
மாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.
மாரிதாஸ் நடத்தும் யூடியூப் சேனல் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமடைந்து வருகிறது. கணினி அறிவியல் பேராசிரியரான அவரது பின்னணியை அவரது வீடியோக்கள் பிரதிபலிக்கின்றன. அவரது வீடியோக்களின் பகிர்வு தரவு, உண்மை, தர்க்கரீதியான வாதங்கள் மற்றும் அவற்றின் ஆழமான ஆராய்ச்சிக்காக பாராட்டப்படுகிறது. அவரது இலக்கு இளைய தலைமுறையினராவர். மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு சமூகத்தை உருவாக்க இளையவர்களுக்கு உதவுவதே அவரது நோக்கம் என்றும், உணர்ச்சியைக் காட்டிலும் பகுத்தறிவு மற்றும் உண்மை விவாதத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர் அடிக்கடி வலியுறுத்துகிறார்.
எப்போதும் அவர் தனது குறுகிய வீடியோக்களை, செய்தி அறிக்கைகள், ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் தெளிவான மேற்கோள்கள் பற்றிய குறிப்புகளின் பட்டியலுடன் முடிக்கிறார். சமூக ஊடகத்தில் தன்னை பின்தொடர்பவர்களும், வீடியோ பார்வையாளர்களும் தான் சொல்வதை ஏற்க முடிவு செய்வதற்கு முன்பு தங்களைத் தாங்களே சில ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் எப்போதும் அவர் வலியுறுத்துகிறார்.
அவரின் இந்த அணுகுமுறை, உணர்ச்சி மற்றும் உணர்வு அடிப்படையிலான கதைகளால் கட்டமைத்து இயக்கப்படும் தமிழ்நாட்டின் திராவிட, தமிழ் தேசியவாத அமைப்பின் தேவையற்ற கவனத்தை அவர் பக்கம் இழுத்துள்ளது. இதற்கு முன் அவர் திமுகவின் சிஏஏ எதிர்ப்பு மற்றும் காஷ்மீர் பிரச்சினை மீதான திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்தபோதே அக்கட்சி அவரை துன்புறுத்தியுள்ளது.
இந்த முறை திராவிட இயக்கத்தின் ஓட்டுவங்கியான இஸ்லாமியர்களை விமர்சித்ததாக அவர் மீண்டும் தாக்கப்படுகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்து இந்தியாவில் ஊரடங்கை கொண்டு வந்தது இந்திய அரசு. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் நிகழ்வு கொரோனா வைரஸ் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜமாத் நிகழ்வால் வைரஸ் தொற்று தமிழகத்தை மோசமாக பாதித்துள்ளது. இந்த அறிக்கை எழுதப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் 1075 கொரோனா வைரஸ் தொற்றுகள் உள்ளன, அவற்றில் 971 பேர் இந்த ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களாவர்.
பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, மரிதாஸ் இந்த வீடியோவை ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிட்டார். பயங்கரவாதத்தை மூடிமறைக்க, வேண்டுமென்றே அல்லது தற்செயலாக, பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது பயங்கரவாதத்தின் தன்மை குறித்த உண்மையான விசாரணையைத் தடுக்க இஸ்லாமிய ஃபோபியாவைத் தூண்டுவதன் மூலமாகவோ பயங்கரவாதத்திற்கு மூடிமறைக்கும் பல்வேறு வகையான நபர்களைப் பற்றி அவர் எச்சரித்துள்ளார்.
வெளியில் சென்று மக்கள் முன்பு தும்ம அழைப்பு விடுத்த மென்பொருள் பொறியாளர் முஜீப் முகமது, ரூபாய் நோட்டுகளில் எச்சில் தடவ அழைப்பு விடுத்த பல இஸ்லாம் மதத்தவர், வூஹன் வைரஸ் இந்திய அரசு NRC நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சிக்கு தண்டனை என செய்தி வெளியிட்ட மதகுரு, என பல்வேறு நபர்களின் செயல்களை முறையாக ஆவணப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
டில்லியில் தப்லிகி ஜமாத்தினர் கூட்டம் போட்டதால் கொரோனா வைரஸ் இந்தியாவில் எவ்வாறு பரவியுள்ளது என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் வெளியிட்டுள்ளார். தப்லிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் எத்தனை பேர் அந்த மென்பொருள் பொறியாளரைப் போன்ற ஒரே மனநிலை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று யூகிக்க முடியுமா? அவர்களில் எத்தனை பேர் உண்மையில் இத்தகைய எண்ணங்களை செயல்படுத்தி இருப்பார்கள்?
