அருண் ஜெயிட்லி

ஒவ்வொரு வருடமும் உலக வங்கி அக்டோபர் மாதத்தில் எளிதாக வணிகம் செய்யக்கூடிய நாடுகளின் அடுத்த வருட தர வரிசைப் பட்டியலை அறிவிக்கும். மே மாதம் ஒன்றாம் தேதி வரை ஒரு நாட்டின் செயல்பாட்டைக் கணக்கில் கொண்டு இத் தர வரிசை கணிக்கப்படுகின்றது. தன்னுடைய தனிப்பட்ட ஆய்வில் பத்து விதமான பிரிவுகளின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் கட்டளை விதிகளை வைத்து உலக வங்கி இத் தர வரிசை மதிப்பீடுகளை முடிவு செய்யும். இது பொதுவான அக எண்ணஞ்சார்ந்த மதிப்பீடு இல்லை. குறிப்பிட்ட முன்னேற்றங்களை கணக்கெடுத்து செய்யப்படும் முடிவு இது. இதில் 190 நாடுகளில் இந்தியா தற்போது 77ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தேசிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் இந்தியா
பத்து ஆண்டுகள் தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியா அதிக அளவு ஊழலையும், செயல் திட்டங்களின் முடக்கத்தையும், சீர்திருத்தங்கள் கைவிடப்பட்டதையும் தான் பார்த்தது. தேசிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நம் நாட்டின் தர வரிசை 134, 132, 132, 134 கடைசியில் 142ஆக இருந்தது. இது தான் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பரிதாபகரமான சாதனைப் பாதை! வணிகம் செய்ய மிகவும் கடினமான நாடாக இந்தியா இருந்தது. முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய யோசித்தனர். மேலும் இந்தியாவில் செய்த முதலீடுகளை திரும்பப் பெற்று முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் அம்முதலீடுகளை செலுத்த ஆரம்பித்தனர்.

தேசிய முற்போக்குக் கூட்டணியின் செயலாற்றல்
நம் நாடு வணிகம் செய்ய எளிதான நாடாக பட்டியலில் 50வது இடத்திற்குள் வரவழைப்பதே தனது அரசின் குறிக்கோள் என்று 2014ஆம் வருடமே நமது பிரதமர் அறிவித்தார். அப்பொழுது அவர் அளித்த வாக்குறுதிப்படி அந்நிலையை தொட 92 நாடுகளை முந்த வேண்டி இருந்ததால் செய்ய முடியாத ஒரு சாதனையாகவே அது தோன்றியது. பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகளை பத்துப் பிரிவுகளிலும் நம் நாடு தாண்டி வர மிக அதிக அளவில் போட்டி இருந்தது, மிக துல்லியமான மாறுதல்களை செய்யும் நாடுகளால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். சட்டத்தில், ஒழுங்கு முறையில், கொள்கையில், செயல் திட்டங்களில், நிர்வாக சீர்திருத்தங்களில் மாற்றம் தேவையாக இருந்தது. இம்மாற்றங்கள் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் உள்ளடக்கியது. 92இடங்கள் முன்னேறி வருவது என்பது செயற்கரிய செயலாகத் தோன்றியது. யாருமே இது முடியும் என்று நம்பவில்லை. எட்ட முடியாத இலக்காகவே எண்ணினர்.
மாற்றம்
அரசாங்கம் ஒவ்வொரு பிரிவின் மேலும் கவனம் செலுத்தி 2014ஆம் வருடம் முதலே மாற்றம் கொண்டு வர உழைக்க ஆரம்பித்தது. வெறும் மாற்று சட்டங்களை, கொள்கைகளை அறிவித்தால் மட்டும் போதாது, அதன் தாக்கத்தை முக்கியத்துவத்தை தளத்தில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் மட்டுமே மாற்றம் வரும். வெறும் சீர்திருத்த அறிவிப்புகளை உலக வங்கி முன்னேற்றங்களாக எடுத்துக் கொள்வது இல்லை. அறிவிப்புக்கும் செயல்பாட்டுக்கும் ஒரு கால இடைவெளி உள்ளது.
முந்தைய அரசிடம் இருந்து பரம்பரை சொத்தாக 142வது இடத்தை நாம் பெற்றுக் கொண்டு முதல் இரண்டு வருடங்களில் முன்னேறி 130ஆம் இடத்தை வந்தடைந்தோம். மூன்றாவது வருடத்தில் பெரிய அளவு முன்னேறி 30இடங்கள் தாண்டி 100ஆம் இடத்தை வந்தடைந்து நான்காவது வருடம் 77வது இடத்தை அடைந்துள்ளோம். நாலு வருட காலத்தில் 65 நாடுகளை முந்தியிருக்கிறோம். இன்னும் 27 இடங்கள் முந்த வேண்டியுள்ளது. ஆனால் இப்பொழுது அடையக் கூடிய இலக்காக எட்ட முடியாது என்று நினைத்தது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது.
குறிப்பிட்ட விஷயங்களில் மேம்படுத்தல்
முன்னேற்றம்
‘வியாபாரம் தொடங்குவதில்’ நான்கு வருடங்களில் 21புள்ளிகள் உயர்ந்திருக்கிறோம். ‘கட்டுமான செயல்பாடுகளில்’ நாலு வருடங்களில் மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கிறோம். 132புள்ளிகள் உயர்ந்திருக்கிறோம். கட்டடம் கட்ட, ஒருங்கிணைத்த சட்டங்களினால் இணையத்தில் விண்ணப்பிக்கும் ஒரு மனுவிலேயே கட்டடம் கட்ட முழு அனுமதியை இப்பொழுது பெற முடியும். இணையத்தில் மனு அளிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திலேயே கட்டடம் கட்ட அனுமதி பெற முடியும். அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதி தரப்படவில்லை என்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக நாம் எடுத்துக் கொண்டு மேற்கொண்டு காரியங்கள் செய்ய தொடங்கலாம் என்ற சலுகையும் செயல்பாட்டில் வந்துள்ளது. ‘மின்சாரம் கிடைத்தல்’ பிரிவில் அசாத்திய உயர்வாக 132படிகள் முன்னேறியுள்ளோம். ‘சொத்து பதிவில்’ நாம் இன்னும் 166ஆம் இடத்தில் தான் உள்ளோம். ‘கடன் பெறுவதில்’ ‘நாம் 22ஆம் இடத்தில் உள்ளோம். ‘சிறுபான்மை முதலீட்டாளர்கள் பாதுகாப்பில்’ நாம் 7ஆம் இடத்தில் உள்ளோம். எல்லா பிரிவுகளிலும் மிக அதிகபட்சம் நாம் உயர்வை கண்டிருக்கும் இடம் இதுவே ஆகும். ‘எல்லைத் தாண்டிய வர்த்தகத்தில்’ சுங்கம் உள்ளடங்கி உள்ளது, 80ஆம் இடத்தைப் பிடித்துள்ளோம். இதில் தான் நாம் மிக பின் தங்கி 146ஆம் இடத்தில் இருந்தோம். பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வந்த பிறகு, Insolvency and Bankruptcy Code செயலாக்கத்திற்குப் பிறகு ‘வரி செலுத்துதல்’ 37 படிகள் உயர்ந்துள்ளோம். ஆனாலும் இன்னும் 121வது இடத்தில் தான் உள்ளோம். ‘திவால் நிலை தீர்த்தலில்’ 29 இடங்கள் முன்னேறியுள்ளோம் ஆனாலும் 108வது இடத்தில் உள்ளோம். ‘ஒப்பந்தங்கள் அமலாக்குதலில்’ 23 படிகள் உயர்ந்து 163வது இடத்தில் உள்ளோம்.

