
காலங்கள் நான்கு. இது அனைவரும் அறிந்ததே.
இவ்வுலகம் சூரியனை சுற்றி வருவதும், அதனால் காலங்கள் மாறுவதும் சிறு பிள்ளையாக இருக்கும் போதே நாம் கற்றவை.
ஆனால், என்றாவது அந்த காலம் என்று தொடங்குகிறது, முடிகிறது என்று சிந்தித்துள்ளோமா?
நம் முன்னூர்கள் இந்த கால மாற்றத்தை வைத்து விழாக்களாக கொண்டாடினார்கள் என்றால் நம்புவீர்களா?
ஆச்சரியமாக உள்ளதா? மேலும் படியுங்கள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இந்த நாட்களில் நாம் கொண்டாடும் விழாக்களிலும் / சடங்குகளிலும் கூட அறிவியலை வைத்துள்ளார்கள் நம் முன்னூர்கள் என்றால் ஆச்சர்யமாயில்லை?
“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு.” என்று சிறுபிள்ளை முதல் நாம் படித்துள்ளோம்.
என்றாவது ஒரு திசைகாட்டி வைத்து சோதித்து பார்த்ததுண்டா?
இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நம்மை ஆண்ட வெள்ளையர்கள் நம் பொருளாதாரம் மட்டுமல்ல, நம் அறிவியலையும் அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!!
பின்னர் சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மீண்டும் தெற்கு நோக்கி திரும்பும். அதன் பின் மீண்டும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், பிறகு தென்கிழக்கு நோக்கி நகரும்.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று சென்று மீண்டும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!! சரி… இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை நேர் கிழக்கில் தொடங்கும் நாள் தான் “சித்திரை 1”. தமிழ் புத்தாண்டு. (Equinox)
பிறகு சரியாக வடகிழக்கு புள்ளி தான் “ஆடி 1”. அதாவது ஆடி பிறப்பு. (solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும் போது “ஐப்பசி 1”. தீபாவளி. (Equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு – இப்போது “தை1”. பொங்கல். (solstice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்.
சித்திரை (equinox) – புத்தாண்டு.
ஆடி (summer solstice) – ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) – பொங்கல்.
இனி நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.
நமது முன்னோர்கள் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள் என்பதற்கு இது மேலும் ஒரு சான்று. இதை அறிய சிலர் நம் பழக்கவழக்கத்தை கேலி செய்தால், இனி அவர்களுக்கு இதை கூறி அறிவுரை செய்யவே எந்த பதிவு.
அது மட்டுமல்ல, நமக்கும் இந்த மேன்மையை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க கடமையுள்ளது.
செய்வீர்களா?
நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்,
உங்கள் மகேஷ்
இந்த பதிவுக்கு உதவிய கோவை நாகராஜ் ராமராஜ் (@raam7890) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.