இந்த தப்லிகி ஜமாத் கூட்டம் 2020 மார்ச் 13-15 தேதிகளில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கம் ஆலோசனையை வழங்கியது. சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்த மக்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் சுவிசேஷம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் விசா விதிமுறைகளுக்கு எதிரானது. மேலும் இந்த நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று மத பிரச்சாரம் செய்துள்ளனர்.
இதில் மிகவும் கவலை கொள்ளவேண்டிய விஷயம், தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் அறிவிப்பு. அவர் கூற்று படி இந்த கொரோனா வைரஸ் தொற்று ஒரு சதி. மேலும் இஸ்லாமிய மதத்தவர் அரசின் இந்த தனிமைப்படுத்துதல் அல்லது ஊரடங்கு விதிகளை மீறுமாறும் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் இந்த அழைப்பை அடுத்து, இந்த ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் தமிழகத்திற்குத் திரும்பி வந்த பின், சுகாதார அதிகாரிகளின் தொற்றுநோயை பரிசோதிக்கும் முயற்சிகளை எதிர்த்தனர். மாரிதாஸ், தப்லிகி ஜமாத் இஸ்லாமியர்களின் இந்த பொறுப்பற்ற நடத்தையையும், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவ இவர்களின் பங்கு பற்றியும் அவரது வீடியோவில் விரிவாக விளக்கியுள்ளார்.
அவரின் இந்த நடவடிக்கையை கவுரவ பிரச்னையாக கருதிய நெல்லை மேலப்பாளைய ஜமாத்தை சேர்ந்தவர்கள் அவர் மீது பிரிவுகள்:
- 292-ஏ (பெரிதும் அநாகரீகமான அல்லது மிரட்டும் விதமான அச்சிடும் செயல்)
- 295-ஏ (திட்டமிட்ட மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகள் அல்லது எந்த ஒரு வகுப்பையும் அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் சீற்றம் கொள்ளும் நோக்கம் கொண்ட செயல்)
- 505(2) (இருவருக்கு இடையில் பகை, வெறுப்பு அல்லது தவறான விருப்பத்தை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல் போன்ற அறிக்கை)
- மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 பி இன் கீழ் சில வகுப்புகளில் திருநெல்வேலி மாவட்ட போலிஸில் மனு கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
(ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளூர் காவல்துறைக்கு எஃப்.ஐ.ஆர் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது.)
மேலப்பாளையம் கிராமத்தில் இனவாத பிரச்சனைகளின் நீண்ட வரலாறு உள்ளது. 1997, 1998, மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இந்து முன்னணி ஆர்வலர்கள் இங்கு கொலை செய்யப்பட்டுள்ளனர். எல்.கே. அத்வானி மீதான 1998 படுகொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்ட, அல்-உம்மா அமைப்பின் முன்னணி உறுப்பினரான கிச்சன் புஹாரி, மேலப்பாளையத்தை சேர்ந்தவர்.
2013 ஆம் ஆண்டு பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அதே மேலபாளையத்தைச் சேர்ந்த நபர்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு கூட, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே) போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள் கலவரம் மற்றும் வகுப்புவாத மோதல்களில் ஈடுபட்டனர். 2020 ஜனவரியில், மேளப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொல்ல தமிழ் மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலப்பாளையம் கிராமத்தின் இந்த கொடூரமான இனவாத வரலாறு மற்றும் மாரிதாஸ் மேலுள்ள இஸ்லாமியர்களின் விரோதத்தை கணக்கில் எடுக்கும்போது அவரின் உயிர் மீதுள்ள அச்சுறுத்தல் தெளிவாக தெரிகிறது. தமிழக அரசு விபரீதம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமா அல்லது இஸ்லாமிய அழுத்த தந்திரங்களுக்கு வீழுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Translated from OpIndia.com article FIR against Maridhas for criticizing Tablighi Jamaat for Coronavirus spread