்டெடுப்பு நடத்தி 16 நாட்களில் அரசு கவிழ்க்கப்படுகிறது.[38]

காங்கிரஸ் கட்சியினால் 1998, 1999ல் என மீண்டும் மீண்டும் தேர்தல்.[39][40] அந்தோ பரிதாபம்! மீண்டும் மிகப்பெரிய தோல்வியை தழுவுகிறது காங்கிரஸ்.

சோனியாவின் கீழ் காங்கிரஸ் [41]

சோனியா அம்மையாரின் கீழ் கட்சி செயல்பட்டதால் தோல்வி என்று உலகறிந்தும் வாய் மூடி மௌனிகளாக காங்கிரஸ் கட்சியினர். ஒருவரும் கேட்பாரில்லை.

1885ல் காங்கிரஸ் தொடங்கிய காலம் தொட்டு வருடா வருடம் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு 1998ஆம் ஆண்டு சோனியா அம்மையார் பதவியேற்றவுடன் முக்கியத்துவம் இல்லாமல் போகிறது. 2017ஆம் ஆண்டு வரை சுமார் இருபது ஆண்டுகள் தானே தலைவராக இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க அகில இந்திய காங்கிரஸ் கூட்டங்கள் நடப்பதே இல்லை.[42]

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. சோனியா பிரதமவராவதற்கான முன்னேற்பாடுகள் நடந்தாயிற்று. அப்போது ஜனாதிபதியாக இருந்த திரு. அப்துல் கலாம் ஐயாவிற்கு ஒரு கடிதம் வருகிறது, அனுப்பியவர் ஜனதா கட்சியை சேர்ந்த திரு.சுப்பிரமணியன் சுவாமி.

பதவியேற்பு விழா நடக்கும் அன்று மதியம் ஜனாதிபதி அவர்கள் சோனியாவிற்கு கடித்ததை அனுப்புகிறார். ஓடோடி வந்த சோனியா அம்மையாருக்கு தலையில் மிகப்பெரிய இடி. இன்னும் இத்தாலி குடியுரிமை வைத்திருப்பதால் பதவியேற்க முடியாது என்று ஜனாதிபதி கூறுகிறார். (இந்திய குடியுரிமை சட்டத்தின் படி வேறு நாட்டு குடியுரிமை வைத்திருந்தால் இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும்)[43][44]

ஜனாதிபதி கலாமை போல அங்கு ஒருவர் இல்லையென்றால் எரித்தே விட்டிருப்பாராம் சோனியா அம்மையார். விறு விறு என்று வெளியே சென்று பெரும்பான்மை இருந்தும் ஆட்சி அமைக்க தடுக்கிறார் ஜனாதிபதி என்று பேட்டி கொடுக்கிறார்கள்(திரு கலாம் வாஜ்பாய் அரசாங்கம் இருக்கும்பொழுது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்). பின், மிகச்சிறந்த பொருளாதார மேதையாக போற்றப்பட்ட திரு.மன்மோகன் சிங் பிரதமராக்கப்படுகிறார்.
அடுத்த நாள் சோனியா தன் பதவியை பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வாசித்தன[45].

திரு.மன்மோகன் பதவியில் இருந்தாரே தவிர ஆட்சி சோனியாவின் கையிலும் குஜராத்தின் அஹமது படேல் கையிலும் இருக்கிறது. காங்கிரஸ் செய்யும் பல பித்தலாட்டங்களுக்கு வாய் மூடி மௌனியாக இருக்கிறார் பிரதமர். 2G விவகாரம் பூதாகரமான பின்னரே தெரிந்தது கோப்புகள் அத்தனையும் பிரதமர் அலுவலகம் போகாமல் சோனியாவின் வீட்டிற்கு போகிறது என்று. [46]

ஆரம்பத்தில் இந்தியாவை பற்றி பிடிமானம் ஏதும் இல்லாமல் இருந்த சோனியாவுக்கு, வருடங்கள் கடக்க ஓரளவுக்கு அறிகிறார். அதனால் தான் 20 வருடங்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி அவரிடம் மட்டுமே இருந்திருக்கிறது. இதுவரை யாரும் செய்யாத சாதனை.

நேரு குடும்பத்தின் பல உறுப்பினர்கள் போலவே சோனியாவின் பிறப்பு, இத்தாலிய பார் ஒன்றில் நடன மங்கை, ராஜிவுடனான நட்பு, இத்தாலி தொடர்பு, தன் குழந்தைகளுக்கு ரோமன் கிறித்துவ பெயர்கள் போன்றவை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்.
ருசிய உளவு அமைப்பான KGB யின் உளவாளி, உலகத்தில் கோலோச்சும் ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு, ராஜிவை கொன்றதே அவர் மனைவி தான் போன்ற செய்திகளும் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கிறது[47].

