
கிரிப்டோ கிறிஸ்தவர்கள் யார்?
பட்டியல் சமூகத்தவர்கள் கிறிஸ்தவராக மாறினாலும் தங்கள் சாதி சான்றிதழில் இந்து பட்டியல் சமூகத்தவர் என்றே பெற்று அரசுப் பணியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் அங்கு தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பை) மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்கின்றனர். இவர்களே கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்று ஒருவர் பலபேர் முன்னிலையிலே ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
இது சரியா? இது தவறான விளக்கம். கண்டிக்கத்தக்கதும்கூட.
பட்டியல் சமூகத்தவர்கள் அல்லாமல் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் கூட அரசு பணியில் உள்ளவர்கள் தங்களுடைய (கிறிஸ்தவ சார்பு) சுயத்தை மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்துகொண்டு வருகின்றனர். இவர்களும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான்.
அரசு பணியில் இல்லாத சீமான், திருமுருகன் காந்தி, கௌதமன், பல கம்யூனிஸ்டுகள் தங்களுடைய (கிறிஸ்தவ சார்பு) சுயத்தை மறைத்து இந்து மதத்தை அழிக்க வேலை செய்து வருகின்றனர். இவர்களும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான்.
கிரிப்டோ பிராமணர்கள்
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர்கள் முதற்கொண்டு அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் வரை இந்து என்று சான்றிதழ் வைத்துக்கொண்டுதான் இந்து மதத்தை அழிக்க வேலை செய்தனர். இவர்கள் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்றுகூட சொல்லலாம்.
ஆனால் இப்படி ஒரு சாதியை மட்டுமே வைத்து கிரிப்டோ கிறிஸ்தவர்கள், கிரிப்டோ பிராமணர்கள் என்று வரையறை செய்யக்கூடாது.
அவர்கள் எந்த சாதியாக கூட இருக்கலாம். தங்களுடைய சுயத்தை (கிறிஸ்தவ சார்பு) மறைத்து இந்து மதத்தை அழிக்க, ஒழிக்க நினைப்பவர்கள் எல்லோருமே கிரிப்டோ கிறிஸ்தவர்கள்தான். அவர்களின் முகமூடியை கிழிக்க வேண்டும்.
-மா வெங்கடேசன்