narendra modi action plan

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்க அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது மோடி அரசாங்கம். பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்கவும் அவர்களது சொத்துக்களை இணைத்து பறிமுதல் செய்யவும் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சரவை Fugitive Economic Offenders Ordinance 2018 என்ற அவசர சட்டத்தை பிறப்பிக்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு குற்றவியல் வழக்குகளை தவிர்க்க நாட்டை விட்டு ஓடும் நீரவ் மோடி போன்ற ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்த அவசரச்சட்டம் முற்படுகிறது.

fugitive bill modi government

குற்றவியல் வழக்குகள் தங்கள் மீது தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை எதிர்பார்த்தும், அவ்வழக்குகள் நிலுவையில் உள்ள போதும் இந்திய நீதிமன்றங்களின் சட்ட அதிகார கட்டுப்பாட்டில் இருந்து பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிகழ்வுகள் இந்த அவசர சட்டத்தின் தேவையை அதிகரித்துள்ளது. 2 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடி போன்றவர்களிடம் இருந்து நாட்டிற்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் ஏற்படும் இழப்பை விரைவாக மீட்டெடுப்பதே இச்சட்டத்தின் குறிக்கோளாகும்.

இந்த சட்டத்தினால் தப்பியோடிய குற்றவாளிகள் வழக்குகளை சந்திக்க இந்தியாவிற்கு திரும்பி வரும் கட்டாயம் ஏற்படும். மேலும் வங்கிகளும் மற்ற நிதிநிறுவனங்களும் குற்றவாளிகளிடம் இருந்து கடனை விரைவில் வசூலித்து அந்த நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த சட்டம் உதவும்.

இந்த அவசர சட்டத்தின் ( Fugitive Economic Offenders Ordinance) கீழ் வழங்கப்பட்ட விதிகள்:

  1. ஒரு தனி நபரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்க சிறப்பு நீதிமன்றத்தின் முன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.
  2. தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்துக்கள் மற்றும் குற்றம் சார்ந்த வருவாயின் சொத்துக்களை இணைத்தல்.
  3. தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்குதல்.
  4. பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒரு நபரின் சொத்துக்கள் மற்றும் குற்றம் சார்ந்த வருவாயின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.
  5. சிவில் கோரிக்கைகளில் இருந்து பொருளாதார குற்றவாளிகள் தங்களை பாதுகாக்கும் உரிமையை நிராகரித்தால்.
  6. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை கையாண்டு அவற்றை விற்க நிர்வாகி ஒருவரை நியமித்தல்.

The Fugitive Economic Offenders Bill, 2018 என்ற மசோதா மார்ச் மாதம் 12 ஆம் தேதி மக்களைவியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனால் பல்வேறு பிரச்சனைகளால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. தேதி குறிப்பிடாது பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சரவை இந்த அவசர சட்டத்திற்கு நேற்று ஒப்போதல் அளித்த நிலையில் இன்று ஜனாதிபதியும் தனது ஒப்புதலை வழங்கி சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இதுவரை வெளிவந்த அறிக்கைகள் : “தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (Fugitive Economic Offender) என்பவர், குற்றம் சாட்டப்பட்டு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு குற்றவியல் வழக்கை தவிர்க்க நாட்டை விட்டு ஓடியவரோ அல்லது வெளிநாட்டில் இருந்து கொண்டு வழக்கை சந்திக்க இந்தியவிற்கு வர மறுப்பவர்” என்று தெரிவிக்கிறது. எவ்வாறாயினும், மோசடி, காசோலை மோசடி அல்லது 200 கோடி ரூபாய்க்கு மேல் கடன் மோசடி ஆகிய வழக்குகளே இந்த அவசரசட்டத்தின் கீழ் வருபவை.

வங்கி மோசடியிலோ கடன் மோசடியிலோ ஈடுபடுவோரை தடுத்து நிறுத்தி சட்டத்தில் இருந்து தப்ப முயலும் குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கத்தில் மோடி அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சி புரட்சிகரமான ஒன்று.

(நன்றி OPINDIA)


no fly list fugitive economic offendersபின் குறிப்பு:  நீரவ் மோடி ஊழல் வெளிவந்த சில வாரங்களிலேயே கடனை திரும்ப செலுத்தாமல் தப்பி ஓடும் தொழிலதிபர்களை தடுத்து நிறுத்த சட்ட வல்லுநர்கள், அரசாங்க அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு கடுமையான விதிகளை வரைவு படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதுவரை 91 நிறுவனங்களை சேர்ந்தவர்களை விமானத்தில் பயணிக்க தடை செய்து no -fly list என்று அழைக்கக்கூடிய பட்டியலில் சேர்த்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் மும்பை நீதிமன்றம் ஒன்று ஏர்செல் உரிமையாளரான மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனை இந்தியாவை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!


Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.