நாட்டை துண்டாடவேண்டும் என கூப்பாடு போட்ட சில தேசதுரோகிகளின் பேச்சைகேட்டு முஸ்லீம் மதவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக தீவிரவாதிகள் வீதிகளில் வந்து முழுமையான அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளனர். புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் இச்சட்டம் எவ்வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று எவ்வளுவு தான் எடுத்துச்சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை

குடியுரிமைச் சட்டத்தை பற்றிய விவாதத்தில் ஈடுபடும்போது, இந்த தீவிரவாதிகள் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பேசுகிறார்கள். NPR ஒரு சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பு. சட்டவிரோதமாக இங்கு வந்து குடியேறியவர்களை அடையாளம் காண்பதே NRC நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசின் இவ்விரு கணக்கெடுப்பால் இந்தியாவின் உண்மையான குடிமக்கள் தங்கள் உரிமைகளை எந்தவகையிலும் இழக்கமாட்டார்கள்.

இவ்விஷயத்தில் சரியான கேள்வி என்னவென்றால், இவர்கள் ஏன் இவ்வளவு வன்மம் நிறைந்த வன்முறையாளராக மாறிவிட்டார்கள்? இந்த தீவிர இஸ்லாமியவாதிகளின் உண்மையான சிக்கல் என்னவென்றால், இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் மக்கள்தொகை ஜிஹாத் (Demographic Jihad) என்ற அவர்களின் நீண்டகால திட்டத்திற்கு தடை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

மக்கள்தொகை ஜிஹாத்:

 

இந்த கருத்தையும், என்.பி.ஆர், என்.ஆர்.சி எதிர்க்கப்படுவதற்கான உண்மையான காரணத்தையும் புரிந்து கொள்ள, “இந்தியாவில் தீவிரமயமாக்கல்-ஒரு ஆய்வு” என்ற புத்தகத்தின் ஆசிரியர் அபிநவ் பாண்ட்யாவுடன் சந்திப்பு நடந்தது. பொது விவகாரங்களில் கார்னெல் பல்கலைக்கழக பட்டதாரியான பாண்ட்யா, இந்தியாவின் முதன்மையான சிந்தனைக் குழுவான விவேகானந்தர் சர்வதேச அறக்கட்டளைக்கு (விஐபி) கட்டுரைகள் எழுதுகிறார். இந்த தீவிர இஸ்லாமியவாதிகளின் முக்கிய எண்ணம் மக்கள் தொகையை அதிகரிப்பதாகும். அவ்வாறு அவர்கள் கூட்டம் ஒரு இடத்தில் பெருகி தங்களுக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையை உருவாக்க விரும்புகிறார்கள். அந்த கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிறையை (Critical mass) அடையும்போது அங்கு அவர்கள் மத விதிமுறைகளை நடைமுறைபடுத்த ஆணையிடலாம் மற்றும் ஷரியா சட்டத்தை சுலபமாக செயல்படுத்தவும் செய்யலாம்.

 

1947 ஆம் ஆண்டில், முஸ்லிம்களின் மக்கள் தொகை 7% ஆகவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 14% ஆகவும் இருந்தது. இது இப்போது அதிகரித்திருக்கவேண்டும். ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள், இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முஸ்லிம்கள் 40% மக்கள்தொகையாக இருந்தால், மக்கள்தொகை (Demography) மாறுகிறது என்று பாண்ட்யா கூறுகிறார்.

 
அதிகரித்து வரும் மக்கள் தொகை:
மக்கள்தொகையின் இயல்பான வளர்ச்சியை ஆராய்ந்தால், மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் முஸ்லீம் மக்கள் தங்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உறுதி செய்வதற்காக பெரிய அளவிலான இஸ்லாமிய மதமாற்றமும் நடத்துகின்றனர். இது பல்வேறு வழிகளில் செய்யப்படுகிறது, அதில் லவ் ஜிஹாத்தும் அடங்கும் என்று பாண்ட்யா கூறுகிறார்.

 
அசைக்கமுடியாத ஒரு கொள்கையாக ஜிஹாத் வலுவாக வேரூன்றியுள்ளது. இது உருவாகி, வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடைந்துள்ளது. இது ஒரு உடல் சண்டை மட்டுமே என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. ஜிஹாத் மாறுபட்டது, நுட்பமானது, மற்றும் பல்வேறு பரிமாணங்களில் அது பரவுகிறது. இப்படி பாருங்கள், அவர்களில் யாராவது ஒருவர் நேரடியாக இதில் பங்குபெற முடியாமல் போனால், ஜிஹாதுக்கு அவர்கள் பணத்தை பங்களிக்கிறார்கள். இது காஷ்மீர் ஜிஹாதில் எங்களுக்கு ரூ.50,000 கொடுங்கள் அல்லது உங்கள் மகனைக் ஜிஹாதுக்கு அனுப்புங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்: மொத்த மக்கட்தொகையில் முஸ்லிம்கள் 40% அடைந்து, ஒரு பெரிய முஸ்லீம் அரசியல் கட்சி இருந்தால், அவர்கள் நாட்டின் போக்கை தீர்மானிக்கும் நிலைக்கு வருவார்கள். எந்தவொரு மசோதாவையும் ஆதரிக்கவோ அல்லது முறியடிக்கவோ செய்யும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஷரியா சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்தலாம், பாண்ட்யா சுட்டிக்காட்டுகிறார். தங்களின் மக்கள்தொகை என்ணிக்கை என்ற ஒரே அடிப்படையில் அவர்கள் நாட்டின் போக்கை மாற்றமுடியும். இங்கு தான் மக்கள்தொகை ஜிஹாத் என்ற கருத்து வலுப்பெறுகிறது, பாண்ட்யா விளக்குகிறார்.
 