அடுத்த வருடத்திற்கான பாதை
‘வரி செலுத்துதல்’, ‘திவால் நிலை தீர்த்தல்’ இவ்விரு பிரிவுகளும் முன்னேற தேவையான, பொருட்கள் மற்றும் சேவை வரி, NCLT ஆகியவற்றின் செயல் முறைகள் இப்பொழுது சரியாக நிறுவப்பட்டுள்ளன. தற்போது வந்திருக்கும் இதனின் ஆரம்ப முடிவுகள் மிகவும் ஊக்கமூட்டுபவையாக உள்ளன. முழு வருட கணிப்பும் இவ்வாறே இருக்குமெனில் இந்த இரண்டு பிரிவுகளிலும் நாம் நல்ல முன்னேற்றத்தை காண்போம் என்பது நிச்சயம். அதே போல ‘ஒப்பந்தங்கள் அமலாக்குதலில்’ Specific Relief Act மாற்றப்பட்டு அச்சட்டம் செயலபடுத்தும்போது சேதங்கள் வெறும் விதிவிலக்காக மட்டும் கருதப்படும். வணிக நீதிமன்றங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. மத்தியஸ்தம் செய்யப்படும் சட்டம் சீர்திருத்தப்பட்டு குறைந்த அளவு நீதிமன்ற குருக்கீடுகளுடன் விரைவில் தீர்வுகள் காணும்படி அமைக்கப்பட்டுள்ளன.
எளிதாக வணிகம் செய்ய
‘தொழில் தொடங்குதல்’ என்பதில் நம் நாடு மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். இந்த வருடம் 137ஆவது இடத்தில் உள்ளோம். நாலு வருடங்களில் 21புள்ளிகள் முன்னேறியுள்ளோம். அனாலும் திருப்திகரமான நிலை இல்லை இது. நிறைய செயல் முறை மாற்றங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரிவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் வணிகம் தொடங்க ஆகும் செலவை குறைத்து, செயல் முறைகளை குறைத்து, இவ்விரண்டினாலும் செலவாகும் நேரம் குறைக்கப்பட முயற்சிகள் எடுக்க வேண்டும். இதுவே ஒரு மிகப் பெரிய மலையைத் தாண்டும் முயற்சியை ஒத்தது. இதே வேகத்தை, இதே சீர்திர்த்த செயல்பாட்டை இப்பிரிவுகளில் நாம் தொடர்ந்து செய்து வந்தால் நம் பிரதமர் அளித்த வாக்குறுதி இலக்கு அடையக் கூடிய எளிய இலக்காக அமையும். கவனத்தை ஒருமுகப்படுத்திய குறிக்கோளை நோக்கி விரைந்து முன்னேறும் ஒரு அரசினால் மட்டுமே இதை சாதித்திருக்க முடியும்.

~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.