உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோய் பெரும் அச்சுறுத்தல்களை எழுப்பி வரும் இவ்வேளையில் முன் எப்போதையும் விட இப்போது தேசங்களின் எல்லைகளை, மனிதாபிமானங்களை, கொள்கைகளை, தங்கள் மக்கள் மீதான அந்த அரசுகளின் அக்கறையை இந்த நோய் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டு கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த பொழுது இந்திய கேபினட் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை, மத்திய இணையமைச்சர் ஒருவர் தான் வரவேற்றார்.
தமிழக வாட்சப் போராளிகளால் அதற்கான காரணங்களாக திரித்துச் சொல்லப்பட்டவை “அவர் தமிழர் உடையில் பொங்கல் வைத்தார். எனவே தமிழர்-விரோத மோடி அவரை வரவேற்கவில்லை” என்றனர்.
ஆனால் உண்மை நிலை என்ன?
- ட்ரூடோ உலகறிந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவாளர்.
- பஞ்சாபில் பிரிவினையைத் தூண்டும் காலிஸ்தானிய தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா விளங்குவதும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது.
- தன்னுடைய உள்ளூர் அரசியலுக்காக இந்திய விரோதிகளை ஆதரித்தது.
இதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் அறியாத நமது அறிவுமேதை தமிழன் வாட்சப்பில் எவனோ அரைக்கிறுக்கன் அனுப்பிய புகைப்படங்களையும் கருத்துக்களையும் நம்பி மோடியை தமிழர் விரோதியாக நினைத்து அதை மக்கள் மனதில் பதியவும் வைத்தனர்.
இந்த கேவலமான செயலில் கணிசமான பங்கு இலங்கை அகதிகளுக்கும் உண்டு. அவர்களின் இந்திய வெறுப்பு உலகறிந்தது. இந்தியாவில் (குறிப்பாக தமிழகத்தில்) அரசியல் நிச்சியமில்லாத தன்மையை செய்ய ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து தமிழர் என்ற போர்வையில் பாடுபடுகிறார்கள்(!). அவர்கள் கனடா பிரதமர் பொங்கல் விட்ட படத்தை வைத்து தமிழனை ஏமாற்றி தங்கள் அரசியல் லாபங்களை பார்த்துக்கொண்டனர். அந்த விஷப் பிரச்சாரத்தை இன்னும் உணராமலேயே இருக்கிறோம் நாம்.
கரோனாவும் தேசியமும்
ஆனால் அதே ஜஸ்டின் ட்ரூடோ இப்போது கனடா நாட்டினருக்கு மட்டுமே தன் நாட்டினுள் அனுமதி அளித்திருக்கிறார். வெளிநாட்டினர் எவரும் கனடாவிற்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை என வரும் போது, மக்கள் தொடர்ந்தும் தங்கள் தேசங்களை நோக்கிச் செல்வதையும் தேசங்கள் தங்கள் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. இதைப் பற்றி தமிழக வாட்சப் போராளிகள் வாயைத் திறந்தார்களா?
ஈரானில் 54 இந்தியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது ஓடிச் சென்று உதவியது அவர்களுடைய மதமா? இந்திய தேசமா? எல்லாரும் இஸ்லாமியர்கள் தானே? ஏக இறைவன் தானே? தேசம் என்னும் எல்லைகளைக் கடந்தது, இஸ்லாம் என்பதற்காக ஈரான் இந்திய மக்களை பார்த்துக்கொண்டதா? இல்லையே! அதை அந்த 54 இந்தியர்களும் புரிந்திருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு பிரச்சினை எனில் வரப்போவது இந்திய வெளியுறவுத் துறை தான்.
டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் அவரது குழுவினரும், மோடி அரசு தான் பாராட்டுக்குரியவர்கள். சீமானோ, திருமுருகன் காந்தியோ, ஜஸ்டின் டிரெடௌவோ வாயிலேயே வடை சுடுவார்கள்.
First batch of 58 Indian pilgrims being brought back from #Iran. IAF C-17 taken off from Tehran and expected to land soon in Hindon. pic.twitter.com/IqZ8NUK1M6
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 10, 2020
புரிந்தால் உங்களுக்கு நல்லது. மோடிக்கோ பா.ஜ.க. வுக்கோ ஒரு நஷ்டமும் இல்லை. உறுதியாக ஒன்றை நம்புங்கள், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களின் நலன் காக்க வரப்போவது இந்திய அரசு தான். பொய்யான காரணங்களுக்காக மோடியை எதிர்ப்பதை இனியாவது நிறுத்துங்கள்.
தமிழனாக இருந்தால் இதை சேர் செய்!