அரசாட்சியில் பிள்ளைக்கு தானே முதல் உரிமை? தன் பிள்ளைக்கு காங்கிரஸ் தலைவராக்குகிறார் சோனியா அம்மையார்.[48]

அடுத்து பார்க்கப்போகும் நேரு வாரிசு காங்கிரஸ் கட்சியின், நேரு குடும்பத்தின் மிகப்பெரிய அவமானம். வஞ்சம், சூழ்ச்சி, அரசியல் தெளிவு இல்லாதவர், எதிரியின் பல/பலவீனங்கள், இந்தியாவின் தேவை, கோஷ்டிகளை அடக்க தெரியாதவர் என அறியப்படுபவர்.


ராகுல் காந்தி
[49]

நேரு குடும்பத்தின் வாரிசு என்ற ஒற்றை காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கப்படுகிறார். கபில் சிபல், சிந்தியா குடும்பம், சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ஷஷி தரூர், சச்சின் பைலட் போன்ற காங்கிரஸில் செல்வாக்கான கொஞ்சம் விஷய ஞானமுள்ள ஆட்கள் அத்தனை பேரும் ஒதுக்கப் படுகிறார்கள்(திரு.பிரனாப் முகர்ஜி ஒரு பேட்டியில் இதைபற்றி குறிப்பிடுகிறார்). அவர்களும் ராகுலின் தகுதி பற்றி வாய் திறந்ததாக தெரியவில்லை.

நேரு குடும்பத்தின் வாரிசு ஒருவர் தான் கட்சியின் தலைமையாக வர வேண்டுமென்ற எழுதப்படாத விதியால் ராகுலின் நிலை கண்டு மனம் வெதும்பி சில முக்கிய புள்ளிகள் மறைமுகமாக பிரியங்கா வத்ராவுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகளும் உலா வருகிறது. அதே போல ராகுலின் இந்த இயலாமையால் கட்சிக்கு பெரும் ஆபத்து எனத் தெரிந்தும் ராகுல் காங்கிரஸ் தலைவராக்கப்படுகிறார். [50]

அவர் பேட்டிகளையும் மேடை பேச்சுகளையும் பார்க்கும்பொழுது மேலே சொன்னவை அனைத்தும் உண்மையென உறுதியாகிறது. தொடர்ந்த தோல்விகள் 2014ஆம் ஆண்டிலிருந்து; ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் இழக்கிறது, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஆட்சிலிருந்தபொழுது குறுநில மன்னர்களை போல செயல்பட்டதால் பல வழக்குகளில் சிக்குகிறார்கள். [51][52][53]

ராகுல் காந்திக்கு திருமணமாகாததால்(??) ராகுலிற்கு பிறகு காங்கிரஸ் என்னவாகும் என கேள்விகளும், அதற்காகத்தான் பிரியங்கா வத்ரா தயாராக்கப்படுவதாகவும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. [54]

நேருகாந்தி பெயர் காரணம்[55]

நேரு குடும்பம் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் பெயர்கள் பெரும்பாலும் ‘கவுல்’ என்று முடியும்(உதா: ராஜ் கவுல்). தில்லி மாநகரின் அருகில் இருக்கும் வாய்க்காலின்(வாய்க்காலுக்கு ‘நெஹர்’ என்று உருது மொழியில் சொல்லுவார்கள்) அருகில் அவர்கள் மனை அமைந்திருந்ததால் பெயர் ‘நேரு’ என பெயர் மாற்றமடைகிறது[56].

காந்தி பெயர் காரணம்[57]

‘இந்திரா நேரு’ ரபிந்திரநாத் தாகூர் பெயர் சூட்டியதால் ‘இந்திரா பிரியதர்ஷினி’யாக மாறுகிறார். ஃபெரோஸ் காந்தி என்ற பார்சியை திருமணம் செய்ததால் இந்திரா காந்தி என பெயர் மாறுகிறது. பார்சிகள் தங்கள் பெயருக்கு பின்னால் ‘ghandy’ என போட்டுக்கொள்வார்கள்.
மஹாத்மா காந்தியின் மேல் இருந்த மதிப்பினால் தன் பெயரை காந்தி(gandhi)யாக மாற்றுகிறார். ராகுல் வரை காந்தி என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.[58]

எது எப்படியோ(குச் பி!) சுமார் 100 வருடங்களாக நேரு குடும்பத்தின் கட்டுபாட்டில் ஒரு குடும்ப அமைப்பாக காங்கிரஸ் செயல்படுகிறது.

பி.கு: நேரு குடும்பத்தை பற்றி பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தாலும், பலரால் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல்கள் மட்டும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது.

பாகம் 1.0ல் காங்கிரஸில் நேரு குடும்பத்தின் பங்கை பற்றி  மட்டும் எழுதியுள்ளோம்.
பாகம் 1.1ல் காங்கிரஸில் இருக்கும் தலைவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் பற்றியும், நேரு குடும்ப பெயரில் உள்ள கல்வி நிறுவனங்கள், சாலைகள், திட்டங்களும்.

References

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.