ஜனநாயகம் முதல் ஷரியா வரை:
 
இஸ்லாமியர்கள் கையில் எடுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் இந்த மக்கள்தொகை ஜிஹாத் என்ற இந்த கருத்தின் மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, ஷரியா சட்டம் அமல்படுத்தப்படும். காஷ்மீரில், பண்டிதர்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டதன் ஒரே நோக்கம் மக்கள்தொகை ஜிஹாத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு செயலே. 30 வருடமாகியும் அந்த பண்டிதர்களை நாம் மீண்டும் அங்கே குடியேற வைக்க முடியவில்லை. இருப்பினும், ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியேறுவதை நான் கண்டிருக்கிறேன் என்கிறார் பாண்ட்யா.
 
இந்தோ-நேபாள் எல்லை முகாம்களில் உள்ள இதே ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெரும்பாலும் ஜெய்ஷ் அல்லது லஷ்கர் தீவிரவாத அமைப்போடு நெருங்கிய தொடர்பில் உள்ளனர்..
 
மக்கள்தொகை ஜிஹாத்தின் தாக்கம் முதலில் காஷ்மீரில் பண்டிதர்களை தீவிர இஸ்லாமியவாதிகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றியபோது தெரிந்தது. இப்போது, இந்த தீவிரவாதிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் இதை செயல்படுத்த விரும்புகிறார்கள். ஃபாரூக் அப்துல்லாவின் ஆட்சியின் கீழ், நில அலுவலகங்களில் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் ஐ.எஸ்.ஐ ஆதரவு மக்கள் அதிக எண்ணிக்கையில் நிலங்களை வாங்கினர். இப்போது ஜம்மு முழுவதும் முஸ்லிம் காலனிகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் ஏற்பட்டால், ஜம்முவைச் சுற்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள இவர்கள் தான் நம் வீரர்களை முதலில் தாக்குவார்கள் என்று பாண்ட்யா கூறுகிறார்.
 
NPR, NRC க்கு எதிர்ப்பு:
 

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் இடம்பெயர்வு மற்றும் அகதிக் கொள்கையை அறிவிக்க உரிமை உண்டு. எந்தவொரு ஜனநாயக நாடும் அதை முறையாக செய்கிறது. அனால் இந்த தீவிர இஸ்லாமியவாதிகள் இந்த இரு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதற்கும், அதைப் பற்றி வன்முறையில் ஈடுபடுவதற்கான உண்மையான காரணத்திற்கு இப்போது வரலாம்.

 

இந்தியாவில் சுமார் 2 கோடி சட்டவிரோத பங்களாதேஷிகள் வாழ்கின்றனர். என்.ஆர்.சி கணக்கெடுப்பு அவர்கள் அனைவரையும் அடையாளம் காண பயன்படும். அவர்களிடம் ஆவணங்கள் இல்லையென்றால், அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பச் செல்லுமாறு கேட்கப்படுவார்கள். இது மக்கள்தொகை ஜிஹாத்தின் சீரிய தடையில்லா முன்னேற்றத்தில் மாபெரும் முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறது என்கிறார் பாண்ட்யா.

அசாமில், இந்த பங்களாதேஷியர்கள் ஊடுருவலால் சில மாவட்டங்களின் மக்கள் தொகை போக்கை முற்றிலும் மாற்றிவிட்டது. உதய்பூரில், முஸ்லிம்களின் ஒரு பெரிய காலனி வந்துள்ளது, அவர்கள் பங்களாதேஷியர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். மௌல்விகள் அந்த இடத்தைப் பார்வையிட்டு, நேரடியாக பாதுகாப்பதோடு தங்கள் நிகழ்ச்சி நிரலைப் (மத தீவிரவாதத்தை) பிரசங்கிக்கிறார். இந்த காலனி நபர்கள் பெரும்பாலும் போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மேலும் அவர்கள் இங்கு மறைமுக முஜாஹித்களாக நடப்படுகிறார்கள். பயங்கரவாத நடவடிக்கைகளில், தளவாடங்கள், நிதி மற்றும் உள்ளூர் ஆதரவு ஆகியவை முக்கிய கூறுகள். இப்படி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஒரு பயங்கரவாத தொகுதியின் மிக வலுவான தூண்களாக செயல்படுகிறார்கள். இவர்களால் ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் நிதி ஆகியவற்றை சுலபமாக வழங்கலாம் அல்லது தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்லலாம். ஒரு பயங்கரவாத குழு செய்ய வேண்டியது எல்லாம் தங்கள் ஆட்களை இவர்களிடம் சென்று அந்த பொருட்களை வாங்குவது மட்டுமே.

 

இத்தகைய நபர்களால் மக்கள் தொகைய நிலையாக அதிகரித்து, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அங்குள்ள நிலங்களை கையகப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் என்கிறார் பாண்ட்யா. அப்படி நடக்கும் பட்சத்தில் அத்தகைய பெரிய காலனிகளைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறி, இந்த நபர்கள் அந்த நிலங்களையும் அபகரிப்பார்கள். இப்படி பட்ட நிலஅபகரிப்பை நாம் மேற்கு வங்காளத்தில் கண்கூடாக கண்டிருக்கிறோம், அங்கு இந்த கருத்து நில ஜிஹாத் என்று அறியப்படுகிறது

 

Source: https://www.mynation.com/views/demographic-jihad-radical-islamists-oppose-nrc-npr-as-indian-govt-stands-in-the-way-of-their-plans-q6cxd6

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.